"உன்னோட அப்ளிகேஷன் ஃபார்மில் இருந்து எடுத்தேன்" என்று அலட்டிக் கொள்ளாமல் கூறினான் மஹதன். "இது தப்புன்னு தெரியலையா சார்?" என்று அவனுக்குக் குறையாமல் கேட்டாள் மௌனா. அவள் வெளிப்படையாக இப்படி கேட்டதும், சிறிய அமைதிக்குப் பிறகு, "தப்பு தான் மௌனா! ஆனால் நான் உங்கிட்ட கேட்ட அப்போவே நீ பேச வந்திருக்கலாம் தான?" என்று அவளையே குற்றம் சொன்னான் மஹதன். "இது என்ன பேச்சு சார்? நான் ஏன் நீங்க கூப்பிட்ட உடனே வரனும்? மறுப்புத் தெரிவிச்சா, இப்படித் தான் அதிரடியாக, ஊரைக் கண்டுபிடிச்சு , வந்து முன்னாடி நிக்கிறதா?" என்று சலனம் இல்லாமல் கேட்டவளைப் பார்த்து, " நீ கேட்கிறது சரி தான். நான் உன்னைக் கட்டுப்படுத்தி என்கிட்ட பணிய வைக்க முயற்சி செய்யலை மௌனா. என்னோட காதலைச் சொன்னேன். இந்தக் கேள்வியை நீ கேட்டதுமே உனக்கு இதில் விருப்பம் இல்லைன்னு புரிஞ்சது" என்றான். "உங்க காதலைச் சொன்னது தப்பில்லை சார். ஆனால், என்னோட ப்ரைவசியில் ரொம்ப தலையிட்றீங்க! நான் இங்கே வந்ததே மனசுக்கு அமைதியைத் தேடித் தான்! ஆனால் உங்க கூட நான் பேசியே ஆகனும்னு, என்னைத் தேடி இங்கே வரைக்...
Writer