டிஸ்கிளைமர் : இந்தப் பதிவிலும், அடுத்தப் பதிவிலும் கூடல் காட்சிகள் இருக்கும். ஆனால் வரம்பு மீறிப் போகாது! அதேபோல் இது என் தரப்பிலிருந்து ஒரு அறிவிப்பு மட்டுமே! இதை வாசிப்பதும், தவிர்ப்பதும் உங்களுடைய தனிப்பட்ட விருப்பம் தான் நண்பர்களே 🖤🙏 புரிதலுக்கு நன்றி🙏💕
அந்த விருந்து நடக்கும் இடமே அந்த வீட்டின் நெருங்கிய சொந்தங்களால் நிரம்பி வழிந்து இருந்தது.
அதைப் பார்த்துப் பூரித்துக் கொண்டாலும் கூடத் தனக்குச் சமதையான இடங்களில் இருந்து மருமகள்களைத் தெரிவு செய்திருந்தால் இன்னும் இதை ஊர் மெச்ச விமரிசையாக நடத்தி இருக்கலாமே என்றப் பொருமலும் உண்டானது தான் ராஜகுமாரிக்கு.
ஆனாலும் சிரித்த முகமாகவே தன்னைக் காட்டிக் கொண்டார்.
அதே சமயம் தன்னிடம் வந்து,”என்னம்மா உன் வயிறு பெருசாகத் தெரியுதே? கர்ப்பமாக இருக்கியோ?”எனச் செந்தழையிடம் ஒரு சிலர் வந்து நேரடியாகவே கேட்டு விடவும்,
அதற்குப் பதிலளிக்கும் மனநிலையில் இல்லாததால்,”இலை போட்டாச்சுப் பாருங்க. நீங்கப் போய் முதல்ல உட்கார்ந்து சாப்பிடுங்க”என்று அவர்களிடம் பட்டென்று கூறவும்,
“ஏத்தத்தைப் பாரு இவளுக்கு!”என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டுச் சாப்பிடச் சென்றார்கள் அந்தப் பெண்மணிகள்.
அப்போது முருகையன், சடையன் மற்றும் விருமனின் மனைவிகள் அங்கேயும் வந்து நஞ்சுண்டனிடம் கண்ணீர் மல்கத் தங்களது கணவர்களைப் பற்றி விசாரித்தனர்.
அதில் தர்ம சங்கடமான நிலைக்கு உள்ளாகி அவர்களைத் தனியாக அழைத்து,”நான் அவங்க மூனு பேரையும் வேலை விஷயமாக அனுப்பி வச்சது உண்மை தான்ம்மா. ஆனால் அந்த வேலையும் முடியலை! அவங்களும் இங்கே வந்து சேரலை! அதுக்கு நான் என்னப் பண்ண முடியும்? ஆட்களை விட்டுத் தேடச் சொல்லியும் அதுக்குப் பலன் கிடைக்கலை! எனக்கே அவங்க எங்கே இருக்காங்கன்னுத் தெரியலை! இதில் இருந்து என்னத் தெரியுது? அவங்க யார்கிட்டேயும், எதுவும் சொல்லாமல் எங்கேயோ போயிட்டாங்க! அவங்களை இனிமேலும் தேடுவதில் பயனில்லைன்னுத் தோணுது!”என அறிவுறுத்தினார்.
அதைக் கேட்டு அவர்கள் மூவரும் அதிர்ச்சியில் பேச்சிழந்து போய் விட்டனர்.
“என்னங்க ஐயா நீங்களே இப்படி கையை விரிச்சா நாங்க யார்கிட்டே போய் உதவிக் கேட்கிறது? எங்கப் பிள்ளைங்களை வீட்டில் தனியாக விட்டுட்டு எங்களோட புருஷனுங்களைத் தேடித் தெருத்தெருவாக அலைஞ்சிட்டு இருக்கோம்! யாருக்கும், எதுவும் தெரியலை! எங்களுக்குப் பயமாக இருக்குங்க ஐயா! சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் வயித்தைக் காயப் போட்டுட்டு இருக்கோம்! நாள் பூராம் அவங்களையே தேடிச் சுத்திட்டு இருக்கோம்! கொஞ்சம் கருணைக் காட்டுங்க ஐயா!”என அவரிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள் மூவரும்.
“நான் தான் அந்த மூனு பேரையும் கண்டுபிடிக்க எவ்வளவோ முயற்சி செஞ்சேன். ஆனால் அது வேலைக்கு ஆகலைன்னுச் சொல்றேனேம்மா? இதுக்கு மேலே என்னாலேயும் என்னச் செய்ய முடியும் சொல்லுங்க? இது வரைக்கும் முருகையன், சடையன், விருமனும் காட்டில் செஞ்ச வேலைக்கான கூலியை உங்களுக்குக் கொடுக்கச் சொல்றேன். அதை வச்சுப் பொழப்பைப் பாருங்க! அதே மாதிரி அவங்க மூனு பேரும் திரும்பி வர்ற வரைக்கும் நீங்க நம்மக் காட்டில் வந்து வேலை பாருங்க! இதை மட்டும் தான் என்னால் உங்களுக்காகப் பண்ண முடியும்! இதுக்கு மேலே எங்கிட்ட எந்த உதவியையும் எதிர்பார்க்காதீங்கம்மா! இப்போ உங்க குடும்பத்தைக் கூட்டிட்டு வந்து இங்கே சாப்பிட்டுப் போங்க”என்று அவர்களிடம் கைவிரித்து விட்டார் நஞ்சுண்டன்.
அதில் மேலும் அதிர்ந்து போன முருகையன், சடையன் மற்றும் விருமனின் மனைவிகளோ எதுவும் பேசாமல் அங்கேயிருந்து வெளியேறி விட்டிருந்தனர்.
அதைக் கருத்தில் கொள்ளும் நிலையில் நஞ்சுண்டனும் இல்லை. ஆதலால் தங்கள் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் விருந்தை மேற்பார்வையிடத் தொடங்கி விட்டார்.
“அதுங்க மூனுங்களுக்கும் என்னப் பிரச்சினையாம்ங்க?”என்று கணவரிடம் வினவினார் ராஜகுமாரி.
அதற்கு,”அவங்களோட புருஷனுங்களைக் காணோம்ன்னுச் சொன்னேன்ல? இன்னும் வரலையாம். அதான் எங்கிட்ட வந்து விசாரிச்சிட்டுப் போறாங்க”என்றிருந்தார் நஞ்சுண்டன்.
“அவங்களைக் காணோம்னா அதுக்கு நாமளா பொறுப்பு? நீங்க அதுங்களைக் கண்டுக்காதீங்க!”என்றுரைத்து விட்டார் மனைவி.
இதை அவர்களுக்கு அருகில் நின்றிருந்த திருவாதிரனும், பூவிழியும் கேட்க நேர்ந்தது.
உடனே தனது கணவனைத் தான் ஏறிட்டுப் பார்த்தாள் பூவிழி.
ஆனால் அவளது பார்வையை எவ்வித சங்கடமும் இல்லாமல் எதிர்கொண்டான் அவன்.
“இதில் உங்கப் பங்குக் கண்டிப்பாக இருக்குத் தானேங்க?”என்றாள் முணுமுணுப்பாக.
“இதுக்கு முழுக் காரணமே நான் தான் விழிம்மா”என அவளிடம் குறுஞ்சிரிப்புடன் பதிலளித்தான் திருவாதிரன்.
அதில் தனது முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை நாசூக்காக மறைத்துக் கொண்டுத் தனது மாமனார், மாமியாரின் அழைப்பிற்கு இணங்கிப் பந்தியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் கணவனுடன் அமர்ந்து கொண்டாள் பூவிழி.
அதே நேரத்தில் தனது மனைவியிடம் வந்து,”நாமளும் சாப்பிட உட்காரலாமா செந்தா?”எனக் கனிவுடன் வினவினான் அறிவொளி.
அதில் தனது முகத்தை முந்தானையால் அழுந்த துடைத்து விட்டு,”ம்ஹ்ம். சரிங்க”என்றிருந்தாள் செந்தாழை.
உடனே அவளுடன் இணைந்து பந்திக்குச் சென்று திருவாதிரன் மற்றும் பூவிழிக்கு அருகிலிருந்த நாற்காலிகளில் அவர்கள் இருவரும் உட்கார்ந்து கொள்ளவும்,
உடனே அவர்கள் நால்வருக்கும் உணவைப் பரிமாறினர் சமையல் ஆட்கள்.
அப்போது திருவாதிரன் மற்றும் பூவிழியின் உடைகளின் நிற ஓற்றுமையையும், அவர்களது மலர்ந்த முகத்தையும் கண்டு விட்டு,
“நம்மத் திருவும், பூவும் ஏற்கனவே விரும்பி இருக்காங்கன்னுத் தோணுது! அதனால் தான் ரெண்டு பேரும் இவ்வளவு அன்னியோன்யமாக இருக்காங்க போலவே!”என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர் சில உறவுக்காரப் பெண்கள்.
“ம்ம். அப்படித் தான் இருக்கும்க்கா. ஏன்னா, அதுங்க கிட்டே இருக்கிற ஒத்துமையைப் பார்த்தாலே தெரியுதே! ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்”என்றவரிடம்,
“என்னச் சந்தேகம்டி?”எனக் கேட்டிருந்தார் மற்றொரு பெண்மணி.
உடனே,“இந்தச் செந்தாழையோட வயித்தைப் பார்த்தீங்களா? இம்புட்டுப் பெருசாக இருக்கு! எனக்கு அதைப் பார்த்தால் தொப்பை மாதிரி தெரியலை! ஒருவேளை அவ கர்ப்பமாக இருக்காளோ?”என்றாள்.
“அதே தான் என்னையும் போட்டுக் குடையுதுக்கா! எத்தனை மாசம்ன்னு வேற தெரியலையே”எனத் தங்களுக்குள் முனகிக் கொண்டார்கள்.
“நான் அதை அவகிட்ட போய்க் கேட்டுப் பார்த்தேம்க்கா! ஆனால் அவ மூஞ்சியில் அடிச்சாப்புல போய்ச் சோத்தைத் தின்னுன்னுச் சொல்லிட்டா”என்று பொருமினார் சற்று முன்பு செந்தாழையிடம் சென்று பேசி மூக்கறுபட்டு வந்தப் பெண்.
“அப்படியா சொன்னாள்? அவ ஏற்கனவே ராங்கிப் பிடிச்சவ! இப்போ பெரிய வீட்டு மருமகளாகிட்டான்னு ரொம்பத் திண்ணக்கம் வந்திருச்சுப் போல!”எனப் பேசிக் கொண்டே உணவருந்தினர் அந்தப் பெண்கள் அனைவரும்.
தனது மனைவியிடம்,”உன் இலையில் இருக்கிற எல்லாத்தையும் ருசி பார்க்கிறதாக இருந்தால் சாப்பிடு. இல்லைன்னா, உனக்குப் பிடிச்சதை மட்டும் சாப்பிடு. நான் சொன்னதுக்காக எல்லாத்தையும் சாப்பிடனும்னு அவசியம் எல்லாம் இல்லை!”என்று அறிவுறுத்தினான் திருவாதிரன்.
“சரிங்க”என்றவர்களின் உரையாடலைக் கேட்டு அதற்குப் பொருமக் கூடச் செந்தாழைக்குச் சக்தி இல்லை எனலாம்!
ஏனெனில் அவளுக்குப் பசிக் காதை அடைத்தது.
அதனாலேயே யாரையும் கண்டு கொள்ளாமல் உணவை அள்ளி வாயில் அதக்கத் தொடங்கி விட்டிருந்தாள் செந்தாழை.
அவளுக்குப் பத்தியச் சாப்பாடு என்பதாலேயே தானும் அதையே கேட்டு வாஙகி உண்டான் அறிவொளி.
அதில் உள்ளம் உருகிப் போய் விட்டது அவனது மனைவிக்கு.
அவனைக் காதலுடன் பார்த்து விட்டு அவனது கைகளுடன் தன்னுடைய கரங்களைக் கோர்த்துக் கொண்டு உணவருந்த ஆரம்பித்தாள் செந்தாழை.
அதேபோல் தாங்கள் இருவரும் தங்களது உணவை உண்பதற்காகப் பந்தியில் அமர்ந்தார்கள் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.
அப்போது,”ஏன்க்கா, உங்க மூத்த மருமக மாசமா இருக்காளா என்ன?”என்றிருந்தார் நெருங்கிய உறவுக்காரப் பெண்மணி ஒருவர்.
அதைக் கேட்டதும் கடுகடுத்தாலும்,”ஆமாம். அதுக்கென்ன இப்போ? இலையில் சோறு குறையுதா? இன்னும் கொண்டாரச் சொல்லவா?”எனச் சட்டென்று கேட்டிருந்தார் ராஜகுமாரி.
“ச்சே! பொம்பளையா இவ!”என்று அவரை முறைத்து விட்டு இலையை மூடி வைத்து விட்டு எழுந்து சென்று கைகளைக் கழுவிக் கொண்டு அங்கேயிருந்து அகன்றார் அந்தப் பெண்.
இப்படியாகத் திருவாதிரன் மற்றும் பூவிழி, அறிவொளி மற்றும் செந்தாழையின் மறு வீட்டு விருந்து இனிதே நிறைவுற்றது.
அன்றிரவு தங்களது அறையில்,”ஏனுங்க! நான் ஏற்கனவே உங்ககிட்ட சொன்னா மாதிரி நாம தனியாகப் போயிடலாமா?”என்று கணவனிடம் கூறியிருந்தாள் செந்தாழை.
“ப்ச்! நீ ஏன்ம்மா அதையே பேசிட்டு இருக்கிற? எனக்கு அதில் பிடித்தம் இல்லம்மா! அப்படியே நாமத் தனியாகப் போகனும்ன்ற அவசியம் வந்தாலும் கூடக் குழந்தை பிறந்ததுக்கு அப்பறமாகத் தான் போக முடியும்! நீ இதைப் பத்தி எங்கம்மை கிட்டே பேசனும்னு நினைக்கிற எண்ணத்தை இத்தோட கை விட்ரும்மா”என அவளுக்கு அறிவுரை வழங்கினான் அறிவொளி.
“சரிங்க. அப்போ குழந்தை பிறந்ததுக்கு அப்பறம் சொத்தைப் பிரிச்சு வாங்கிட்டுத் தனியாகப் போயிடலாம்”என அதே பல்லவியைப் பாடிய மனைவியைச் சலிப்புடன் பார்த்து விட்டு,
“நீ தூங்குற வரைக்கும் நான் உனக்குக் கால் அமுக்கி விட்றேன்ம்மா”என்று கூறி அந்த வேலையில் இறங்கி விட,
இங்கோ தங்களது உடைகளை மாற்றிக் கொண்டுக் கட்டிலில் உட்கார்ந்தனர் திருவாதிரன் மற்றும் பூவிழி.
“விருந்துக்கு வந்த எல்லாரும் நம்மளோட ஜோடிப் பொருத்தத்தைப் பத்தித் தான் பேசினாங்க”என்று மனைவியிடம் பெருமிதத்துடன் உரைக்க,
அதற்கு அவளோ,”நாம உண்மையிலேயே பொருத்தமான ஜோடி தானாங்க?”என்றாள் அவனது மனையாள்.
அதில் அவளைக் கொலைவெறி பார்வைப் பார்த்தவனோ,”ஆமாடி! அதில் உனக்கு என்ன ஐயம்?”எனக் கடுகடுத்தான் திருவாதிரன்.
“இப்போ எதுக்குக் கடுப்பாகப் பேசுறீங்க? நான் சும்மா தெரிஞ்சிக்கத் தான் கேட்டேன்”என்று அவனை மலையிறக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.
“ஆமாம்டி. உனக்கு இதை தவிர வேறு எதுவும் தெரியாது தானே? அதை நான் உனக்குத் தெரிய வைக்கவா? அதை தெரிஞ்சிக்க நீ தயாரா?”என்று மோகனப் புன்னகையுடன் கேட்க,
அதில் உடல் முழுவதும் சிலிர்க்க,”ம்ஹ்ம்”என்று ஒற்றை வார்த்தையில் அவனிடம் தனது சம்மதத்தை தெரிவித்து விட்டிருக்க,
உடனே அவளை அப்படியே கட்டிலில் சரித்து, அவளது உடலைத் தன் ஆக்கிரமிப்பிற்குக் கொண்டு வந்திருந்தான் திருவாதிரன்.
அதில் நாணம் மேலோங்க வெட்கத்தில் அவனது தோளைப் பற்றிக் கொண்டாள் பூவிழி.
அவளது முகத்தில் தொடங்கி காது, கழுத்து என்று அனைத்து இடங்களையும் தனது இதழ்களால் முற்றுகை இட்டு அவளது சேலைத் தலைப்புப் பின்னைக் கழற்ற எத்தனிக்க,
உடனே பதறிப் போய் அவனது கரங்களைத் தடுத்து விட்டிருந்தாள் மனைவி.
“என்னாச்சும்மா? உனக்குப் பிடிக்கலையா? அப்படின்னா வேண்டாம்”என அவளிடம் மிருதுவான குரலில் மொழிந்தான் திருவாதிரன்.
“ம்ஹூம். எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருக்குதுங்க. மத்தபடி எனக்கு இதில் விருப்பம் தான்”என்றவுடன்,
அவளைப் பூவைப் போல் கையாள முடிவெடுத்து அவளது புடவைக்கு விடுதலை அளித்து விட்டு,
அவளது தோளில் முத்தம் கொடுத்து முன்னேறத் தொடங்கினான் திருவாதிரன்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக