அதற்குப் பிறகான நாட்களில் எல்லாம் பரிபூரணியைப் பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொண்டு அவளைத் தொல்லை செய்யாமல் வகுப்பறையில் மட்டுமே அவளைத் தனது கண்ணியப் பார்வையால் பின் தொடரத் தொடங்கினாலும் கூட, அதே சமயத்தில் தனது படிப்பிலும் கவனத்தைச் செலுத்துவதை தவற விட்டு விடவில்லை அவன். ஆனால் இதையெல்லாம் அறியாமல் தனது முதுகலைப் படிப்பைப் படித்துக் கொண்டே தோழிகளுடன் சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியாகப் பொழுதுகளைக் கழித்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள். இங்கு விடுதியில் தனது நண்பர்களுடன் உரையாடிக் கொண்டு இருந்தான் ஆரண்யேஸ்வரன். “இந்த மாசம் லீவுக்கு ஊருக்குப் போவீங்களாடா?”எனக் கேட்டத் தங்களது சகத் தோழன் வினயிடம், “ஏன்டா நீ இந்த தடவை உன் ஊருக்குப் போகலையா?”என்க, “இல்லடா! அவங்க எல்லாரும் எங்க அக்காவைப் பார்க்க வெளிநாட்டுக்குப் போகப் போறாங்களாம். அதனால் என்னை இந்த தடவை வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க!”என்றிருந்தான். “ஓஹோ! ஆனால் நமக்கு ஒரு வாரம் லீவ் இருக்கே! அது வரைக்கும் நீ இங்கே தான் தங்கி இருப்பியா?”என அவனிடம் வினவினான் ஆரண்யேஸ்வரன். “இல்லைடா. என் கூட யூஜி படிச்ச ஃப்ரண்ட்டோட ரூமில் போய்...
Writer