இதற்கு முந்தைய இரண்டு அத்தியாயங்களுக்குக் கொடுத்த அதே டிஸ்கிளைமர் தான் நண்பர்களே!!!🙏
அதைக் கவனித்து விட்டு அவரைக் கூர்மையான விழிகளால் துளைத்து எடுத்து,”என்னப்பா பதிலையே காணோம்?”என்று தந்தையிடம் கேட்டிருந்தான் திருவாதிரன்.
அதில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு,”ஆங்! அவங்களை இன்னும் கண்டுபிடிக்க முடியலை! நீயும் உன் பக்கத்தில் இருந்து விசாரிச்சுப் பாரு!”என அவனிடம் கூறவும்,
“ம்ஹ்ம். கண்டிப்பாக விசாரிச்சுப் பார்த்துட்றேன்ப்பா!”என்று அவருக்கு உறுதி அளித்தான் திருவாதிரன்.
இங்கே வீட்டிலோ செந்தாழைக்கு இருப்புக் கொள்ளவே இல்லை!
அதேபோல் முன்பு மாதிரி அந்த வீட்டின் மூத்த மருமகள் என்றச் செருக்குடன் நடமாடவும் முடியவில்லை அவளால்!
ஏனெனில் அந்த அளவிற்கு அவளை மசக்கைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தது.
அதேபோல் அவளது கணவனா அறிவொளியும் அவளிடம் அனுசரணையாகத் தான் நடந்து கொற்கிறான், அவளை விட்டு இங்குமங்கும் விலகாமல் அவளைத் தன் கண்ணுக்குள் வைத்துக் காத்துக் கொண்டு இருக்கிறான் தான்!
ஆனாலும் கூட அவளது மனம் தனது தாயின் இருப்பைத் தேடியது எனலாம்!
அவர் இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால் தனக்குப் பலமாக இருந்து இருக்கும் என்று நினைத்து அவரது இழப்பை எண்ணி முதல்முறையாக மனப்பூர்வமாக வருந்திக் கண்ணீர் சிந்தினாள் செந்தாழை.
அதைக் கண்டு கொண்டுப் பதட்டம் மேலிட,”ஏய்! என்னாச்சும்மா? ஏன் இப்படி அழுதுட்டு இருக்கிற? வயித்துல என்னமும் பண்ணுதா? சொல்லுத்தா?”என அவளிடம் பதைபதைப்புடன் வினவினான் அறிவொளி.
அவனது அந்த அக்கறையான கேள்விகள் தனது மனதிற்கு இதமளித்ததால் கண்களைத் துடைத்துக் கொண்டு, அவனது தோளில் சாய்ந்து,”எனக்கு எங்க ஆத்தாவோட ஞாபகம் வந்துடுச்சு மாமா!”என்று அவனுக்கு விம்மலுடன் பதிலளிக்க,
அதைக் கேட்டவுடன் தனது முகத்தை இளக்கமாக வைத்துக் கொண்டு, அவளது தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்டே,”ம்ஹ்ம். இந்த மாதிரி நேரத்தில் பொண்ணுங்க அவங்கத் தாயைத் தான் ரொம்பத் தேடுவாங்கன்னுக் கேள்விப்பட்டு இருக்கேன்த்தா. என்னால் அத்தையைத் திரும்ப உயிரோட கொண்டு வர முடியாது! ஆனால் அவங்க கிட்ட நீ எதையெல்லாம் ஆசைப்பட்டுக் கேட்கனும், பேசனும்னு நினைச்சுட்டு இருக்கியோ, அதையெல்லாம் எங்கிட்டே பகிர்ந்துக்கோ செந்தா! உனக்கு ஏதாவது வேணும்னாலும் தயங்காமல் கேளு ஆத்தா”என்று அவளிடம் மிருதுவான குரலில் தெரிவிக்கவும்,
“ம்ஹ்ம். சரிங்க”என்றவளது முகம் இன்னும் தெளிவில்லாமல் காணப்பட,
“நான் வேணும்னா உங்க அக்கா கிட்டே நாளையில் இருந்து உன் கூடக் கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லிக் கேட்டுப் பார்க்கவா ஆத்தா?”எனக் கேட்டிருந்தான் அறிவொளி.
அதைப் பற்றிய யோசனையில் இறங்கியவளோ,
சில நிமிடங்களில் கழிந்ததுமே ஒரு முடிவிற்கு வந்து விட்டு,”இதுவும் நல்ல யோசனையாகத் தான் இருக்கு மாமா. ஆனால் என் அக்கா இதுக்கு ஒத்துக்குவாளான்னு எனக்குத் தெரியலையே!”என்று அவனிடம் தவிப்பாக மொழிந்தாள் செந்தாழை.
“அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்ம்மா. உனக்கு இதில் சம்மதம் தானே?”என்க,
“எனக்கு இதில் முழு சம்மதம் தான் மாமா. எனக்கு அக்காவையும் ரொம்பத் தேடுது தான்! ஆனால், இதுக்கு முன்னாடி வரைக்கும் நான் அவளை ஒரு மனுஷியாக கூட மதிச்சது இல்லை! இப்போ அவளை ரொம்பவே தேட்றேன்! எங்க ஆத்தாவோட இடத்தை அவளால் தான் கண்டிப்பாக நிரப்ப முடியும்ன்னுத் தோணுது மாமா! அதனால் அவ என் கூடப் பேசிச், சிரிக்கனும்னு எனக்கு ரொம்பவே ஆசையாக இருக்கு”எனத் தன் தமக்கையின் அருமையை உணர்ந்தவளாகத் தொண்டைக் கமறக் கூறி முடித்திருக்க,
“செந்தாம்மா! நீ எதுக்கு இவ்வளவு கவலைப்பட்ற? விஷயத்தை எங்கிட்டே சொல்லிட்டேல்ல? உங்க அக்கா கிட்டே பேச வேண்டியது என்னோட பொறுப்பு!”என்று மனைவிக்கு வாக்களிக்க,
அவனது நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் கேட்டதும் தனக்குத் தெம்பு வந்து விட்டிருந்ததை உணர்ந்து அவனது கன்னத்தில் தனது இதழைப் பதிக்கவும், தானும் அவளுக்கு முத்தமொன்றைக் கொடுத்தான் அறிவொளி.
அன்றைய இரவு உறங்குவதற்கு முன்னர்,”இன்னைக்கு நம்மக் காட்டில் வேலை பார்க்கிற சாமந்தியும், வாடாமல்லியும் என்னைப் பார்த்துப் பேசினாங்க! ஆனால் நல்லவேளையாக அந்தச் சமயத்தில் உங்கப்பா அங்கே வரலை!”என்றவளோ,
அவர்கள் இருவரும் தன்னிடம் கூறியவற்றை எல்லாம் தனது கணவனிடம் ஒப்புவித்து முடித்திருந்தாள் பூவிழி.
அதைக் கேட்டதுமே,”ஆனால் அவங்க ரெண்டு பேரும் இதை உங்கிட்டே எதுக்குச் சொல்லனும்? என்னை நேரடியாகப் பார்த்துச் சொல்லி இருக்கலாமே?”என்று அவளிடம் கேட்டான் திருவாதிரன்.
அதற்கு அவளோ,”நீங்க தான் முதல் முறையாக நம்மக் காட்டில் வேலை செய்ற எல்லார் கிட்டேயும் அவங்களுக்கு ஏதாவது பிராதோ, அவங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் ஏதாவது நடந்து இருந்தாலோ அதை எங்கிட்டே வந்து சொல்லுங்கன்னு சொல்லி நம்பிக்கைக் கொடுத்து இருக்கீங்க! ஆனாலும் தங்களுக்கு நடந்த அநியாயங்களை எல்லாம் உங்க கிட்டே சொல்லலாமா? வேண்டாமான்னு? அவங்களுக்குள்ளே ஒரு தயக்கம் இருந்து இருக்கு. அதனால் தான் அதையெல்லாம் நேரடியாக உங்க கிட்டே வந்து சொல்லாமல் அவங்க கூடச் சேர்ந்து சக ஊழியையாக வேலை செஞ்சிட்டு இருந்த என்னை வந்து முதலில் பார்த்துப் பேசி இருக்காங்க!”என அவனுக்கு விளக்கம் அளிக்கவும்,
“ஆமால்ல? நான் நம்மக் காட்டில் பொறுப்பு எடுத்த நாளிலிருந்து இங்கே நம்மளை மீறி என்ன நடக்கப் போகுதுன்னு ரொம்பவே அலட்சியமாக இருந்துட்டேன்! அதுவும் இல்லாமல் அங்கே வேலை பார்க்கிற எல்லாருமே அப்பாவோட காலத்தில் இருந்தே இருக்காங்க. அதனால் அவங்களே பார்த்துப்பாங்கன்னும் விட்டுட்டேன்! அதே மாதிரி அப்பா, அண்ணனோட பொறுப்பில் நம்மக் காட்டு வேலைகள் நடந்துட்டு இருக்கும் போது எதுவும் பிராது வரலை. நம்மகிட்டே பொறுப்பு வந்ததுக்கு அப்பறமாக நடக்கப் போகுதுன்னும் மெத்தனமாக இருந்துட்டேன் விழி! அது தான் நான் செஞ்சப் பெரியத் தப்புன்னு இப்போ புரியுது!”என்றான் வருத்தமாக.
“இப்போ புரிஞ்சிக்கிட்டீங்கள்ல? இனிமேல் இதெல்லாம் நடக்காமல் பார்த்துக்கோங்க!”என்றவளோ,
ஏதோ நினைவு வந்தவளாக,”ஆமா, காட்டில் நடக்கிற எதுவும் தெரியாதுன்னுச் சொல்றீங்களே! அப்பறம் எப்படி எந்தங்கச்சி, உங்கண்ணனோட விஷயத்தைக் கண்டுபிடிச்சீங்க?”என்று அவனிடம் ஆர்வமாக வினவினாள் பூவிழி.
“அதுவா? எங்க வீட்டு ஆளுங்களுக்கு யாராலும், எந்த ஆபத்தும் வந்துடக் கூடாது, அதே சமயம் எங்கண்ணனுக்கு அவ்வளவாக பொறுப்பு இல்லைன்னு எங்கம்மா சொன்னதாலேயும் எங்களைச் சுத்தி ஒரு பாதுகாப்பு வளையம் போட்டு வச்சிருக்கேன்! அந்தப் பாதுகாப்பு வளையம் தான் அந்த அஞ்சு பேரு! அவங்க என்னோட விசுவாசிங்க! எனக்காக எது வேணும்னாலும் செய்வாங்க! அப்படி அவங்க எங்க அண்ணனைக் கண்காணிச்சுட்டு இருக்கும் போது தான் அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு எங்கிட்ட வந்து சொன்னாங்க! அதைக் கேட்டதும் அவரோட கல்யாணத்தை இப்படி திருட்டுத்தனமாக நடத்துனது மட்டும் இல்லாமல் உன் தங்கச்சியைக் கர்ப்பமாக வேற ஆக்கிட்டாரேன்னு எனக்கு எங்கண்ணன் மேலே ரொம்பவே கோபமும், வருத்தமும் வந்துச்சு! ஏன்னா, இதனால் அவருக்கு மட்டுமில்லாமல் உந்தங்கச்சிக்கும் நம்ம ரெண்டு வீட்டுக்கும் அசிங்கம் தானே? அதே மாதிரி காதலிக்கத் தைரியம் இருக்கிறவனுக்கு அந்தப் பொண்ணை ஊரறிய வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து எங்க எல்லார்கிட்டேயும் அறிமுகம் செஞ்சி வச்சு இருக்கனும் தானே? அதைச் செய்யாமல் எல்லாத்தையும் ரகசியமாகப் பண்ணிக்கிட்டதால் இரண்டு பேரோட பேரும் கெட்டுப் போச்சுப் பாரு! அதை தான் என்னால் ஏத்துக்கவே முடியலை! இனிமேலும் நம்ம ரெண்டு குடும்பங்களும் அசிங்கப்படக் கூடாதுன்னு தான் நான் அப்படியெல்லாம் அதிரடியாக நடந்துக்கிட்டேன்!”என்று தன்னிலை விளக்கத்தைக் கொடுத்து முடித்தான் திருவாதிரன்.
அதைக் கேட்டவுடன் ஒரு நிம்மதிப் பெருமூச்சை வெளியிட்டுக் கொண்டு,”அப்படின்னா நான் இன்னைக்கு உங்ககிட்ட அதிரடியாக நடந்துக்கப் போறேன்!”எனக் குறும்புடன் கூறி விட்டுத்,
தனது கணவன் எதிர்பார்க்காத வண்ணம் அவனைத் தன்னுடன் சேர்த்துப் படுக்கையில் விழச் செய்திருந்தாள் பூவிழி.
அதில் தன் மனைவியைத் திடுக்கிட்டுப் பார்ப்பதற்குப் பதிலாக, அவளைக் கண்களில் ரசனை மற்றும் பளபளப்பை வெளிப்படுத்தினான் திருவாதிரன்.
தனது கைகளாலேயே அவனது உடைகளைக் களைந்தவளை மெச்சும் பார்வைப் பார்த்து விட்டு,
“எனக்கு வேலை மிச்சம்!”எனக் குறும்பாக கூறியதுமே,
அவனது மார்பிலேயே தனது தலையை அழுத்திக் கொண்டவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.
அதில் அவளிடம்,”ஏன் நிறுத்திட்டே விழி? உனக்குப் பிடிக்கலையா? சரி. நாம இன்னொரு நாள் பார்த்துக்கலாம்”என விழிகளில் கள்ளத்தனத்தையும், குரலைப் பாவமாகவும் வைத்துக் கொண்டு அவளிடம் மொழிந்தான் திருவாதிரன்.
அதைக் கேட்டவுடனேயே அவனை நிமிர்ந்து பார்த்து,”நான் அப்படி சொன்னேனாங்க?”என்றிருந்தாள் பூவிழி.
“நீ சொல்லலை தான். ஆனால் ஏன் செஞ்சிட்டு இருந்த வேலையைப் பாதியிலேயே நிறுத்துன?”என விஷமமாக கேட்க,
“ப்ச்! நீங்க எங்கிட்ட பேசப், பேச எனக்கு வெட்கம் வந்துடுச்சுங்க! அதான்”என்று அவனுக்குப் பதிலளித்தாள்.
“ஓஹோ! அப்படின்னா, நீ நிறுத்துனதை நான் ஆரம்பிக்கவா?”என்று அவளிடம் வினவினான் திருவாதிரன்.
“ம்ஹூம். வேண்டாமுங்க. நானே அதை மறுபடியும் ஆரம்பிக்கிறேன்”என்றவளோ தனது கரங்களை மீண்டும் கணவனின் உடையில் கையை வைத்து அதை முழுவதுமாக களைந்து விட்டிருந்தாள் பூவிழி.
அதேபோல் தனது கரங்களை அவளது உடலில் இருந்த உடைகளுக்கு விடுதலை அளித்து விடவும்,
உடனே தங்கள் இருவரையும் போர்வையால் போர்த்திக் கொண்டுத் திருவாதிரனின் மீசையைத் தனது நாசியைக் கொண்டு வருடி விட்டாள் பூவிழி.
அதன் காரணமாக அவனுக்குள் எழுந்த ரசாயன மாற்றங்களால் அவளது இடையை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
சில நிமிடங்களுக்குப் பிறகு அவனது மீசையை விடுவித்து விட்டு அவனுடைய முரட்டு இதழ்களைத் தன் வசமாக்கிக் கொண்டு விட்டாள் பூவிழி.
உடனே தனது கரத்தை அவளது இடையின் பக்கவாட்டில் நெளிய விடத் தொடங்கினான் திருவாதிரன்.
அதில் தானும் அவனது அதரங்களில் இருந்த இதழ்களை அவனது காது மடல்களுக்குக் கொண்டு சென்று அதில் முத்தங்களை வாரி வழங்கவும்,
“விழி!”என்று மனைவியின் பெயரை இடைவிடாமல் உச்சரித்தான் திருவாதிரன்.
அதற்குப் பிறகுத் தனது செய்கைகளால் எழுந்த நாணத்தை மறைக்கும் வகையில் அவனிடமிருந்து விலகிப் பக்கத்தில் முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள் பூவிழி.
உடனே அவளது ஆடைகளற்ற முதுகில் முத்த அச்சாரங்களைப் பதிக்க ஆரம்பித்து விடவும்,
அதில் அவளோ தன்னிலையை மொத்தமாக இழந்து விட்டவளோ,
தங்களது தாம்பத்தியத்தின் உச்சத்தை அடைந்த நேரத்தில் கணவனின் முதுகைத் தனது கரங்களால் இறுகப் பற்றிக் கொண்டாள் பெண்ணவள்.
அதற்குப் பிறகுத், தாங்கள் இருவரும் தங்களை ஒருவருக்கு, ஒருவர் மொத்தமாக அர்ப்பணித்து விட்டத் திருப்தியிலும், மகிழ்ச்சியிலும் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு உறங்கிப் போயினர் திருவாதிரன் மற்றும் பூவிழி.
- தொடரும்
My Facebook Page link 🔗 My Facebook page
My Facebook group link 🔗 Facebook group

கருத்துகள்
கருத்துரையிடுக