காலையில் கண் விழித்த திவ்யனுக்கோ, தேர்விற்குத் தயாராக ஏழு நாட்கள் விடுமுறை கொடுத்து இருப்பதால் அதுவரையில் ஆரவி கல்லூரிக்குச் செல்லத் தேவையில்லை என்ற விஷயம் அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. அப்படியென்றால், பிரஹாசினி ஊருக்குக் கிளம்பும் போது ஒரு தடவையாவது அவளைப் பார்க்கும் வாய்ப்பு தனக்குக் கிடைக்கப் போவதில்லை என்ற ஏமாற்றத்துடன் படுக்கையை விட்டு எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வந்தான் திவ்யன். அந்தச் சமயத்தில், வெளியே பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. “உங்க அண்ணன் எழுந்துட்டா அவன் கிட்டயே கேளு டி. சும்மா என்னைப் போட்டு அனத்திட்டு இருக்கிறா!” என்று தாய் கூறியதைக் கேட்டதும், உடனே அறையை விட்டு வெளியே வந்தான் திவ்யன். அங்கே ஆரவி சுருங்கிய முகத்துடன் பாவமாக நின்றிருந்தாள் ஆரவி. அவளிடம் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தார் சோமசுந்தரி. “என்னாச்சு ம்மா? எதுக்குக் காலங்கார்த்தாலேயே இவளைத் திட்டிட்டு இருக்கீங்க?” என்று அவரிடம் வினவினான் மகன். அவன் தனக்கு ஏற்றுப் பேசியதைக் கண்டுப் புன்னகையுடன்,”அது ஒன்னும் இல்லண்ணா, எனக்கு எக்ஸாம்க்குப் படி...
Writer