முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெஞ்சிலே காதலின் கால்தடம் - 10

 


அதற்கடுத்து வந்த நாட்கள் முழுவதிலும் ஆரண்யேஸ்வரனும், பரிபூரணியும் தாங்கள் ஒருவரையொருவர் பார்ப்பதையும், பேசுவதையும் தவிர்த்துக் கொள்ளத் தொடங்கினர். 


ஆரண்யேஸ்வரனோ தங்களது அலுவலக வேலையில் முழுமூச்சாக இறங்கி விட, 


அவனைப் போலவே தானும் சிவசக்தியுடன் தனது நேரத்தைச் செலவிடுவதில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டாள் பரிபூரணி. 


தங்களது இந்த மாற்றத்தைக் குடும்ப உறுப்பினர்கள் யாவரும் அறியாமல் சாமர்த்தியமாக நடந்து கொண்டார்கள் எனலாம்! 


அப்படியே மற்றவர்களுக்குத் தங்களது இந்தச் செய்கைகள் தெரிந்தாலும் பெரிதாக ஒன்றும் சொல்லப் போவதில்லையே என்றெண்ணிக் கொண்டு இதையே தொடர, 


வியாழக்கிழமை அன்று காலை உணவின் போது, தான் தன்னுடைய பெற்றோரைச் சந்திப்பதற்காக ஊருக்குப் போகப் போவதை மீண்டுமொரு முறை அந்த வீட்டினர் அனைவருக்கும் அறிவித்து விட்டிருந்தாள் பரிபூரணி. 


அதைக் கேட்டதும்,”ம்ஹ்ம். ஞாபகம் இருக்கும்மா. நாளைக்கு எங்கக் காரிலேயே உங்க வீட்டுக்குப் போயிட்டு வந்துட்றியாம்மா?”என்று அவளிடம் அக்கறையுடன் வினவினார் சொக்கநாதன்.


“அதெல்லாம் வேண்டாம் சார். பக்கத்து ஊரு தான். நான் பஸ்ஸிலேயே போயிக்கிறேன்”என்று மறுத்து விட்டாள் பரிபூரணி. 


வேலைக்கு வந்த இடத்தில் இந்த மாதிரியான சலுகைகளை எதிர்பார்க்கக் கூடாது என்றத் தனது பெற்றோர் கூறிய அறிவுறுத்தலைத் தனது தாரக மந்திரமாக கொண்டிருந்ததாலேயே இப்படி மறுத்துப் பேசி இருக்க, 


அதை மற்ற அனைவரும் புரிந்து கொண்டார்கள்.


ஆகவே,”சரிம்மா. உன் இஷ்டம். ஆனால் உன்னோட பாதுகாப்பு எங்களுக்கு ரொம்ப முக்கியம். அதனால் எங்களோட ஆள் ஒருத்தர் நீ போற பஸ்ஸில் வந்து நீ உங்க வீட்டுக்குள்ளே போகிற வரைக்கும் பார்த்துட்டு வருவார். அதில் உனக்கு ஏதாவது மாற்றுக் கருத்து இருக்காம்மா?”எனக் கேட்டிருந்தார் சைலபுத்திரி.


அதில் தனது விழிகளில் கனிவைத் தேக்கி வைத்துக் கொண்டு அவர்களை ஏறிட்டுப் பார்த்து,”இதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை சார், மேம்”என அந்தத் தம்பதியிடம் தனது சம்மதத்தை தெரிவித்தாள் பரிபூரணி. 


“அப்போ சரிங்க. நாங்க உங்களுக்காக எந்தச் செக்யூரிட்டியை அனுப்பப் போறோம்ன்றதை இன்னைக்குச் சாயந்தரமே உங்களுக்குச் சொல்லிட்றோம்”என்று அவளிடம் அறிவித்தான் கங்காதரன். 


“ஓகே சார். தாங்க்ஸ்”என அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் பரிபூரணி.


அப்போது அவள் சற்றும் எதிர்பாராத விதமாக,”நீங்க ஏன் உங்களுக்குக் கார் வேண்டாம்னுச் சொல்றீங்கன்றதுக்கான காரணத்தை தெரிஞ்சிக்கலாமா மிஸ்?”என்றிருந்தான் ஆரண்யேஸ்வரன். 


உடனே அவனை நிதானமாகப் பார்த்து,”நான் இங்கே வேலைப் பார்க்க வந்திருக்கேன் சார். அதனால் இங்கே நீங்க கொடுக்கிற இந்தச் சலுகைகளை என்னால் ஏத்துக்க முடியாது! அதனால் தான் காரை வேண்டாம்னு சொன்னேன்”என்று அவனுக்குத் தீர்க்கமாகப் பதிலளித்து விட்டிருந்தாள் பெண்ணவள். 


அதைக் கேட்டவுடன் அவனது முகம் சுருங்கிப் போய் விட்டது. 


ஆனாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டு,”ஓஹ் ஓகே மிஸ். பரிபூரணி”என்று அவளிடம் கூறி விட்டு, 


”நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன்”என்றவனோ, 


“மாமா! நான் கிளம்பி முன்னாடி போறேன். நீங்கப் பொறுமையாகச் சாப்பிட்டுட்டு வாங்க”என்று தன் தங்கைக் கணவனிடம் அறிவுறுத்தி விட்டு, 


“நான் ஆஃபீஸூக்குப் போயிட்டு வர்றேன்”என்று அனைவருக்கும் பொதுவாக தெரிவித்து விட்டு வீட்டிலிருந்து வெளியேறிக் காரில் ஏறி அலுவலகத்திற்கு விரைந்தான் ஆரண்யேஸ்வரன். 


ஆனால் அங்கேயிருந்த மற்றவர்களுக்கு அவனிடம் பரிபூரணிப் பேசிய வார்த்தைகள் சங்கடத்தை அளித்தாலும் கூட அவளது நிலையிலிருந்து அதை யோசித்துப் பார்க்கையில் அது நியாயமாகவே பட்டதாலும், அத்துடன் அந்தப் பேச்சை வளர்க்காமல் ஆரண்யேஸ்வரனே அங்கிருந்து கிளம்பி விட்டதாலும் இதற்கு மேல் தாங்களும் இந்தப் பேச்சை வளர்க்காமல் விட்டு விட்டார்கள் சொக்கநாதன், சைலபுத்திரி மற்றும் கங்காதரன். 


அதற்குப் பிறகு அவர்கள் அனைவரும் தங்களது காலை உணவை உண்டு முடித்து விட்டார்கள். 


ஆனால் இதை விட மிகவும் முக்கியமான யோசனையில் இறங்கி அது கொடுத்த மன வருத்தத்தை தனது முகத்தில் காட்டிக் கொண்டிருந்த சிவசக்தியை ஏறிட்டுப் பார்த்து,”என்னாச்சும்மா? ஏன் இப்படி சோகமாக இருக்கிற?”என்று அவளிடம் ஆதூரமாக விசாரித்தாள் பரிபூரணி. 


அதற்கு அவளோ,“அப்போ நீங்க அந்த த்ரீ டேய்ஸ் இங்கே என் கூட இருக்க மாட்டீங்களா ஆன்ட்டி?”எனச் சோகமான முகத்துடன் வினவினாள். 


அதில் பாகாய் உருகிப் போய்,”ஆமாம்டா. நானும் என்னோட அப்பா, அம்மாவைப் பார்க்கனும்ல? அதான். இதை நான் உங்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கேன் தானே?”என்றதும், 


“ம்ம். நீங்கச் சொல்லி இருக்கீங்க தான் ஆன்ட்டி. ஆனால் நான் உங்களை அந்த த்ரீ டேய்ஸூம் ரொம்பவே மிஸ் பண்ணுவேனே! அதான், சோகமாக இருக்கேன்!”என்று தன் மொட்டிதழ்களைப் பிரித்து அவளிடம் வருத்தமாக கூறியிருந்தாள் சிவசக்தி. 


அதில் மனம் இளகிப் போனவளோ,”மூனு நாள் தான்ம்மா. நீ இங்கே இருக்கிற உன் ஃபேமிலிக் கூட நல்லா டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு இரு. நான் வந்ததும் நாம நிறைய ஃபன்(Fun) பண்ணலாம். அதே மாதிரி சண்டே உன்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் துர்கா ஆன்ட்டியும் வருவாங்க தானே? அவங்க கூட விளையாடு. சரியா?”என அவளுக்குப் புரியும் விதத்தில் சொன்னாள் பரிபூரணி. 


அதைக் கேட்டதும்,”ம்ஹ்ம். ஆமாம் ஆன்ட்டி. அவங்களும் வருவாங்கள்ல? அப்போ சரி. நீங்க சொன்ன மாதிரி நான் குட் கேர்ள் ஆக நடந்துக்கிறேன்!”என்று அவளுக்கு உறுதி அளித்தாள் சின்னவள். 


“ம்ஹ்ம். நீ எப்பவும் குட் கேர்ள் தான்டா”என்று அவளைப் பாராட்டவும், 


“சரி. நானும் கிளம்புறேன்ப்பா, ம்மா”எனத் தன் பெற்றோரிடமும், 


“பை சக்திம்மா”என்று தன் மகளிடமும், 


“போயிட்டு வர்றேன் சிஸ்டர்”என்று பரிபூரணியிடமும் விடைபெற்றுக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினான் கங்காதரன். 


அவன் சென்றதும் பெரியவர்களிடம் சொல்லி விட்டுத் தாங்கள் இருவரும் தங்களது ஆஸ்தான அறைக்குச் சென்று விட்டனர். 


அங்கே சிவசக்திக்குச் சின்னச், சின்ன ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விட்டாள் பரிபூரணி. 


அவற்றையெல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளத் தொடங்கினாள் அந்தக் குட்டிப் பெண். 


அதில்,“உனக்கு இப்படி இங்கிலீஷ் வேர்ட்ஸ்ஸைப் படிக்க ரொம்பப் பிடிக்குமா சக்தி?”என அவளிடம் வினவவும், 


அந்தக் கேள்வியில், தான் எழுதுவதை நிறுத்தி விட்டு அவளை நிமிர்ந்து பார்த்து,”ஆமாம் ஆன்ட்டி. எனக்கு ரொம்பப் பிடிக்கும்!”என்று அவளுக்குக் குதூகலமாகப் பதிலளித்தாள் சிவசக்தி. 


“அப்படின்னா இந்த இங்கிலீஷ் வேர்ட்ஸ் படிக்கிறப் பிராக்டிஸை சனி, ஞாயிற்றுக்கிழமை வச்சுக்கலாமா?”என அவளிடம் கேட்டிருந்தாள் பரிபூரணி. 


அதில் தன் முகம் மலர,”வச்சுக்கலாம் ஆன்ட்டி. நானும் இதையெல்லாம் நல்லாப், படிச்சுத் தெரிஞ்சிக்கிட்டு எங்கம்மா குணமாகி வந்ததும் அவங்க கிட்ட பேசிக் காட்டுவேன். இதுக்கு முன்னாடி கூட அம்மா எனக்கு இந்த மாதிரிக் கொஞ்சம் இங்கிலீஷ் வேர்ட்ஸ்ஸைச் சொல்லிக் கொடுத்து இருக்காங்க!”என்றவளோ, 


தன்னுடைய தாயிடம் இருந்து கற்றுக் கொண்ட ஆங்கில சொற்களை அவளிடம் பகிர்ந்து கொண்டாள் சிவசக்தி. 


அதைக் கேட்டு விட்டு,”சூப்பர்! உனக்கு உங்கம்மா நிறைய வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்து இருக்காங்களே! நானும் எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் உனக்குச் சொல்லித் தர்றேன்”என்று அவளுக்கு வாக்களித்தாள் பரிபூரணி. 


“ஓகே ஆன்ட்டி”எனச் சமர்த்தாக கூறி விடவும், 


அதற்குப் பிறகு அவளுக்கு இன்னும் சில ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்கும் வேலையில் முனைப்பாகி விட்டாள். 


அதே நேரத்தில் இங்கே தங்களது அறையில்,”ஏன்ம்மா! நம்ம ஈஸ்வரனுக்கும், அந்தக் கேர்டேக்கர் பொண்ணுக்கும் அப்பப்போ முட்டிக்குதே! எனக்கு இது சரியாகப்படலை!”என்று தன் மனைவியிடம் பகிர்ந்து கொண்டார் சொக்கநாதன். 


அதைக் கேட்டு விட்டு,”ஆமாம்ங்க. எனக்கும் அது நல்லாவே தெரியுது! ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு இது சரியாகப்படுது தான்! ஏன்னா, இவங்க இப்படி இருக்கிறது தான் நல்லது! அப்போ தான், நம்மத் தூர்கா இந்த வீட்டுக்கு மருமகளாக வர முடியும்!”என்று தன் முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு அவரிடம் சொன்னார் சைலபுத்திரி. 


உடனே,”ஆமால்ல! இதைப் பத்தி நான் யோசிச்சுப் பார்க்கவே இல்லையேம்மா!”என்றிருந்தார் அவரது கணவர். 


“ஆனால் அந்தப் பொண்ணு வந்த முதல் நாளில் இருந்தே எனக்கு இதே யோசனையாகத் தான் இருக்குங்க. இப்படி ஒரு சின்ன வயசுப் பொண்ணை நம்ம வீட்டில் வேலைக்குச் சேர்த்து இருக்கோம். நம்மப் பையனுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை! இதை ஊர் தப்பாகப் பேசவும் வாய்ப்பிருக்கு வேற! அதுவும் இல்லாமல் ஈஸ்வரனுக்கும், துர்காவுக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கிறதைப் பத்தியும் நமக்கு ஒரு யோசனை இருக்குத் தானேங்க? அதான், ஆரம்பத்திலேயே இவங்க ரெண்டு பேருக்கும் சேரலைன்னா நல்லது தான்!”என்று அவருக்கு விளக்கம் அளிக்கவும், 


“அந்தப் பூரணிப் பொண்ணைப் பார்த்தாலும் அப்படிப்பட்ட ஆளு மாதிரித் தெரியலைம்மா”என்றவரிடம், 


“நம்மப் பையனை மாதிரியே அந்தப் பொண்ணும் தங்கம் தான்ங்க! அவளைப் பார்த்துப், பேசி நல்லா தெரிஞ்சிக்கிட்டுத் நான் இதைச் சொல்றேன்! ஆனாலும் எனக்குள்ளே இது உறுத்திக்கிட்டே இருக்கு! நம்ம ஆரு கண்ணு முழிச்சு, எழுந்து நடமாட்ற வரைக்குமே எனக்குத் திக்குத், திக்குன்னுத் தான் இருக்கும்!”என்று கலக்கத்துடன் உரைத்தார் சைலபுத்திரி. 


“அதெல்லாம் நாம நினைச்ச மாதிரித் தான் எல்லாம் நல்லபடியாக நடக்கும்மா. நீ மனசைப் போட்டுக் குழப்பிக்காதே!”எனக் கூறி அவரை ஆறுதல்படுத்தினார் சொக்கநாதன். 


“ம்ஹ்ம். சரிங்க”என்றவரின் முகம் அப்போதும் கூடத் தெளிவில்லாமல் தான் இருந்தது எனலாம்! 


இதே சமயம் தங்களது அலுவலகத்தில்,”என்ன மாப்பிள்ளை அந்தப் பொண்ணு உன் மூஞ்சியில் அடிச்சா மாதிரிப் பேசியதையே நினைச்சிட்டு இருக்கியா என்ன?”என்று தன் மனைவியின் தமையனிடம் அனுசரணையுடன் வினவினான் கங்காதரன்.


அதில் திடுக்கிட்டுப் போனாலும் கூடத் தனது முகத்தில் அதைக் காட்டிக் கொள்ளாமல், அவனைப் பார்த்து,”அதெல்லாம் இல்லை மாமா. அந்தப் பொண்ணைப் பத்தி நினைக்க என்ன இருக்கு? நான் வேற ஒன்னைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்!”என்று பொய்யுரைத்து விட்டிருந்தான் ஆரண்யேஸ்வரன். 


“அப்படியா சொல்ற? ஆனால் நீ அதைப் பத்தி தான் யோசிக்கிறன்னு எனக்கு உள்ளுணர்வில் தோணுதே!”என அவனிடம் சந்தேகத்துடன் கூறவும், 


“போங்க மாமா! நான் ஏன் தேவையில்லாமல் அந்தப் பொண்ணைப் பத்தி யோசிக்கப் போறேன்! நான் கேட்டதுக்கு அவ பதில் சொல்லிட்டாள். அவ்வளவு தான். அதை எதுக்கு இவ்வளவு நேரமாக நான் யோசிக்கப் போறேன்”என்றவனை முழுமையாக நம்ப முடியாமல் பார்த்து விட்டு வேலையில் கவனத்தைச் செலுத்தினான் கங்காதரன். 


                      - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...