இதற்கு முந்தைய இரண்டு அத்தியாயங்களுக்குக் கொடுத்த அதே டிஸ்கிளைமர் தான் நண்பர்களே!!!🙏 அதைக் கவனித்து விட்டு அவரைக் கூர்மையான விழிகளால் துளைத்து எடுத்து,”என்னப்பா பதிலையே காணோம்?”என்று தந்தையிடம் கேட்டிருந்தான் திருவாதிரன். அதில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு,”ஆங்! அவங்களை இன்னும் கண்டுபிடிக்க முடியலை! நீயும் உன் பக்கத்தில் இருந்து விசாரிச்சுப் பாரு!”என அவனிடம் கூறவும், “ம்ஹ்ம். கண்டிப்பாக விசாரிச்சுப் பார்த்துட்றேன்ப்பா!”என்று அவருக்கு உறுதி அளித்தான் திருவாதிரன். இங்கே வீட்டிலோ செந்தாழைக்கு இருப்புக் கொள்ளவே இல்லை! அதேபோல் முன்பு மாதிரி அந்த வீட்டின் மூத்த மருமகள் என்றச் செருக்குடன் நடமாடவும் முடியவில்லை அவளால்! ஏனெனில் அந்த அளவிற்கு அவளை மசக்கைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தது. அதேபோல் அவளது கணவனா அறிவொளியும் அவளிடம் அனுசரணையாகத் தான் நடந்து கொற்கிறான், அவளை விட்டு இங்குமங்கும் விலகாமல் அவளைத் தன் கண்ணுக்குள் வைத்துக் காத்துக் கொண்டு இருக்கிறான் தான்! ஆனாலும் கூட அவளது மனம் தனது தாயின் இருப்பைத் தேடியது எனலாம்! அவர் இந்நேரம் உயிருட...
Writer