முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே - 34

 டிஸ்கிளைமர் : கூடல் காட்சிகள் அதிகம் இருக்கும் நண்பர்களே 🙏



தன் கணவனின் ஒவ்வொரு முத்தத்திற்கும், தீண்டலுக்கும் உருகிக் கரைந்து போய்க் கொண்டிருந்தாள் பூவிழி. 


அவளை மென்மையாக ஆட்கொண்டு அவளிடமிருந்து தன் மேலான காதல் உணர்வுகளைத் தூண்டி விட்டிருந்தான் திருவாதிரன். 


அதனாலேயே சிறிது, சிறிதாகத் தனது தயக்கத்தை உடைத்துக் கொண்டுத் தானும் அவனுக்கு இணையாக அவனை ஆட்கொள்ளத் தொடங்கி விட்டிருந்தாள் மனைவி. 


தனது கழுத்திற்குக் கீழிறங்கிய கணவனின் உதடுகள் தன்னுடைய மோக உணர்வுகளைத் தட்டி எடுப்பி விடவும், 


அவனது சிகையைத் தன் கரங்களுக்குள் சிறைப் பிடித்துக் கொண்டு அவனைத் தன்னை நிமிர்ந்து பார்க்க வைத்து அவனது இதழ்களை வன்மையாகச் சிறை பிடித்துக் கொண்டாள் பூவிழி. 


அவளிடம் தனது இதழ்களை மொத்தமாக ஒப்படைத்து விட்டு அவளது இதழ்த் தாகம் முடியும் வரை தனது கரங்களை அவளது உடலெங்கும் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான் திருவாதிரன். 


சிலி நிமிடங்கள் கழித்து அவனது இதழ்களை விடுவித்து விட்டவளை மொத்தமாக அள்ளிக் கொள்ளும் வகையில் தனது அதரங்களை அவளது இடைக்குக் கொண்டு வந்து அங்கே இடைவெளி விடாமல் பல முத்தங்களை வாரி இறைக்க, 


 அதில் அவளது உடல் சிலிர்த்து, துடித்து அடங்கியது எனலாம்! 


மனைவியின் இடைக்கு விடுதலை கொடுத்து விட்டு அவளது உடலில் மிச்சமிருக்கும் உடைகளுக்கும் விடுதலை அளித்து விட்டுத் தானும் தன் உடைகளைக் களைந்து விட்டிருந்தான் திருவாதிரன். 


அவனது அந்தச் செய்கையில் வெட்கம் மேலிடத் தனது உடலைப் போர்வைக் கொண்டு மூடினாள் பூவிழி. 


உடனே மனைவியின் இந்தச் செயலால் புன்னகைத்து விட்டு,”விழி!”என்று அவளைக் காதலுடன் அழைத்தவனோ, 


தானும் அந்தப் போர்வைக்குள் தனக்கான இடத்தை தேடிக் கொண்டு அவளது உடலோடு பிண்ணிப் பிணைந்து கொள்ளவும், 


இப்போது தாங்கள் இருவருமே உடைகளைத் துறந்து விட்டோம் என்பதைக் கண்டு கொண்டுத் தன்னவனின் உடலை வெண்டைப் பிஞ்சு விரல்களால் நன்றாகத் தொட்டுப் பார்க்கலானாள் பூவிழி. 


அதுமட்டுமின்றி ஆங்காங்கே தனது அதரங்களை ஒற்றி எடுக்கவும் செய்ய, 


மனைவியின் செயல்களைக் கண்ணை மூடி ரசித்தான் திருவாதிரன்.


அவனது உடலை முற்றுகையிட்டுத் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டவளை,”இனிமேல் நடக்கப் போறதுக்கு நான் பொறுப்பு இல்லைம்மா”என்றவனோ,


மனைவியை முத்தமிடும் நோக்கத்தில் அவளது முகத்தை நோக்கிக் குனியவும், 


அதில் வெட்கப்பட்டுப் போனவளோ, அவனை இறுக கட்டிக் கொண்டாள் பூவிழி. 


அதில் அவர்கள் இருவரின் உடல்கள் இன்னும் ஒன்றோடொன்று கலந்து விடவும், 


அதனால் உருவான மோகக் கனலைத் தணிக்கும் செயலில் இறங்கினர் அந்தக் கணவனும், மனைவியும். 


அவர்கள் தங்களது இதழ்களுக்கும், கைகளுக்கும் ஓய்வளிக்கவே இல்லை! 


அந்தளவிற்குத் தாங்கள் தங்களது இணையின் உணர்வுகளையும், ஆசைகளையும், தேடல்களையும் அறிந்து கொண்டு அதை நிறைவேற்றியும் வைக்க ஆரம்பிக்க, 


அவர்களது அந்த உணர்வுகளும், ஆசைகளும், தேடல்களும் இன்னும் அடங்கவில்லை போலும்! 


அதனாலேயே அவற்றை நிறைவேற்றும் வேலையை முடிக்கும் எண்ணமே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருந்தனர் திருவாதிரன் மற்றும் பூவிழி. 


இதுநாள் வரையில் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காதவனும், இந்தக் காதல் உணர்வுகள், திருமணம், தாம்பத்தியம் இதைப் பற்றியெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்காதவளும் சேர்ந்து இப்போது கூடல் என்னும் கடலில் மூழ்கி முத்தெடுக்கும் எல்லைக்குச் சென்று விட்டிருந்தனர் எனலாம்! 


அந்தக் கருப்பு நிறத்தவளோ தனது கணவனின் உதடுகள் செய்த மாயங்களால் சிவந்து போய்க் காணப்பட்டாள் பூவிழி. 


அதேபோல் தாம்பத்தியத்தின் உச்சத்தை அடைந்ததும் மனையாளின் இதள்களைச் சிறை பிடித்து விடுவித்து விட்டு அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டான் திருவாதிரன். 


“ஏங்க!”என்று அவனை மெல்லிய குரலில் அழைக்கவும், 


“ம்ஹ்ம். என்னம்மா?”என அவளிடம் கனிவுடன் கேட்டிருந்தான் கணவன். 


“என்னோட கருப்பு நிறம் உங்களோட கண்ணை உறுத்தலையா?”என்றவளைத் தீயாக முறைத்தவனோ, 


“நீ இன்னும் இந்தக் கேள்வியை எங்கிட்ட எத்தனை தடவை தான் கேட்ப?”என்க, 


“சொல்லுங்களேன்”எனச் சினுங்கினாள் பூவிழி. 


“உன்னோட கருப்பு நிறம் என் கண்ணை உறுத்தவே இல்லடி! ஆனால் நீ என்னை உன் முழு மனசோட ஏத்துக்கிட்டு, என்னை உன் உடம்பைத் தீண்ட அனுமதி கொடுத்தியே? அது தான் அப்போ இருந்து இப்போ வரைக்கும் என் மூளையில் பதிஞ்சு இருக்கு! அதுவும் இல்லாமல் நீயும் எந்தத் தயக்கமும் இல்லாமல் எனக்கு உன் காதலை அள்ளிக் கொடுத்து இருக்கிறியே அது கொடுத்த சந்தோஷம் என் கண்ணை மறைச்சிடுச்சு விழி! இதையெல்லாம் தவிர எனக்கு எதுவுமே தோணலைம்மா”என்றவனை இன்னும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டு,


“நான் உங்ககிட்ட ஒன்னுச் சொல்லவாங்க? என்னை யாருமே இப்படி புரிஞ்சிக்கிட்டதே இல்லை! எங்க ஆத்தாவும் எங்களோட வாழ்வாதாரத்தைப் பத்தி தான் யோசிச்சாங்க, அதே மாதிரி என்னை எல்லா வீட்டு வேலையையும் பார்க்க வச்சாங்க! நானும் அவங்க சொன்னதை எல்லாம் வாய் பேசாமல் செஞ்சேன்! காட்டுக்கு வந்து வேலை பார்க்க ஆரம்பிச்சதுக்கு அப்பறமும் கூட அங்கே எனக்குன்னு தோழிங்களைச் சேர்த்து வைக்கனும்னுக் கூட நான் யோசிக்கலை! அப்படி யாரையாவது என்னோட தோழியாக்கி இருந்தாலாவது என் மனசில் இருக்கிறதை எல்லாம் அவகிட்ட கொட்டித் தீர்த்து இருப்பேனோ, என்னவோ! இப்படியே என்னோட ஆசைகள், கவலைகள், ஆத்திரங்கள்ன்னு எல்லாத்தையுமே என் மனசிலேயே போட்டுப் பூட்டி வச்சிட்டு ஒரு இயந்திர மனுஷி மாதிரி இருந்தேன்! அப்போ தான் செந்தாவோட கல்யாணத்தைப் பத்தியும், அவளோட கர்ப்பத்தைப் பத்தியும் தெரிய வந்துச்சு! அப்போ நான் ரொம்ப அதிர்ச்சி ஆகிட்டேன்! அவளை மாதிரி தானே நாமளும்? நமக்கு ஏன் இந்த ஆசைகள் எல்லாம் தோணலைன்னு யோசிச்சுப் பார்த்தேன்! எந்தங்கச்சியோட விஷயத்தைக் கேள்விப்பட்டதுக்கு அப்பறமாக எங்கேயாவது கண் காணாத இடத்துக்குப் போயிடலாம்ன்னு நானும், ஆத்தாவும் யோசிக்கும் போது தான் நீங்க வந்து எங்களை இங்கே கூட்டிட்டு வந்தீங்க! அதுக்கப்புறம் இங்கேயிருந்து நான் போயிடலாம்ன்னு முடிவெடுத்தப்போ தான், நானே எதிர்பார்க்காத விதமாக நம்மக் கல்யாணம் நடந்துருச்சு! அப்பவும் எனக்கு இந்தக் கல்யாண வாழ்க்கை மேலே எந்தப் பிடிப்பும் இல்லை! ஆனால் நீங்க எனக்குக் கொடுத்த முக்கியத்துவமும், பாதுகாப்பும் தான் இப்போ, இந்த நிமிஷம் நான் உங்க கிட்ட என்னையே ஒப்படைச்சு இருக்கேன்!”என்றவளிடம், 


“நீ என்னை நம்பி ஒப்படைச்ச உன்னை நான் எப்பவும் பாதுகாப்பாக வச்சுக்குவேன்!”எனக் கூறி அவளது நெற்றியில் இதழ் பதித்தான் திருவாதிரன். 


அதில் அவனைக் காற்றுப் புகாத வண்ணம் கட்டிக் கொண்டு இன்னும் ஒரு கூடலுக்கு அடி போட, 


அதற்குத் தானும் இசைந்து கொடுத்தாள் பூவிழி.


அதற்குப் பிறகுக் களைப்படைந்து தூங்கிப் போய் விட்டார்கள் அவ்விருவரும். 


மறுநாள் காலையில் முதலில் கண் விழித்தது என்னவோ பூவிழி தான்! 


அவளுக்குத் தனது கணவனின் அழைப்பு இதத்தைக் கொடுத்தாலும் தனது உடை இல்லாத உடலைக் கண்டதுமே கணவனிடமிருந்து விலகித் தன்னைப் போர்வையில் சுற்றிக் கொண்டுத் தன் ஆடைகளைத் தேடி எடுத்து அணிந்து விட்டுக் கணவனை நோக்க, 


அவனோ கட்டிலில் சாவகாசமாகப் புரண்டுப் படுத்தான். 


அதில் குறுநகையை உதிர்த்து விட்டு,”ஏனுங்க! விடிஞ்சிருச்சு! எழுந்திருங்க”என்று அவனருகில் சென்று எழுப்பினாள் பூவிழி. 


ஆனால் தனது விழிகளைத் திறக்காமலேயே,”நீ குளிச்சிட்டியா?”என அவளிடம் கேட்டிருந்தான் திருவாதிரன். 


“ம்ஹூம். இன்னும் இல்லைங்க”என்றதுமே அவளைத் தன்னருகில் இழுத்து அவளது இதழைச் சிறை பிடித்து விட்டு விலகியவனை, 


“ஏங்க! நாம கிளம்பிக் காட்டுக்குப் போகனும்! அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா? இல்லையா?”என்று கணவனிடம் பொய்யாக கோபப்பட்டாள் பூவிழி. 


“நல்லாவே ஞாபகம் இருக்கும்மா. என்னைக் கொஞ்சம் உற்சாகப்படுத்திக்கத் தான் உங்கிட்ட இருந்து முத்தத்தை எடுத்துக்கிட்டேன்”எனக் கூறி விட்டுப் படுக்கையில் இருந்து எழுந்தான் திருவாதிரன். 


அதற்குப் பிறகுத் தங்களது காட்டிற்குச் செல்வதற்காகத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு உணவு உண்பதற்காகச் சாப்பாட்டு மேசைக்கு வந்தார்கள் இருவரும். 


அவர்களைப் பார்த்ததுமே வேலையாட்கள் உணவைப் பரிமாறத் தொடங்கவும், 


“நான் இன்னைக்குக் காட்டுக்கு வர்றதுக்குக் கொஞ்சம் தாமதம் ஆகலாம் திரு. அதனால் நீங்க ரெண்டு பேரும் முன்னே போங்க. நான் அப்பறமாக வர்றேன்”என்று இளைய மகனிடம் தெரிவித்தார் நஞ்சுண்டன். 


அதற்குச்,”சரிங்கப்பா”எனக் கூறி விட்டான் திருவாதிரன். 


ஆனால்,“ஏன்? என்ன ஆச்சுங்க? உடம்புக்கு எதுவும் நோவு வந்துடுச்சா?”என அவரிடம் அக்கறையாக வினவினார் ராஜகுமாரி. 


உடனே,”அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா. கொஞ்சம் தாமதமாகப் போனால் நல்லா இருக்கும்னு நினைச்சேன். அதான்”என்றுரைக்க, 


அதற்கு அவரும்,“ஓஹ் சரிங்க”என்றார்.


அந்தப் பேச்சு வார்த்தை முடிந்த பிறகுத் தான் அறிவொளியும், செந்தாழையும் உணவருந்த அங்கே பிரசன்னம் ஆனார்கள்.


அவர்களின் வரவை அறிந்து கொண்டு,”வாங்க. நீங்க ரெண்டு பேரும் காப்பிக் குடிக்கக் கூட வரலையேன்னு யோசிச்சிட்டு இருந்தேன்”என்று அவர்களிடம் மொழிந்தார் ராஜகுமாரி. 


“இவளுக்கு வாந்தி வர்ற மாதிரி இருக்குன்னுச் சொன்னாள்ம்மா. அதான், கொஞ்ச நேரம் கழிச்சு வரலாம்னு நினைச்சோம்”என அவருக்கு விளக்கம் அளித்தான் அறிவொளி. 


உடனே,”அப்படியா?”என்றவரோ, 


தன் மருமகளைப் பார்த்து, “இங்க பாரும்மா. உனக்கு வாந்தி வந்தால் எடுத்துடு. அதுக்கப்புறம் சூஸூ மட்டும் குடி. இல்லைன்னா அடுத்த தடவை ஆஸ்பத்திரிக்குப் பரிசோதனைக்குப் போறப்ப இதுக்கு ஏதாவது மாத்திரையைக் கேட்டு வாங்கிட்டு வாங்க. சரியா?”என்று தன் மருமகளிடம் அறிவுறுத்த, 


“சரிங்கத்தை. இப்போ எனக்குக் காப்பிக் குடிக்கனும்னுத் தோணுது. போட்டுத் தரச் சொல்றீகளா?”என்று அவரிடம் சோர்ந்து போன குரலில் கேட்டாள் செந்தாழை. 


“நானே போட்டு எடுத்தாரேன் மருமகளே”என்று அவளிடம் கூறி விட்டுச் சமையலறைக்குச் செல்ல எத்தனிக்கும் போது,


“நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டாச்சு. காட்டுக்குப் போயிட்டு வர்றோம்”என்று பொதுவாக அறிவித்தான் திருவாதிரன். 


“சரி. போயிட்டு வாங்க”என்று அவர்களுக்கு விடைகொடுத்து விட்டுத் தன் மருமகளுக்காக காப்பித் தயாரிக்கப் போய் விட்டார் ராஜகுமாரி. 


அதே சமயம் வீட்டிலிருந்து வாயிலிற்குச் செல்லும் திருவாதிரன் மற்றும் பூவிழியைக் கண்களில் ஏக்கத்துடனும், பொறாமையுடனும் அவர்களது தலைகள் மறையும் வரைப் பார்த்தாள் செந்தாழை. 


அவளது மனம் ஏனோ, முதல் முறையாகத் அவளின் தமக்கையின் அருகாமையைத் தேடியது எனலாம்! 


ஏனென்றால் தனது இந்தக் கர்ப்பக் காலத்தில் பெண்கள் யாவரும் தனது தாயையும், தாய் வீட்டுச் சொந்தங்களையும் தானே வெகுவாகத் தேடுவார்கள்! 


அதேபோல் தான், தனது அக்காவின் அன்பிற்காகவும், அக்கறைக்காகவும் ஏங்கினாள் செந்தாழை.


                          - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...

நிருதனின் பூவிழியே! - 1

  டிஸ்கிளைமர் : ஆன்ட்டி ஹீரோ கதை “நான் என்ன ஆனாலும் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் செந்தா!”என்று அவளது தலையிலடித்துச் சத்தியம் செய்து கொடுத்திருந்தான் அறிவொளி.  “எனக்கு உங்க மேலே கொள்ளை நம்பிக்கை இருக்குத் தானுங்க! ஆனால் உங்கக் குடும்பத்தை நினைச்சா தான் பயமாக இருக்கு! என்னை அவங்க எப்படி ஏத்துப்பாங்கன்னு நெஞ்செல்லாம் திக்குத் திக்குன்னு அடிச்சுக்குது!”என்று அவனது தோளில் சாய்ந்தவாறே நடுக்கத்துடன் உரைத்தாள் செந்தாழை. “நீ எதுக்கு அதையெல்லாம் நினைச்சுக் கவலைப்பட்ற? அது தான், நான் இருக்கேன்ல? நான் எங்க வீட்டாளுங்க எல்லார் கிட்டேயும் பேசி நம்மக் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறேன் புள்ளை! அதுவரைக்கும் பொறுமையாக இரு!”என்று கூறி அவளைச் சமாதானப்படுத்த முயன்றவனிடம்,  “நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் பொறுமையாக இருப்பேனுங்க! ஆனால் என் வயித்துல வளர்ந்துட்டு இருக்குற நம்மப் புள்ளப் பொறுமையாக இருக்க மாட்டானே!”என்றவளை உச்சபட்ச அதிர்ச்சியுடன் விழிகள் பிதுங்கிப் போய் நோக்கி,  “நீ என்னடி சொல்றவ? நெசந்தானா?”எனக் கேட்டிருந்தான் அறிவொளி.  “ஆமாம் பின்னே! இந்த விஷயத்தில் யாராவது பொய் சொ...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...