முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 24

  "அப்பா! நான் கிஷானோட வீட்டுக்குப் போய், அத்தை, மாமாவைப் பார்த்துட்டு வர்றேன்" என்று தந்தையிடம் உத்தரவு கேட்டு நின்றாள் முக்தா. "சரி‌ முகி. நானும் மூர்த்தி கூட கல்யாண வேலையைப் பாக்குறேன்" என்று மகளை அனுப்பி விட்டு, நண்பனுடன் சென்று விட்டார் நீலகண்டன். இன்னும் பல முக்கியமான ஆட்களை முறைப்படியாகப், பத்திரிக்கையைக் கொடுத்து, அழைத்து விட்டால் போதும் என்ற எண்ணத்துடன் திருமூர்த்தியும், நீலகண்டனும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டனர். மஹதனும், கிஷானுடன் சேர்ந்து, தன் சகாக்களுக்குப் பத்திரிக்கை வைத்து விட்டான். அந்த வேலையை முடித்தப் பின்னர் தான், முக்தாவைத் தன்‌ வீட்டிற்கு அழைத்திருக்கிறான் கிஷான். "முகி" என்ற வரவேற்புடன் அவளை உள்ளே அனுமதித்தார் சித்ரலேகா. "வணக்கம் அத்தை, மாமா!" என இவளும் கூக்குரலிட்டவள், "ஹாய் கிஷான்" என்று தன்னவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் முக்தா. கிஷான், "வா முகி"  அவளுக்கான உணவையும் தயாராக்கி இருந்தார் சித்ரலேகா. "இப்போதைக்கு, ஜூஸ் மட்டும் போதும் அத்தை" என்று கேட்டு வாங்கிக் குடித்தாள் முக்தா. "அப்பா எப்ப...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 23

  தீபக்கின் தாய் லலிதாவின், பெருங்குற்றத்திற்கான தண்டனைக் காலம் ஆரம்பித்து விட்டது. அவர் அப்படி ஒடுங்கிப் போய் இருக்க, இங்கே அவரது மகனை அடைத்து வைத்திருந்த கோபாலோ தன் முதலாளிக்குச் செல்பேசியில் அழைத்தான். "சார்! அவனை அடைச்சாச்சு" என்று தெரிவித்தான். அதைக் கேட்டதும்,"நான் வர்ற வரைக்கும் அவனை எதுவும் பண்ணாத.என்னக் கேட்டாலும் பதில் சொல்லாத" என்று வைத்து விட்டு அவ்விடத்திற்கு விரைந்தான் கிஷான். அவனுக்கு இருக்கும் கோபத்திற்கு, தீபக்கை ஒரேயடியாக காணாமல் போக வைத்து விட வேண்டுமென்ற வெறி இருந்தது. ஆனால், எடுத்தவுடன் அவனது உயிரைப் பறிக்க வேண்டாம், அது தவறும் கூட, இழிந்த சொற்களைப் பேசுவது இதுவே கடைசி தடவையாக இருக்க வேண்டும் என்று மிரட்டி விட்டு, அனுப்பி வைத்து விடு என்றதொரு கோரிக்கையை நண்பனிடம் வைத்திருந்தான் மஹதன். அதனால் தான்,தன்னுடைய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு உள்ளான் கிஷான். தீபக்கை கட்டிப் போட்டு வைத்திருந்த இடத்திற்கு வந்தவனுக்கு வணக்கம் வைத்த அடியாளிடம்,"ஏதாவது பேசினானா?" என்று வினவினான் கிஷான். "இல்லை சார். கொஞ்சம் முரண்டு பிடிச்சான். அப்பறம், கையைக், க...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 22

  கண்டிப்பான பார்வையுடன் அங்கே நின்றிருந்தார் அன்னபூரணி. அவரைப் பார்த்ததும், அகதாவிற்கு அதிர்ச்சியில் நின்ற அழுகை மீண்டும் வந்தது. அவரிடமிருந்து எதையாவது மறைத்துச செய்ய முடியுமா? என்ற அசட்டுத்தனத்தில் மௌனாவும், அமைதி கொண்டாள். ஆனால், அவர் விடுவதாக இல்லையே!  "யாரைப் பத்திப் பேசினீங்க?" எனச் சற்று மிரட்டலாகவே வினவினார் அன்னபூரணி. இதற்கு மேல் மறைத்தால் அது அவரை அவமானப்படுத்துவது போலாகும் என்ற எண்ணத்தில்,"தீபக் ம்மா!" என்று வேறு வழியில்லாமல், அகதாவிடம் இருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு, தன் தாயிடம் பதிலளித்தாள் மௌனா. அதைக் கேட்டதும் தலையைக் குனிந்து கொண்டு, வழிந்த கண்ணீரைத் துடைத்தாள் அகதா. "அவனா? அந்த ராஸ்கலுக்குத் தான் மாப்பிள்ளை தண்டனை கொடுத்துட்டாரே! இப்போ என்னப் பண்ணி வச்சிருக்கான்?" என்று அகதாவை இழுத்து தன் அருகில் அமர்த்தியவர், அவளது குனிந்த தலையை உயர்த்தி விட்டார் அன்னபூரணி. அழுகையையும் தன் சேலை முந்தானையில் துடைத்து விட்டவர், "இதுக்கா இப்படி கண்ணீரை வீணாக்குற?" என்று அக்காவை அதட்டினார். அதை நிம்மதியுடன் பார்த்துக் கொண்டு இருந்த மௌனாவிடம்,...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 21

  "ஹலோ மஹி" என்றவளது குரலில் தான் பட்டென்று அழுகையை நிறுத்திய அகதா,தோழியின் கையிலிருந்த செல்பேசியைப் பிடுங்க முயன்றாள். "ஹேய்! கால் கனெக்ட் ஆகிருச்சு!" என்று மெல்லிய, அழுத்தமானக் குரலில் அவளை எச்சரித்தாள் மௌனா. "ப்ச்! ஏன்டி?" என்று மீண்டும் விழிகளில் அனிச்சையாக நீர் நிரம்பியிருக்கப் பரிதாபமாக கேட்டாள் அகதா. அதற்குள், மஹதனின் அழைப்பு விடாமல் கேட்கவும்,"ஸ்ஸூ!" என்று அவளை அமைதியாக இருக்கும் படி கட்டளையிட்டவள்,  "சாரி மஹி!" என்றாள் மௌனா. "என்னாச்சு ம்மா?" என அப்போது தான் அலுவலகத்தில் தன் அறைக்குள் சென்றிருந்தான் மஹதன். "நீங்க சொன்னவன் தான் அகதாவோட பயத்துக்கும்,பதட்டத்துக்கும் காரணம்" என்று கூறினாள் மௌனா. "அவன் சரியானக் கிறுக்கனா? எவ்ளோ உதைக் கொடுத்தாலும் புத்தி வராதா?" என்று சலிப்புடன் வினவினான். "இருங்க! இதுக்கே இப்படின்னா! அகதாகிட்ட என்னச் சொல்லி இருக்கான்னுத் தெரியுமா?" எனச் சொல்லியவளிடம்,"வேண்டாம் மௌனா!" என்று சைகை செய்தாள் அகதா. "நீ சும்மாயிரு அகி" என மஹதனுக்கும் கேட்கும் விதம...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 20

  "சரி. இதோ வந்துட்றேன்" என்று அழைப்பை வைத்தவள், மஹதனைப் பார்த்தாள் மௌனா.  அவளது தோழி அகதா தான் அழைத்திருந்தாள் எனவும் , அவளுக்கு ஏதோ பிரச்சினை உதவி தேவைப்படுகிறது என்பதையும் இவளிடம் இருந்து அவதானித்துக் கொண்டான் மஹதன். தீபக்கைத் தவிர, அகதாவிற்கு வேறெந்தப் பிரச்சினை வரப் போகிறது? என்று யோசித்துக் கொண்டு இருந்தவனிடம்,"மஹி! அகதா தான் பேசினாள்" என்று அவனிடம் விவரமாக கூறினாள் மௌனா. "அதைத் தான் நானும் யோசிச்சேன் ம்மா" என்றான் மஹதன். "காரை வீட்டுக்குத் திருப்ப முடியுமா மஹி?" என்று அவள் வேண்டுகோள் விடுக்கவும், "ஷ்யூர்" என மகிழுந்தை அவர்களது இல்லத்தை நோக்கிச் செலுத்தினான். "அந்த வீணாப் போனவனைத் தவிர வேற என்னப் பிராப்ளம் வந்திடப் போகுது உன் ஃப்ரண்ட் - க்கு?" என்று சலித்துக் கொண்டான் மஹதன். "தீபக்! அவனைத் தான் நீங்களும், கிஷானும் நல்லா கவனிச்சு அனுப்பிட்டீங்களே! அப்பறமும் எப்படி இவ்ளோ தைரியம் வந்திருக்கும் அவனுக்கு?" என்று கோபத்தில் பொரிந்தாள் மௌனா. "அகதா மட்டும் சந்தோஷமாக நிம்மதியாக இருக்கிறது அவனுக்குப் பிடிக்கலை போல! இ...