“அந்தப் பொண்ணு இனிமேல் நம்ம வீட்டில் தான் இருக்கனும்! அதுவும் அந்தப் பொண்ணோட வீட்டாளுங்களும் நம்ம வீட்டில் தான் தங்கனும்!”என்ற இளைய மகனைக் கண்டுக் கடுங்கோபம் எழுந்தாலும் அதை அவனிடம் வெளிப்படையாக காட்டும் துணிவில்லை அவனது பெற்றோரான நஞ்சுண்டனும், ராஜகுமாரியும்.
ஏனெனில் தங்கள் குடும்பத்தின் இளைய, இரண்டாம் வாரிசு என்றாலும் கூட நஞ்சுண்டனின் தந்தையின் ஜாதக அம்சத்தில் பிறந்திருந்ததாலேயே அவனை எதிர்த்துப் பேச வாய் எடுக்காமல் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தனர்.
அதே சமயம், ஒரே நாளில் தங்களது தலைவிதி மொத்தமாக மாறி விட்டதைக் கண்டு அவர்கள் வீட்டிலிருந்த அந்தப் பெரிய அறையில் சிறை வைக்கப்பட்டிருந்த அந்த தாயும், அவரது இளம் மகள்களும் மூலைக்கொரு ஆளாக உட்கார்ந்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல், அவர்களது அந்த தலைவிதி மாறுவதற்கான சட்டத்தை இயற்றி விட்டுத் தனது வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டிருந்தான் அந்த வீட்டின் இளைய வாரிசு திருவாதிரன்!

கருத்துகள்
கருத்துரையிடுக