சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு மருத்துவமனையை அடைந்தார்கள் அறிவொளி மற்றும் செந்தாழை. அங்கே செந்தாழையின் வயிற்றில் வளரும் கருவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்தார் மருத்துவர். அதற்குப் பிறகுக் கணவன், மனைவி இருவரிடமும்,”கருவோட வளர்ச்சி நல்லா, ஆரோக்கியமாக இருக்கு. இவங்க நல்லா ஒய்வு எடுத்தால் போதும். நான் சில மாத்திரைகள் எழுதி தர்றேன். அதை தவறாமல் சாப்பிடனும். அதே மாதிரி அடுத்து எப்போ பரிசோதனைக்கு வரனும்ன்றதையும் நான் சொல்லிட்றேன். அதுக்குக் கண்டிப்பாக வந்துடுங்க!”என்றவருக்கு, “ரொம்ப நன்றிங்க டாக்டரம்மா”என்று தங்களது முகங்கள் பிரகாசிக்க நன்றி தெரிவித்தார்கள் அறிவொளியும், செந்தாழையும். “பிரசவம் இங்கே பார்ப்பீங்களா? இல்லை…”என்று இழுக்கவும், உடனே முந்திக் கொண்டு,“இங்கே தான் பார்ப்போம் டாக்டர்! ஏன்னா, இந்த ஆஸ்பத்திரியில் தான் எல்லா வசதிகளும் இருக்கு”என்று அவரிடம் தீர்க்கமாகப் பதிலளித்து விட்டிருந்தாள் செந்தாழை. அதைக் கேட்டுத் திருப்தியாகி,”அப்போ சரி”என்று கூறி விட்டு அவர்களுக்கு மேலும் சில அறிவுரைகளை வழங்கி விட்டு அனுப்பி வைத்தார் மருத்துவர். அவரது அறைய...
Writer