உடலிலிருந்த வெளி மற்றும் உள் காயங்கள் மட்டுமில்லாமல் ஊமைக் காயங்களும் சேர்ந்து தீபக்கை நிலை தடுமாறி விழச் செய்தது. அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, வெளியே அழைத்து வந்தனர் மஹதனுடைய ஆட்கள். "நேராகப் பார்த்து நட!" என்ற அதிகாரக் குரலில் திடுக்கிட்டுக் கீழே விழப் போனான் தீபக். அதற்கும் கொலைவெறியோடு முறைத்துக் கொண்டே, வெளியே கூட்டி வந்தனர். அவர்களைப் பரிதாபமாகப் பார்த்தான். "இது வரைக்கும் தான் உன்னைக் கொண்டு வந்து விடனுமாம். நிற்காமல் கிளம்பு, கிளம்பு!" என்ற அதட்டலில் சர்வமும் ஒடுங்கிப் போய் இருந்தவனுக்குத் துணையாக யாரும் கூட வரவில்லை. நொண்டி நடந்தவனைத் தோள் பற்றிக் கொண்டு, நடத்திப் போக ஆளில்லை. தனது சட்டைப் பாக்கெட்டில் அவர்கள் வைத்திருந்த செல்பேசியின் இருப்பு உணர்ந்து, அதை எடுத்து அன்னைக்குக் கால் செய்தான் தீபக். ஒரு திட்டில் உட்கார்ந்து கொண்டவன், தாய் மறுமுனையில் அழைப்பை ஏற்கும் வரை பொறுமையின்றி மூச்சு வாங்கினான். "ஹலோ! தீபக்" என்ற அலறல் காதில் ஏறியதும், "அம்மா" எனச் சேய் போல தேம்பி அழ ஆரம்பித்து விட்டான் அவரது மகன். "டேய்! உனக்கு என்னடா ...
Writer