முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே - 11

 


அவளது விழிகளை நேருக்கு, நேராகப் பார்த்து,”உன்னை இந்த வீட்டை விட்டுப் போக விட்டுட்டால் உன்னை வச்சு எங்க எதிரிங்க எங்க குடும்பத்தை ஏதாவது செய்ய வாய்ப்பு இருக்கு! அதனால் தான் நான் உன்னை இங்கேயிருந்து போக விடாமல் தடுக்கிறேன்!”என்றவனிடம், 


“அப்போ எனக்கு இந்த வீட்டில் ஏதாவது வேலை போட்டுக் கொடுங்க ஐயா. அது போதும்!”என்று அவனுக்கு யோசனை கூறினாள் பூவிழி. 


“ம்ஹ்ம்! நீ சொல்வதும் நல்ல யோசனையாகத் தான் இருக்கு! ஆனால் எனக்கு வேற ஒரு நல்ல யோசனைத் தோனுச்சு! அதைச் சொல்லவா?”என்று அவளிடம் கேட்டான் திருவாதிரன். 


உடனே,’என்ன?’என்பதைப் போல் அவனைப் பார்த்தாள் பெண்ணவள். 


“நான் உன்னைக் கல்யாணம் பண்ணி என்னோட மனைவியாக இங்கேயே இருக்க வைக்கனும்னு எனக்குத் தோனுது!”என்று கூறி அவளது தலையில் பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டதைப் போன்றதொரு அதிர்ச்சியைக் கொடுத்து விட்டு அலட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தவனிடம், 


“நீங்க என்ன சொல்லுதீக ஐயா? என்னைக் கட்டிக்கப் போறீகளா? இது எப்படி சாத்தியம்?”என நடுக்கத்துடன் கேட்டிருந்தாள் பூவிழி. 


“ஏன் சாத்தியம் கிடையாது?”என்று அவளிடம் தன் புருவங்களை ஏற்றி, இறக்கி வினவினான் திருவாதிரன். 


அதற்கு அவளோ,”நீங்க எவ்வளவு உயரத்தில் இருக்கிற ஆளு? நான் உங்களை விடக் கீழே இருக்கிறவ! நமக்கு எப்படி?”என்றதும், 


உடனே அவளை நன்றாகவே நெருங்கிச் சென்று நின்று கொண்டு,”நான் உன்னை விட உயரம் தான்! அதனால் என்ன இப்போ?”என்று அவளின் மீது தனது மூச்சுக்காற்றுப் பலமாகப் படும் படியாக கேட்டிருந்தான் ஆடவன்.


அவனது நெருக்கம் மற்றும் மூச்சுக் காற்றினால் தனது உடல் சிலிர்த்து, நெளிவதை உணர்ந்து கொண்டு, 


“நீங்க கொஞ்சம் தள்ளி நின்னுப் பேசுங்க ஐயா”என்று அவனிடம் மெல்லிய குரலில் இறைஞ்சினாள் பூவிழி. 


அதில் தனது இதழ்களில் புன்னகையைப் படர விட்டுக் கொண்டு உடனே அவளை விட்டுச் சற்றுத் தள்ளி வந்து நின்று கொண்டான் திருவாதிரன். 


“நான் சொன்ன உயரத்தோட அர்த்தம் உங்களுக்கு நல்லாவே புரிஞ்சு இருக்கும்னு எனக்குத் தெரியும் ஐயா! அப்படி இருந்தும் நீங்க இப்படி எடக்கு, மடக்காகப் பேசுறது சரியில்லை! நீங்க உயர்ந்தப் பொறப்பு! நான் தாழ்ந்தப் பொறப்பு! அதைத் தான் சொன்னேன்”என்று அவனிடம் தெளிவாக உரைத்து விட்டிருக்க, 


அதற்கு அவனோ,”நான் அப்படியெல்லாம் வேத்துமை பார்க்கிறவன் கிடையாது விழி! எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கனும். அப்போ தான் என்னோட குடும்ப கௌரவத்தைக் காப்பாத்த முடியும்!”என்றதுமே, 


“ம்ஹூம். வேணாமுங்க ஐயா! இது நடக்காது!”என்று தீர்க்கமாக மறுத்து விடவும், 


“ஏன் என்னைக் கட்டிக்க உனக்கு விருப்பம் இல்லையா?”என்றவனை நிமிர்ந்து பார்த்தவளோ அவனது கண்களில் வெளிப்பட்ட சீற்றத்தைக் கண்டதும் சர்வாங்கமும் ஒடுங்கிப் போய் விட்டது அவளுக்கு. 


“சொல்லு!”என்று அவளை அதட்டினான் திருவாதிரன். 


அதற்கு,”எங்க ஆத்தாவுக்கு இன்னைக்குத் தான் கொள்ளிப் போட்டுட்டு வந்து இருக்கீங்க! இப்போ இந்த நேரத்தில் நம்மக் கல்யாணத்தைப் பத்தி எங்கிட்ட விருப்பம் கேட்கிறீங்களே இது உங்களுக்கே நியாயமாக இருக்கா?”எனக் கேட்டவளது கண்கள் கண்ணீரைச் சொரியத் தொடங்கியது. 


  “அது உனக்கும் நல்லா தெரிஞ்சு இருந்தும் தானே நீ இந்த வீட்டை விட்டு உடனே கிளம்பிப் போறேன்னு எங்கிட்ட வந்து அதைப் பத்திப் பேசின? நான் தானே முதல்ல அந்த விஷயத்தைப் பத்திச் சொல்லி உன்னைத் தடுத்தேன்! ஆனால் நீ தான் கேட்கலை! இப்போ நான் கல்யாணத்தைப் பத்திக் கேட்டதுமே அந்த விஷயம் உனக்கு ஞாபகம் வந்துடுச்சா என்ன?”என்று கேட்டுத் தனது இதழ்களை ஏளனமாக வளைக்க, 


அதில் குறுகிப் போய் நின்றவளோ,“எனக்கு உங்களைன்னு இல்லை, இப்போதைக்குக் கல்யாணமே கட்டிக்கிற ஆசையே இல்லைங்க ஐயா!”என்றிருந்தாள் பூவிழி. 


திருவாதிரன்,“ஏன்?”


“ஏன்னா, என் தங்கச்சிக் காதலிச்சதால் தானே எங்களோட நிலைமை இப்படி ஆயிடுச்சு? அதனால் காதல் மேலேயும், கல்யாணத்து மேலேயும் எனக்கு வெறுப்பு உருவாகிடுச்சு! அவ மட்டும் இப்படியெல்லாம் பண்ணாமல் இருந்திருந்தால் எங்க ஆத்தாவை நான் இழந்து இருக்க மாட்டேனுங்களே ஐயா? நான் இதையெல்லாம் உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்கனும்னு இல்லை! என்னோட நிலைமை உங்களுக்கு நல்லாவே புரிஞ்சு இருந்தும் நீங்க இப்படி விதண்டாவாதம் பண்றது நியாயமில்லை ஐயா! தயவு செஞ்சி என்னை என் போக்கில் விட்ருங்க!”என்று அவனிடம் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொண்டவளைச் சலனமின்றிப் பார்த்தான் அவளுக்கு எதிரில் நின்றிருந்தவன்! 


இங்கு இவர்கள் இருவரும் தங்களுக்குள் காரசாரமாக விவாதம் செய்து கொண்டிருக்கும் போது கீழே தனது உணவை உண்டு முடித்து விட்டு,”நாம எதுக்கும் வைத்தியச்சியைப் பார்த்துக் கரு எப்படி வளர்ந்து இருக்குன்னுத் சோதிச்சுப் பார்த்துக்கலாமாங்க?”என்று அறிவொளியிடம் உரிமையாக வினவினாள் செந்தாழை. 


அதற்கு அவனோ,“ஆமாம்மா. நானும் அதையே தான் நினைச்சேன்! ஆனால் இந்த நேரத்தில் எப்படி? நம்ம விஷயத்தை ஊருக்குத் தெரியப்படுத்தாமல் தான் கல்யாணத்தைப் பண்ணி வைக்கனும்னுத் திரு உறுதியாகச் சொல்லிட்டானே? அவன் வார்த்தையை மீறி எப்படி அதைப் பண்றது? அவன் என்னச் சொன்னாலும் அதில் சரியான காரணம் இருக்கும்மா! அதனால் இப்போ வேண்டாமே?”என்று அவளிடம் தன்மையாக கூறினான். 


அதில் கடுப்பாகி,”இந்த வீட்டில் நீங்க தானே மூத்தவரு? ஆனால் உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை போலவே? ஒட்டு மொத்தமாக எல்லாத்தையும் உங்கத் தம்பிக்குத் தாரை வார்த்துக் கொடுத்தாச்சுப் போலவே? அப்போ நானும் இனிமேல் அவரு சொல்வதைத் தான் கேட்கோனும் போலவே? என்னமோ போங்க. எனக்குக் களைப்பாக இருக்கு. நான் அறைக்குப் போறேன். எங்க அக்கா வந்ததும் அவளை அங்கே வரச் சொல்லிடுங்க”என அவனிடம் பொரிந்து தள்ளி விட்டு விறுவிறுவென்று அறைக்குச் சென்று விட்டாள் செந்தாழை. 


அவளது அந்த அதிரடியையும், அதிகாரமானப் பேச்சையும் கேட்டு அறிவொளியும், அவனது பெற்றோரும் ஆடிப் போய் விட்டிருந்தார்கள். 


தன்னை அவள் இப்படி இறக்கமாகப் பேசியதைக் கேட்டதும் எரிச்சலும், ஆத்திரமும் மேலிட, 


“இப்போ உங்க மனசுக்குக் குளுகுளுன்னு இருக்கா? அவ என்னை என்னப் பேச்சுப் பேசிட்டுப் போறாள் பாருங்க! நானும் அதையே தான் உங்ககிட்ட முதல்ல இருந்து சொல்லிட்டு இருந்தேன்! ஆனால் நீங்க தான் அவன் தாத்தாவோட அம்சம், அவரோட மறு பொறப்புன்னுச் சொல்லி என்னை அந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டு இருக்கீங்க! இப்போ அந்தப் புள்ளையை வேற தனியாகப் பேச இழுத்துட்டுப் போயிருக்கியான். இன்னும் என்ன ஏழரையைக் கூட்டி வைக்கப் போறியான்னுத் தெரியலை! ஆனால் அவன் செய்றது எதுவும் சரியில்லை! அம்புட்டுத்தேன் சொல்லுவேன்!”என்று தன் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்து விட்டுச் செந்தாழையைச் சமாதானம் செய்யப் போய் விட்டான் அறிவொளி. 


செந்தாழை மற்றும் அறிவொளியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து, தடுமாறிப் போய் விட்டனர் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி. 


“என்னங்க, இந்தப் பொண்ணு இப்போவே இப்படி அறிவை அதிகாரம் பண்ணிட்டு இருக்காளே! இவ மட்டும் நம்ம வீட்டு மூத்த மருமகளாகப் பொறுப்பு எடுத்துக்கிட்டாள்ன்னா என்னை வாயடைச்சு, மூலையில் உட்கார வச்சுடுவா போலிருக்கே! அவளுக்கு இணையாக அந்தக் கிறுக்கனும் ஆடிட்டுப் போறானே? இதில் சின்னவன் என்ன ஏழரையைக் கூட்டப் போறானோ தெரியலையே?”என்ற மனைவியிடம், 


“ஆமாம்மா. இவனுங்க ரெண்டு பேரும் ரெண்டு தினுஸாக இருக்கானுங்க! இன்னும் சின்னவனைக் காணோம்! எனக்கு என்னமோ இதுக்கப்புறம் நம்மப் பேச்சு சபையில் ஏறாதுன்னுத் தோணுது!”என்று திகிலுடன் கூறியிருந்தார் நஞ்சுண்டன். 


“ஐயோ! இவனுங்களைப் பெத்த வயித்துல பெரண்டையைத் தான் வச்சுக்கோனும் போல!”என்றதும், 


தங்களது இரு மகன்களின் இந்த அதிரடி மாற்றங்களைக் கண்டு அதிர்ந்து தான் போயினர் இவர்கள் இருவரும். 


இங்கே திருவாதிரனின் கேள்வித் தனது மூளையில் சுத்தியலை வைத்து அடித்ததைப் போல் ஆழமாக இறங்கி விட்டதைப் போல் அதிலிருந்து வெளியே வர இயலாத படிக்குக் கால்கள் தடுமாறிப் போய் நின்றிருந்தாள் பூவிழி. 


“இங்கே பாரு! நான் உடனே எல்லாம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு உங்கிட்ட சொல்லலை! ஒரு ஆறு மாசம் போகட்டும். அதுக்கப்புறம் எங்கண்ணன், உந்தங்கச்சிக் கல்யாணத்தோட சேர்த்து நாமளும் கல்யாணம் பண்ணிக்கலாம். என் அப்பா, அம்மாவும், இந்த ஊரும் ஏதாவது கேட்டால் அவங்க கிட்ட நான் பேசி சமாளிச்சுக்கிறேன்! அதைப் பத்தி நீ கவலைப்படாதே! அதே மாதிரி, இப்போதைக்குக் கல்யாணத்தை எளிமையாக நடத்திக்குவோம். ஒரு வருஷம் முடிஞ்சதும், உங்கம்மாவுக்குத் திதி கும்பிட்டு முடிச்சதும் ஒரு விழா நடத்தி எல்லாருக்கும் சாப்பாடு போடுவோம்!”என்றதுமே, 


தலை சுற்றிப் போய் அங்கேயிருந்த சுவற்றின் கைப்பிடியை ஆதரவாகப் பிடித்துக் கொண்டு அவனை விழி விரித்து ஆச்சரியமாகப் பார்த்தாள் பெண்ணவள். 


“என்ன?” என்றவனிடம்,


“உங்களால் எப்படி இப்படியெல்லாம் முடிவு எடுக்க முடியுதுங்க ஐயா? நான் இது எதுக்குமே சம்மதிக்கப் போறதில்லை!”என்றிருந்தாள் பூவிழி. 


“சம்மதிக்கலைன்னா உன் கூடச் சேர்த்து உன் தங்கச்சியையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுவேன்!”என அவளிடம் உறுதியாக உரைத்தான் திருவாதிரன். 


அவனுக்கு அவளிடம் சம்மதம் வாங்குவதற்கு இதை தவிர வேறு வழியில்லை என்பது புரிந்து விட்டதால் அதற்கேற்றவாறு காய் நகர்த்தி இருந்தான். 


அதைக் கேட்டதும் அவளது பார்வையில் வலியுடன், ஏமாற்றமும் சேர்ந்து கொண்டது. 


அதில் கரையத் தொடங்கிய தனது மனதை அடக்கிக் கொண்டுத் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் உறுதியாக இருந்தான் திருவாதிரன். 


அவளுக்குத் தனது தமக்கையைப் பற்றி நன்றாகவே தெரியும் என்பதாலேயே அவனைக் குறுகிப் போய் நோக்கினாள் பூவிழி.


“ஏன் எதுவும் பெறாமல் இருக்கிற? என்ன உன் தங்கச்சியைக் கூட்டிட்டு இங்கேயிருந்து கிளம்பத் தயாரா?”என அவளிடம் இகழ்ச்சியாக கேட்டவுடனேயே தனது தலைப் பூமிக்குள் புதைந்து விடும் அளவிற்குத் தொங்கப் போட்டுக் கொண்டவளிடம், 


“உந்தங்கச்சி கிட்டே பேசிட்டு உன் முடிவைச் சொல்லு. இப்போ கீழே வா”என்று அவளிடம் கூறி விட்டுக் இறங்கிச் சென்று விட்டான் திருவாதிரன்.


தனது கண்களில் பெருகி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே தானும் கீழே போனாள் பூவிழி. 


வீட்டினுள் நுழைந்த தங்களது இளைய மகனை வெளிறிய முகத்துடன் பார்த்தார்கள் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி. 


“அவகிட்டே பேசிட்டேன்! அவ இந்த வீட்டை விட்டுப் போறதைப் பத்திச் சீக்கிரமே ஒரு முடிவு எடுத்துச் சொல்லிடுவா! அதைப் பத்தி நீங்க எதுவும் கவலைப்பட்டுக்க வேண்டாம்!”என்றவனிடம், 


“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்கண்ணனும், அந்தச் சிறுக்கியும் என்னப் பேச்செல்லாம் பேசிட்டுப் போனாங்கன்னு உனக்குத் தெரியுமா?”என்று ஆதங்கத்துடன் வினவினார் நஞ்சுண்டன். 


                                  - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...