முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெஞ்சிலே காதலின் கால்தடம் - 8

 


அதை இனம் கண்டு கொண்டு அவனைப் பார்த்து விரக்தியாகப் புன்னகைத்து விட்டு,”அவங்களைக் காணலையே?”எனக் கங்காதரனின் பெற்றோரிடம் விசாரித்தாள் பரிபூரணி. 


“அவ ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்றா. அவளுக்கு அதிகமாக லீவ் கிடைக்காது. அதான், அவளால் இன்னைக்கு வர முடியலை! வாரக் கடைசியில் வருவாள்”என அவளுக்குப் பதிலளித்தார் ருக்மணி. 


“ஓஹ். சரிங்க மேம்”என்றதுமே, 


“உங்கப்பாவும் ஏதோவொரு சாஃப்ட்வேர் கம்பெனியில் தான் வேலை செய்றார்ன்னுச் சொன்னியேம்மா. அதோட பேரு என்ன?”என்று பரிபூரணியிடம் கேட்டிருந்தார் சீராளன். 


உடனே அவருக்குத் தன் தந்தை வேலை பார்க்கும் மென்பொருள் கம்பெனியின் பெயரைச் சொல்லவும், 


அதைக் கேட்டதும் சொக்கநாதன் மற்றும் சைலபுத்திரி மற்றும் கங்காதரனைப் போலவே சீராளனும், ருக்மணியும் அதிர்ச்சியில் அவளை விழி விரித்துப் பார்த்தார்கள். 


அதில் தர்ம சங்கடமாகிப் போனது பரிபூரணிக்கு. 


அதை அவதானித்து விட்டு,”அது அவங்க அப்பா செய்ற வேலை! ஆனால் இவங்க தனக்குன்னு ஒரு அடையாளம் கிடைக்கனும்னு நினைச்சு இந்த வேலையை ஒரு சேவையாகச் செய்யனும்னு விருப்பப்பட்டு நம்ம வீட்டுக்கு வேலைக்கு வந்திருக்காங்க! அதுக்காகவே இவங்களைப் பாராட்டலாமே?”என்று தன் திருவாயைத் திறந்து மொழிந்த ஆரண்யேஸ்வரனைத் தன் விலோசனங்களைப் பெரியதாக்கிக் கொண்டு நோக்கினாள் பெண்ணவள். 


அதை அனிச்சையாக உணர்ந்து கொண்டு அவளைத் திரும்பிப் பார்க்க, 


உடனே அவனை நன்றியுணர்வு நிறைந்தக் கண்களால் ஏறிட்டாள் பரிபூரணி. 


அதில் சிக்கிக் கொள்ளத் தொடங்கிய தனது விழிகளை மீட்டெடுத்துக் கொண்டுத் தனது தங்கையின் புகுந்த வீட்டாரைப் பார்த்தான் ஆரண்யேஸ்வரன். 


அவனது வார்த்தைகளைக் கேட்டு அதில் வியப்பு மிகுந்த விழிகளுடன் பரிபூரணியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சீராளன் மற்றும் ருக்மணி. 


ஆனால் அங்கேயிருந்த மற்றவர்களுக்குப் பரிபூரணியைப் பற்றிய அந்த தகவல்கள் அனைத்தும் முன்னரே தெரிந்து இருந்ததால், 


“ஆமாங்க சம்பந்தி. இந்தப் பொண்ணோட அப்பாவோட வேலைக்கும், இவங்களோட விருப்பத்துக்கும் சம்பந்தம் இல்லை தானே? நாமப் பார்க்க வேண்டியது இவங்க இங்கே தன்னோட வேலையைச் சரியாகப் பார்க்கிறாங்களான்றது தான்!”எனத் தன் மகளின் மாமனார் மற்றும் மாமியாரிடம் விளக்கம் அளித்தார் சைலபுத்திரி. 


“ம்ஹ்ம். அதுவும் சரி தான்”என்ற ருக்மணியோ,


இந்தப் பரிபூரணிப் பெண்ணிற்காக முன் வந்து அவளுக்குப் பரிந்து பேசிய ஆரண்யேஸ்வரனை யோசனையாகப் பார்த்து விட்டு, 


“நீங்க எல்லாரும் ஞாயிற்றுக்கிழமை ஃப்ரீ தானே? துர்கா இங்கே வந்து உங்க எல்லாரையும் பார்க்கனும்னு ஆசைப்பட்றாள்”என்று அனைவரிடமும் வினவினார் ருக்மணி. 


“நாங்க எல்லாரும் அன்னைக்கு ஃப்ரீ தான் சம்பந்தியம்மா”எனக் கூறியிருந்தார் சொக்கநாதன். 


“அப்படின்னா சரி. அவளை இங்கே கூட்டிட்டு வர்றோம் சம்பந்தி”என்றதுமே, 


இதற்கு மேல் இவர்களிடம் மறைக்க முடியாது என்றெண்ணி, 


“ஆனால் இதில் எனக்கு ஒரு மாற்றுக் கருத்து இருக்கு மேம்!”என்று சங்கடத்துடன் மொழிந்தாள் பரிபூரணி. 


உடனே அனைவரின் பார்வையும் அவளை முற்றுகையிட்டது. 


“எனக்கு இந்த வேலைக் கிடைச்சதுமே எங்கப்பா, அம்மாவைப் பார்க்க வர்றேன்னு அவங்க கிட்ட சொல்லி இருந்தேன். அவங்க என்னை வெள்ளிக்கிழமையே வரச் சொல்லி இருந்தாங்க! இதுக்கு அப்பறம் நான் எப்போ எனக்கு லீவ் கிடைச்சு நான் எங்க வீட்டுக்குப் போவேன்னு எனக்குத் தெரியாது. அதனால் நான் அந்த மூனு நாளும் அவங்க கூடப் போய்த் தங்கிட்டு வரலாம்ன்னு விருப்பப்பட்றேன்”என்று அனைவருக்கும் பொதுவாக அறிவித்து விட்டிருந்தாள் பரிபூரணி. 


அதைக் கேட்டதுமே,”அப்படியாம்மா? நல்லவேளை நீ இதை முன்னாடியே சொல்லிட்ட! இந்த மூனு நாள் லீவ் இந்த மாசத்துக்கு மட்டும் தானே?”என அவளிடம் விசாரித்தார் சைலபுத்திரி. 


“ம்ஹ்ம். ஆமாம் மேம்”என்றப் பதிலில் நிம்மதியுற்று, 


“சரிம்மா. நீ போயிட்டு எப்போ திரும்பி வருவ?”என்றதற்கு, 


“ஞாயிற்றுக்கிழமை நைட் பஸ் ஏறிக் விடியற்காலையில் வந்திடுவேன் மேம்”என்று பதிலளித்தாள் பரிபூரணி. 


“ஓகேம்மா”என்றுரைத்து விட்டார் சைலபுத்திரி. 


அப்போது,”அப்போ நாங்க துர்காவை ஞாயிற்றுக்கிழமை இங்கே கூட்டிட்டு வர வேண்டாமா?”எனக் கேட்டார் சீராளன். 


“ஏன் இப்படி கேட்கிறீங்க சம்பந்தி? இந்தப் பொண்ணை அடுத்த வாரம் வந்து கூடத் துர்கா மீட் பண்ணட்டும். இதுக்காக எல்லாம் அவளை இங்கே அழைச்சிட்டு வராமல் இருக்க வேண்டாமே? அவ இந்த வீட்டுப் பொண்ணு. அவ இங்கே எப்போ வேணும்னாலும் வரலாம். அதனால் ஞாயிற்றுக்கிழமை அவளைக் கண்டிப்பாக கூட்டிட்டு வாங்க!”என்று அறிவுறுத்தினார் சொக்கநாதன். 


அதில் தங்களது முகங்கள் மலர்ந்து போய்,”சரிங்க சம்பந்தி”என்று கூறி விட்டிருந்தனர் ஆருத்ராவின் மாமனார் மற்றும் மாமியார். 


அப்போது தங்களுக்கு வேலை இருப்பதாக அனைவரிடமும் சொல்லி விடைபெற்றுக் கொண்டு கங்காதரனும், ஆரண்யேஸ்வரனும் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார்கள். 


அதே சமயத்தில்,“நாம இப்போ போய்க் கலர் செய்யலாமா ஆன்ட்டி?”என்று தன்னிடம் மெல்லிய குரலில் ஆர்வத்துடன் கேட்ட சிவசக்தியைப் பார்த்து, 


“உன் இரண்டு தாத்தா, பாட்டிங்க கிட்டேயும் அனுமதி வாங்கிட்டுப் போவோம்மா”என்று அவளிடம் மொழிந்து விட்டு, 


தங்களது உரையாடலைக் கவனித்து விட்டுத் தங்கள் இருவரின் மீதும் கவனத்தைச் செலுத்திய பெரியவர்களிடம் சிவசக்தியின் வேண்டுகோளை முன் வைத்தாள் பரிபூரணி. 


அதைக் கேட்டவுடனேயே,”ஹாங். நீங்கப் போய் படம் வரைங்க! உங்களுக்குக் கொறிக்க ஏதாவது ஸ்நாக்ஸ் வேணும்னா கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க”என்று அவர்களுக்கு அனுமதி அளித்து விட்டார் சைலபுத்திரி. 


உடனே அங்கேயிருந்து,'தப்பித்தோம், பிழைத்தோம்!'என்ற ரீதியில், 


“ஷூயர் மேம்”என அவரிடம் கூறி விட்டு, 


“சக்திம்மா! வா போகலாம்”என்று அவளை அறைக்குக் கூட்டிச் சென்று விட்டாள் பரிபூரணி. 


அவர்கள் சென்றவுடன் தங்களது குரலைச் செருமிக் கொண்டு,”நம்ம ஈஸ்வரனுக்கு வரன் எதுவும் பார்த்துட்டு இருக்கீங்களா சம்பந்தி?”என்று தங்களது மகனின் மாமனார், மாமியாரிடம் வினவினார் ருக்மணி. 


அதைக் கேட்டதும் தங்களை ஒருவரையொருவர் பார்த்து விட்டு,”இல்லையே சம்பந்தி. இன்னும் அவனுக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கலை!”எனப் பதிலளித்தார் சைலபுத்திரி. 


“ஏன் சம்பந்தி?”என்று கேட்டார் சீராளன். 


“நாங்க அவன்கிட்டே ஏற்கனவே இதைப் பத்திப் பேசினோம் சம்பந்தி. அவன் இப்போதைக்கு வேண்டாம்னு சொல்லிட்டான். அதுவும் ஆரு இந்த நிலைமையில் இருக்கும் போது இந்தப் பேச்சை எடுக்காதீங்கன்னுக் கறாராகச் சொன்னதுக்கு அப்பறமும் இதைப் பத்தி அவங்கிட்டே எங்களால் மறுபடியும் பேச முடியலை”என்று அவர்கள் இருவரிடமும் விளக்கம் அளித்தார் சொக்கநாதன். 


அதைக் கேட்டவர்களின் முகங்கள் இரண்டும் கூம்பிப் போய் விட்டது. 


உடனே தாங்கள் இருவரும் தங்களுக்குள் ஒரு அர்த்தம் நிறைந்தப் பார்வையைப் பரிமாற்றிக் கொண்டு, 


“இப்போதைக்குப் பொண்ணுப் பார்க்க வேண்டாம்னு தான் சொல்லி இருக்கான் சம்பந்தி. ஆனால் ஆரு நடமாட்ற அளவுக்குக் கொஞ்சம் சரியாகி வந்துட்டாள் - ன்னா தன்னோட கல்யாணத்துக்கு ஈஸ்வரன் ஓகே சொல்ல வாய்ப்பு இருக்குச் சம்பந்தி”என்றிருந்தார் சைலபுத்திரி. 


அதில் அவர்களது முகங்களில் இருந்த வருத்தம் மறைந்து அவர்களது வார்த்தைகள் கொடுத்த மறைமுகமான நம்பிக்கையில் ஜொலிக்க ஆரம்பித்தது எனலாம்!


அதே மகிழ்வான மனநிலையுடன்,”அப்போ நாங்க கிளம்புறோம் சம்பந்தி”என்று தாங்கள் அமர்ந்திருந்த நீள்சாய்விருக்கையில் இருந்து சீராளனும், ருக்மணியும் எழுந்து கொண்டனர். 


“இருங்க. சக்தியை வரச் சொல்றேன்”என்றச் சைலபுத்திரியோ, 


வேலையாளை அனுப்பிச் சிவசக்தியையும், பரிபூரணியையும் வரவேற்பறைக்கு அழைத்து வருமாறு கட்டளையிட்டு அனுப்பி வைக்க, 


அந்த வேலையாளும் தனது கடமையைச் செவ்வனே செய்து விடவும், அங்கே பிரசன்னம் ஆனார்கள் அவ்விருவரும். 


அதில் தங்களது பேத்தியை அணைத்து, அவளது நெற்றியில் முத்தமிட்டு, அவளை உச்சி முகர்ந்து விட்டு, 


“நாங்கப் போயிட்டு இன்னொரு நாளைக்கு வர்றோம்டா சக்திம்மா”என்று அவளிடம் வாஞ்சையாக கூறினார்கள் சீராளன் மற்றும் ருக்மணி. 


“சரிங்க தாத்தா, பாட்டி”என்று அவர்களுக்கு விடை கொடுக்கும் விதமாகப் பேசினாள் பேத்தி. 


அவளது தாடையைப் பற்றிக் கொஞ்சி விட்டு, 


“வாழ்த்துக்கள்ம்மா. நாங்கப் போயிட்டு வர்றோம்”என்று பரிபூரணியிடம் சொல்லவும், 


“நன்றி சார், மேம்! நீங்கப் பார்த்துப் பத்திரமாகப் போயிட்டு வாங்க”என்று தானும் அவர்களிடம் கூறி விட, 

 

அப்போது,“ஞாயிற்றுக்கிழமைக் கண்டிப்பாகத் துர்காவைக் கூட்டிட்டு வருவீங்க தானே சம்பந்தி?”என்றச் சைலபுத்திரியிடம், 


“ம்ஹ்ம். அவளை விட்டுட்டு வந்துடுவோமா சம்பந்தி?”என அவர்களிடம் கூறித் தங்களது இதழ்களைப் பிரித்துச் சிரித்து விட்டு அங்கேயிருந்து கிளம்பி விட்டார்கள் சீராளன் மற்றும் ருக்மணி. 


அதே நேரத்தில் தங்களது அலுவலகத்தில் பெண்களுக்கான உதட்டுச் சாயங்களைத் தயாரிக்கும் பிரிவில் இருந்த ஊழியரிடம், 


“இந்தச் சாக்லேட் கலரை லேப் செக்கிங்கிற்கு இன்னும் அனுப்பலையா மிஸ்டர். புவன்?”என்றிருந்தான் ஆரண்யேஸ்வரன். 


அதற்கு,“இன்னும் இது முழுசாகத் தயாராகலை சார்! அதனால் தான் இன்னும் லேபுக்கு அனுப்பாமல் இருக்கோம்”எனப் பதில் கூறினான் அந்தப்,’புவன்’என்பவன். 


“ம்ஹ்ம். சீக்கிரம் முழுசாகத் தயார் செஞ்சி அனுப்பி விடுங்க. அதே மாதிரி இந்த ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவர் லிப் பாம் - மையும் அனுப்பி விடுங்க”என்று அவனுக்கு அறிவுறுத்தி விட்டுத் தனது மாமாவிடம் வந்து இந்த விஷயத்தை தெரிவிக்கவும், 


“ம்ஹ்ம். அதெல்லாம் ரொம்பவே டிமாண்ட் ஆனப் புராடெக்ட்ஸ்! அதனால் அதையெல்லாம் உடனே லேபுக்கு அனுப்பிச் செக் பண்ணி முடிச்சா தான் மத்த வேலையெல்லாம் நடத்த முடியும்!”என்றவனோ, 


“வேற என்னென்னப் புராடெக்ட்ஸ் எல்லாம் இன்னும் லேபுக்கு அனுப்பாமல் இருக்கு?”எனத் தன் மாப்பிள்ளையிடம் வினவினான் கங்காதரன். 


உடனே,”வேற எதுவும் இல்லை மாமா. இந்த ரெண்டு மட்டும் தான்”எனக் கூறினான் ஆரண்யேஸ்வரன். 


“அப்போ சரி”என்றான் அவனது தங்கையின் கணவன். 


அதேபோல் பெண்கள் உபயோகிக்கும் மற்ற முக அலங்காரஙகளைச் செய்யத் தேவையானப் பொருட்களைத் தயாரிக்கும் மற்றொரு பிரிவிற்குப் போயினர் அவ்விருவரும்.


அதுவோ பெண்கள் உபயோகிக்கும் பிரத்தியேகமான கண் மையைத் தயாரிக்கும் பிரிவாகும்! 


“இந்தக் காஜல் வாட்டர் ஃப்ரூஃப் தானே? நல்லா தெரியுமா?”என்று அந்தப் பிரிவின் தலைமை மேலாளரிடம் கேட்டிருந்தான் கங்காதரன். 


உடனே அவரும்,”ஆமாம் சார். இதை நாங்க நல்லாவே பரிசோதிச்சுப் பார்த்துட்டோம். உடனே சேலுக்கு அனுப்பிடலாம்”என்று அவனிடம் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உரைத்தார். 


அதில் தாங்கள் இருவரும் திருப்தி அடைந்து,”அப்போ இப்போவே அந்த வேலையை ஆரம்பிங்க”என அவரிடம் உத்தரவிட்டான் ஆரண்யேஸ்வரன். 


“இன்னும் என்னென்ன பொருட்களை பரிசோதிக்க அனுப்பனும்னு ஒரு தடவைப் பார்த்துக்கலாம். வா”என அறிவுறுத்தினான் கங்காதரன். 


உடனே அவர்கள் இருவரும் தங்களது அலுவலக அறைக்குள் வந்து தங்களது பிரத்தியேக மடிக்கணினியைத் திறந்து அதிலிருந்த தகவல்களைப் பரிசோதிக்க ஆரம்பித்து விட்டார்கள். 


அவர்கள் இருவரும் அந்த வேலையைச் செய்து முடித்த போது மாலை ஆகி விட்டிருந்தது. 


அதனால்,”இன்னைக்கு இது போதும்! நாம வீட்டுக்குக் கிளம்பலாம் மாமா. நமக்கு நைட் இங்கே வேலை இல்லை! அதனால் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வரலாம் மாமா”என்று தன் தங்கையின் கணவனிடம் உரைத்தான் ஆரண்யேஸ்வரன். 


“சரி. நீ போய்க் காரை ஸ்டார்ட் பண்ணி வை. நான் இங்கே எல்லாருக்கும் இதைச் சொல்லிட்டு வர்றேன்”என்றுரைத்து விடவும், 


தங்களது அலுவலகத்தை விட்டு வெளியேறிப் பார்க்கிங் ஏரியாவிற்கு வந்து தங்களது காரில் ஏறி ஓட்டுநரிடம்,”கங்காதரன் சார் வரட்டும். அதுவரைக்கும் வண்டியை ஓரமாக நிறுத்தி வை, ப்பா”என்று அவரிடம் தெரிவிக்கவும், 


அதற்கு அவரும்,“சரிங்க சார்”என்றுரைத்து விட்டு அவன் சொன்னதைச் செய்து விட்டார். 


 தனது தங்கையின் கணவனுக்காக காத்திருக்கும் சமயத்தில், 


மதிய வேளையில் தங்களது வீட்டில் இருக்கும் போது பரிபூரணி கூறியதைப் பற்றித் தற்போது யோசித்துப் பார்த்து விட்டு, 


‘அப்படின்னா, அவ மூனு நாளைக்கு நம்மக் கண்ணிலேயே படவே மாட்டாள்! எனக்கு இது போதுமே! அவளை இந்த மூனு நாளில் ஈஸியாக மறந்துடுவேனே!'எனத் தனக்குள் எண்ணிக் கொண்டுத் தனது செல்பேசியை எடுத்து அதில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்து விட்டான் ஆரண்யேஸ்வரன். 


- தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...