முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே! - 1

 டிஸ்கிளைமர் : ஆன்ட்டி ஹீரோ கதை



“நான் என்ன ஆனாலும் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் செந்தா!”என்று அவளது தலையிலடித்துச் சத்தியம் செய்து கொடுத்திருந்தான் அறிவொளி. 

“எனக்கு உங்க மேலே கொள்ளை நம்பிக்கை இருக்குத் தானுங்க! ஆனால் உங்கக் குடும்பத்தை நினைச்சா தான் பயமாக இருக்கு! என்னை அவங்க எப்படி ஏத்துப்பாங்கன்னு நெஞ்செல்லாம் திக்குத் திக்குன்னு அடிச்சுக்குது!”என்று அவனது தோளில் சாய்ந்தவாறே நடுக்கத்துடன் உரைத்தாள் செந்தாழை.

“நீ எதுக்கு அதையெல்லாம் நினைச்சுக் கவலைப்பட்ற? அது தான், நான் இருக்கேன்ல? நான் எங்க வீட்டாளுங்க எல்லார் கிட்டேயும் பேசி நம்மக் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறேன் புள்ளை! அதுவரைக்கும் பொறுமையாக இரு!”என்று கூறி அவளைச் சமாதானப்படுத்த முயன்றவனிடம், 

“நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் பொறுமையாக இருப்பேனுங்க! ஆனால் என் வயித்துல வளர்ந்துட்டு இருக்குற நம்மப் புள்ளப் பொறுமையாக இருக்க மாட்டானே!”என்றவளை உச்சபட்ச அதிர்ச்சியுடன் விழிகள் பிதுங்கிப் போய் நோக்கி, 

“நீ என்னடி சொல்றவ? நெசந்தானா?”எனக் கேட்டிருந்தான் அறிவொளி. 

“ஆமாம் பின்னே! இந்த விஷயத்தில் யாராவது பொய் சொல்லுவாகளா மாமா?”என்று அவனைப் பரிதாபமாக ஏறிட்டாள் செந்தாழை. 

அதைக் கேட்டுத் தலை சுற்றிப் போய் விட்டது அறிவொளிக்கு! 

அவர்கள் இருவரும் மனதாரக் காதலித்துக் கொண்டு இருக்கிறார்கள் தான்! 

அதுவும், தான் ஒரு உயர்குடியில் பிறந்த ஆண்மகன் என்றாலும் கூட அவன் செந்தாழையை உண்மையாகவே காதலிக்கிறான் தான்! 

ஆனாலும், தங்கள் இருவருக்கும் முறையாகத் திருமணம் நடப்பதற்கு முன்னர் இவள் இப்படி கர்ப்பம் தரித்து இருக்கிறாள் என்றச் செய்தியைக் கேட்டதுமே அவனுக்குக் குலை நடுங்கிப் போயிற்று. 

இதை தன்னுடைய குடும்பத்திடம் எவ்வாறு எடுத்துரைக்கப் போகிறோம்? என்ற வழி தெரியாமல் இவளைக் கை விடும் எண்ணமும் துளியும் இல்லாமல் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைக்கு ஆளாகி விட்டிருந்தான் அறிவொளி. 

அவனது அமைதியைக் கண்டுப் பதட்டம் அடைந்து,”ஏனுங்க மாமா? என்ன ஆச்சு? ஏன் எதுவுமே பேச மாட்டேங்குறீங்க?”என்று அவனை உலுக்கினாள் செந்தாழை. 

அதில் தனது யோசனையில் இருந்து தெளிந்து,”நீ திடுதிப்புன்னு இப்படி சொல்லவும் ஒரு மாதிரி படபடப்பு வந்துடுச்சு செந்தா! அதனால் தான் என்னால் எதுவும் பேச முடியாமல் வாயடைச்சுப் போயிட்டேன்!”என்றவுடன், 

“பின்னே! நீங்க இருந்த வேகத்துக்கு இப்போ நான் கர்ப்பம் ஆகாமல் இருந்தால் தான் ஆச்சரியம்!”என்றவளைத் தர்ம சங்கடத்துடன் பார்த்து, 

“செந்தா! நான் ஒன்னு சொல்றேன்! இப்போ நமக்கு இது வேண்டாம்!”என்று அவளிடம் எடுத்துக் கூற முயன்றான் அறிவொளி. 

அதைக் கேட்டதுமே தனது கண்களில் கனலைக் கக்கிக் கொண்டு,”ஏன் வேண்டாம்ன்றீங்க? நமக்குத்தேன் எப்பவோ கல்யாணம் நடந்துடுச்சே! அப்பறம் என்ன? கல்யாணத்துக்கு அப்பறம் குழந்தை வர்றதுங்கிறது எல்லாம் உலகத்தில் நடக்கிறது தானே? நமக்கு மட்டும் என்னவோ புதுசாக நடக்கிற மாதிரியில்லைப் பேசுறீய!”என அவனிடம் பொரிந்து தள்ளினாள் செந்தாழை. 

அதில் அவனுக்கு இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்து விட்டது!

ஆம்! 

அவர்கள் இருவருக்கும் எப்போதோ யாருக்கும் தெரியாமல் திருமணம் நடந்து விட்டிருந்தது!

அதற்குக் காரணமும் அறிவொளி தான்! 

ஏனெனில் தங்களது காதல் விஷயம் தங்களது குடும்பங்களுக்குத் தெரிய வந்தால் அவர்கள் கண்டிப்பாக அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று இவ்விருவருக்குமே நன்றாகத் தெரியும்! 

ஆதலால் தான், தாங்கள் காதல் செய்து கொண்டிருந்த ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த இடத்திலேயே செந்தாழையின் கழுத்தில் யாருக்கும் தெரியாமல் தாலியைக் கட்டி அவளைத் தனது மனைவியாக ஏற்றுக் கொண்டான் அறிவொளி. 

அதற்குப் பிறகுத் தான் அவர்கள் இருவரும் ஓருடல் ஈருயிராக கலந்து விட்டிருக்க, அதற்குச் சாட்சியாக இப்போது செந்தாழையின் வயிற்றில் குழந்தை உருவாகி இருந்தது.

ஆனால் அவளுடனான திருமணத்தை மட்டும் தைரியத்துடன் நடத்தி விட்டவனோ, இப்போது கர்ப்பம் என்றதும் தயங்குகிறான்! 

அது மட்டுமின்றி, அறிவொளியும், செந்தாழையும் ஒரே குலம், கோத்திரம் கிடையாது! 

அறிவொளி மிகவும் உயர்குடியில் பிறந்த அதுவும் மூத்த ஆண் வாரிசு ஆவான்! 

அவனது குடும்பம் தான் இந்தச் சுத்துப்பட்டுக் கிராமத்தையே ஆண்டு கொண்டிருக்கிறது எனலாம்! 

அதேபோல், அவனது வீட்டில் அவன் மூத்த வாரிசாக இருந்தாலும் கூட அவனுக்கு அவ்வளவாக மதிப்பு, மரியாதை கிடையாது.

அவனது இல்லம் தொடர்பான முடிவுகளை எடுப்பது அவனது இளைய சகோதரன் தான்!

அவர்கள் பெற்றோர் கூட அவர்கள் இளைய மகனிடம் எப்போதும் பய, பக்தியுடன் தான் நடந்து கொள்வார்கள். 

 அவர்களைப் போலவே, தன் இளவலைப் பார்த்தால் மரியாதை வந்து விடும் அறிவொளிக்கு! 

அவனது சொல்லுக்கு மறுமொழி கூறவே மாட்டான்!

அதேபோல் தனது தம்பிக்குத் தங்கள் வீட்டிலும், இந்த ஊராட்சி முழுவதிலும் கிடைத்திருக்கும் இந்த முதல் மரியாதைகளைக் கண்டு எப்போதும் பொறாமைப்பட்டது இல்லை அறிவொளி! 

“ஏனுங்க! அப்படி என்னத்த தான் யோசிச்சிட்டு இருக்கீங்க?”என்று அவனது தோளில் இடித்தாள் செந்தாழை. 

“அது வந்து… நான் சொன்னதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருடி செந்தா!”என்று அவளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான் அறிவொளி. 

“ம்ஹூம்! என்னால் அது முடியாதுங்க! இது நம்மளோட முதல் வாரிசு! இந்தக் குழந்தையைப் போய்க் கலைக்கச் சொல்றீங்களே? நாம என்னக் கல்யாணம் கட்டிக்காமல், முறை தவறியாக குழந்தைப் பெத்துக்கப் போறோம்? நமக்குக் கல்யாணம் ஆயிடுச்சு தானே? அப்பறம் எதுக்குக் குழந்தையைக் கலைக்கனும்?”என அவனிடம் பொரிந்து தள்ளினாள் செந்தாழை.

“ப்ச்! நம்மக் கல்யாணத்தைப் பத்தி இவ்வளவு பேசுறியே? அது இது வரைக்கும் நம்மளோட ரெண்டு வீட்டுக்கும் தெரியாது தானே? அதே மாதிரி என்னோட வீட்டைப் பத்தி மட்டும் இல்லை! உன்னோட வீட்டைப் பத்தியும் நினைச்சுப் பார்த்தியா? இந்த விஷயம் தெரிய வந்தால் உங்கம்மாவும், தங்கச்சியும் என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சியா? அவங்களால் இதை தாங்கிக்க முடியுமா? இத்தனைக்கும் அவங்க எங்க வீட்டுக் காட்டில் தான் வேலைப் பார்த்துட்டு இருக்காங்க! அப்படி இருக்கும் போது நீ என்னைக் கல்யாணம் செஞ்சிட்டு, இப்போ கர்ப்பமாக இருக்கிறதும் தெரிஞ்சா அவங்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியைக் கொடுக்கும்னுக் கொஞ்சமாச்சும் நினைச்சுப் பாரு!”என்று அவளை மூளைச் சலவை செய்யலானான் அறிவொளி. 

என்ன தான் அவளை ஏமாற்றிக் கை விடும் எண்ணம் அவனுக்கு இல்லை என்றாலும் கூட அவனுக்குத் தனது தம்பி மேலிருந்து பயம் மற்றும் மரியாதையின் காரணமாக இந்த விஷயத்தை அனைவரிடமும் வெளிப்படுத்தப் பயமும், சங்கடமும் இருந்தது. 

அதனாலேயே இதைக் கொஞ்ச நாட்களுக்கு ஆறப் போட முடிவெடுத்திருந்தான் அறிவொளி.

அவன் கூறிய விஷயங்களை எல்லாம் மனதில் உருப் போட்டுக் கொண்டு அவனுடன் தானும் சேர்ந்து இந்த விஷயத்தை அனைவரிடத்திலும் இருந்து மறைத்து வைக்க முடிவெடுத்து விட்டு, 

“சரிங்க! நானும் நீங்க சொன்னதுக்கு ஒப்புக்கிறேன்! இந்தக் குழந்தையைக் கலைச்சிடலாம். ஆனால் எப்படி?”என்று அவனிடம் கவலையுடன் மொழிந்தாள் செந்தாழை. 

“ஹப்பாடா! இப்போ தான் நீ சரியான முடிவெடுத்து இருக்கிற! நீ எதுக்கும் கவலைப்படாதே! இந்தக் குழந்தையைக் கலைக்கிற விஷயத்தைப் பத்தி நான் மருத்துவச்சியைப் பார்த்துப் பேசி மருந்து வாங்கிட்டு வர்றேன்! அதை நீ எடுத்துக்கிட்டா மட்டும் போதும்!”என்றுரைக்க, 

“ம்ஹ்ம்”என்றவளை, மேலும் சில வார்த்தைகளைக் கூறிச் சமாதானம் செய்து வைத்து விட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்து தனது இல்லத்திற்குச் சென்று விட்டான் அறிவொளி. 

வீட்டிற்குள் நுழைந்ததுமே,”ம்மோவ்! சோறு போடும்மா!”என்று சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கொண்டுத் தன் அன்னையை அழைக்க, 

“இருடா! வர்றேன்!”என்று அங்கே வந்து அவனுக்குத் தட்டு வைத்து அதில் உணவு வகைகளைப் பரிமாறினார் ராஜகுமாரி. 

“ஈரலும், இரத்தமும் இல்லையாம்மா?”என்று அவரிடம் கேட்டுக் கொண்டே அந்த உணவை ருசித்து உண்ணத் தொடங்கினான் அறிவொளி. 

அதற்கு அவர் பதில் சொல்வதற்குள்,“அப்படியே மூளை இருந்தால் கொஞ்சம் வைங்கம்மா!”என்றுரைத்துக் கொண்டே அந்த மேசையில் தனக்கு மட்டுமே பிரத்தியேகமாகப் போடப்பட்டிருந்த அந்தப் பெரிய அலங்காரம் செய்யப்பட்ட நாற்காலியில் அமர்ந்து தனது மீசையை முறுக்கி விட்டுத் தமையனைக் கூர்மையானப் பார்வையுடன் நோக்கினான் திருவாதிரன். 

அதில், தான் உணவுண்பதை நிறுத்தி விட்டுத் தன் எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே தன்னுடைய தம்பியை ஏறிட்டுப் பார்க்க, 

அவனோ எதுவுமே பேசாமல் அவனை அழுத்தமானப் பார்வையால் துளைத்து எடுத்தான். 

தனது இளைய மகனின் திடீர் விஜயமும், அவன் பேசிய வார்த்தைகளையும், அதில் தனது மூத்த மகன் தடுமாறிப் போய் அமர்ந்து இருப்பதைக் கண்டு,”வாய்யா திரு! நீயும் சாப்பிட்றியா? சோறு போடவா?”என்று அவனிடம் இயல்பாகப் பேச முயன்றார் ராஜகுமாரி.

“வேண்டாம்மா! நான் சாப்பிடத் தாமதமாகும்”என்று அவரிடம் மொழிந்து விட்டு, 

“அப்பறம் அண்ணா, எத்தனாவது மாசம் வளைகாப்புச் சோறு போடப் போறதா உத்தேசம்?”என்று தன் தமையனிடம் தடாலடியாக வினவி இருந்தான் திருவாதிரன். 

அதைக் கேட்டதும் வாயிலிருந்து உணவுத் தொண்டையில் சிக்கிக் கொள்ள பெருங்குரலெடுத்து விக்கத் தொடங்கி விட்டிருந்தான் அறிவொளி.

அதில் பதறிப் போய்,”டேய்! என்னடா ஆச்சு? முதல்ல தண்ணியைக் குடி!”என்று அவனிடம் தண்ணீர்ச் செம்பைக் கொடுத்துக் குடிக்க வைத்து விட்டு,

“நீ ஏன்ப்பா திடீர்னு சம்பந்தமே இல்லாமல் வளைகாப்புன்னுப் பேசிட்டு இருக்கிற?”என்று இளைய மகனிடம் கலக்கத்துடன் கேட்டார் ராஜகுமாரி. 

“நான் பேசினது எல்லாமே நாம சம்பந்தப்பட்டது தான்ம்மா! அதுவும் உங்க மூத்தப் புள்ளைச் சம்பந்தப்பட்ட விஷயம் தான்! உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இல்லைன்னா அண்ணன் கிட்டேயே கேட்டுப் பாருங்க!”என அவரிடம் கூறி விட்டு அறிவொளியைப் பார்த்தான் திருவாதிரன். 

அவனுக்குத், தான் மறைத்த விஷயம் தெரிந்து விட்டது என்பதை அவன் வாயிலாகவே அறிந்து கொண்ட அறிவொளிக்கு உடலெங்கும் நடுக்கம் பரவியது.

தனது தம்பியை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூடப் பேச முடியாத தன்னால் எப்படி இவ்வளவு பெரிய விஷயத்தை எடுத்துரைத்துப் புரிய வைக்க முடியும்? என்று தவித்துப் போய் விட்டான். 

“அறிவு! உன் தம்பி என்னடா சொல்றான்? எனக்குத் தலையே சுத்துது!”என்று நொடிந்து போய் விட்டார் ராஜகுமாரி. 

“அம்மா! அது வந்து…”என்றவனை இடைமறித்து, 

“நீ இனிமேல் எதுவும் சொல்லத் தேவையில்லைண்ணா! நான் ஒரு அரை மணி நேரத்துக்கு அப்பறம் வீட்டுக்கு வந்து உங்க எல்லாருக்கும் எல்லாத்தையும் தெளிவுபடுத்துறேன்!”என்றுரைத்து விட்டு வீட்டிலிருந்து வெளியேறினான் திருவாதிரன். 

அவன் சென்றதுமே குளிர்க் காய்ச்சலில் நடுங்கத் தொடங்கி விட்டான் அறிவொளி. 

“என்னடா உன் தம்பி ஏதேதோ சொல்லிட்டுப் போறான்? என்னப் பண்ணித் தொலைச்ச? ஏதோ வளைகாப்புன்னுப் பேசுதான்! என்னன்னுச் சொல்லுடா? பொண்ணு விஷயத்தில் எதுவும் மாட்டிக்கிட்டியா?”என்று அவனைக் கேள்வியால் துளைத்து எடுத்து விட்டார் ராஜகுமாரி. 

                
                               - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...