முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 32

  அவர்களது அன்பின் தன்மையை அறிந்து, உள்ளம் பூரித்த, மௌனாவின் பெற்றோரான அன்னபூரணி மற்றும் சிவமணியும், "கண்டிப்பாக சம்பந்தி" என்று மஹதனின் தாய், தந்தையின் அழைப்பை ஏற்றுப் புன்னகைத்தார்கள். அவர்களுக்குக் குடிக்க எடுத்து வரச் சென்ற அகதாவை அழைத்து, "நீ எங்கே சமையல்கட்டிலேயே இருந்துக்கலாம்னு முடிவே செய்துட்டியா? பேசாமல் உட்கார்!" என அவளை அழைத்து தன்னுடன் அமர வைத்துக் கொண்டார் அன்னபூரணி. "இவங்க கூட ஊருக்குப் போயிட்டு, வேலை மட்டுமே பார்க்கனும்னு முடிவு செய்திருக்கியா அகதா?" என அவளிடம் கேட்டார் கௌசல்யா. அதில் சங்கடமாகப் புன்னகை செய்த அகதாவோ,"ஆமாம் மா. வேற என்ன செய்ய?" என்று வெற்றுப் பார்வையுடன் சொன்னாள். "அடுத்து வாழ்க்கையில் இன்னும் நீ இன்னும் உனக்கான நல்ல விஷயங்களைப் பார்க்கவே இல்லைடா! இப்போதைக்கு ஒரு பிரேக் எடுத்துக்கோ. உனக்கா தோனும்! சான்ஸ் கிடைக்கும். அதை யூஸ் பண்ணிக்க மட்டும், தயங்காதே!" என்று சரியான அறிவுரை ஒன்றை அவளுக்குக் கொடுத்தார் மஹதனின் அன்னை. அகதாவின் தயக்கமும், சங்கடமும் தீபக்கால் வந்தது என்பதை, அவளது தோழியும், தோழியின் கணவனும் அ...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 31

  அவளது உள்ளக் குமுறல் தெரியாமல்,  "குளிச்சிக்கோ மௌனா" என்று அவளிடம் சொன்னக் கௌசல்யா, மருமகளிடம் மாற்றுடையைத் தந்தார் கௌசல்யா. "சரிங்க அத்தை" என அதை வாங்கிக் கொண்டு குளிக்கப் போனாள் மௌனா. இவளைத் தயார் செய்து விட்டு, தங்கள் அறைக்குள் அடைந்து கொள்ள வேண்டும் என்பது கௌசல்யாவின் எண்ணமாக இருந்தது. அதற்கு முன்பாகவே, தன் அலுவலக அறைக்குப் போய் விட்டார் திருமூர்த்தி. மகனுடைய திருமண வேலையில், கவனம் வைத்திருந்தவருக்கு, இப்போது தான், கம்பெனி வேலைகளைப் பார்க்க நேரம் கிடைத்திருக்கிறது. தன் உடலைச் சுத்தம் செய்து விட்டு வந்தவளிடம், பால் நிறைந்த சொம்பைத் தந்தவர், அவளை உச்சி முகர்ந்து, நெற்றி வழித்து, மஹதனின் அறைக்குள் அனுப்பினார் கௌசல்யா. கட்டிலில் செய்யப்பட்டிருந்த அலங்காரத்தைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டு இருந்த மஹதனைத், மனைவியின் வருகை அவனை நிமிர்ந்து பார்க்கச் செய்தது. "வா மௌனா ம்மா" என்று அவளை இலகுவான குரலில் வரவேற்றான் மஹதன். "மஹி" என்றவளது அமைப்பிலிருந்தப் பதட்டத்தை உணர்ந்தவன், "ரிலாக்ஸ் டா. நாம முதல்ல ஏதாவது பேசலாமா? நீ வந்து என் பக்கத்தில...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 30

  "அதை அகதாவோட கண்ணு முன்னால் பண்ணினால், இன்னும் செம்மையா இருக்கும் டா!" என்று தீவிரமாக கூறினான் கிஷான். "அதுக்கு ஒரு நாளைக் குறிப்போம்" என்றவாறு தன்னைத் தயார்படுத்திக் கொண்டான் மஹதன். வெளியிலிருந்த அனைத்து பத்திரிக்கை நிருபர்களையும் உள்ளே அனுமதித்து, உணவுண்டு விட்டுக் காத்திருக்குமாறு வலியுறுத்திச் சென்றார் திருமூர்த்தி. மௌனாவும், மஹதனும் தங்களது அறையிலிருந்து ஒரே நேரத்தில் வெளியே வந்தார்கள். "வெளியே பிரஸ், மீடியா எல்லாம் இருக்காங்க. நம்மளை ஃபோட்டோஸ் அண்ட் வீடியோஸ் எடுப்பாங்க. அவங்களை எல்லாம் தாண்டி தான் காரில் போய் ஏறனும்" என்று அவர்களிடம் கூறி, மாமனார் மற்றும் மாமியாரை மனதளவில் தயார்படுத்தினான் மஹதன். ஆனால், மௌனாவிற்கு இது புதிதல்ல. இவன் மேலிருந்தக் காதலை உறுதி செய்த நாளிலிருந்து, அவளுக்கு இவையெல்லாம் பழக்கப்பட்டு விட்டது. அதனால், தனது உடல் மொழியைச் சாதாரணமாக வைத்திருந்தாள் மௌனா. "சரிங்க மாப்பிள்ளை" என்றவர்கள், தங்களது சம்பந்தியுடன் இணைந்து நடக்கத் தொடங்கினர் மௌனாவின் பெற்றோர். "நீ மௌனா கூடப் போகாதே முகி. மஹதன் அவங்களை பார்த்துப்பான்...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 29

  முக்தாவின் துணையுடன் மேடைக்கு வந்து சேர்ந்தாள் மௌனா. அன்னபூரணி மற்றும் சிவமணியுடன் உட்கார்ந்து கொண்டாள் அகதா. அந்த தாலி கட்டும் வைபவம் முழுவதிலும், நண்பர்களின் அருகிலேயே இருந்தனர் கிஷானும், முக்தாவும். மந்திரத்தை உச்சரித்து முடித்து விட்டு, தாலியை எடுத்து மஹதனிடம் கொடுத்தார் ஐயர். அதை வாங்கித், தன்னுடைய சரிபாதியாப் போகிறவளின் கழுத்தில், மூன்று முடிச்சுப் போட்டான் மஹதன். தங்களுக்கிடையே ஒரு சிலர் புகுந்தவிருந்த, ஏற்றத்தாழ்வுகளைக், கண்டு கொள்ளாமல், இப்போது ஊர் மெச்சும் ஜோடிகளாகத் திருமணப் பந்தத்தில் இணைந்து விட்டனர் மஹதனும், மௌனாவும். இருவரும் ஒரே நேரத்தில் தங்களது இணைகளுக்கு "ஐ லவ் யூ" என்று காதலைத் தெரிவித்துக் கொண்டனர். அதேபோல், மஹதன் மற்றும் மௌனாவிற்கு ஆனந்தக் கண்ணீர் கசிந்தது. "இரண்டு பேரும் சந்தோஷத்தில் அழறாங்க கிஷான்!" என அவர்களது காதலைப் பார்த்து வியந்தபடி அவனிடம் கூறினாள் முக்தா. "என்று நண்பன் அழுகுறானா?" என்று மஹதனின் கண்களை ஆராய்ந்தான் கிஷான். "டேய்! லைவ் போயிட்டு இருக்கு. அமைதியாக இரு" எனத் தனது விழிகளைத் துடைத்துக் கொண்டு, மௌனாவையும் ...