முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எபிலாக் - நிருதனின் பூவிழியே!


இரண்டு மாதங்களுக்குப் பிறகு…


தன் கைகளில் அணிந்திருக்கும் வளையல்களையும், இரண்டு கன்னங்களிலும் இருந்த சந்தனப் பூச்சுக்களையும் தொட்டுத், தொட்டுப் பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தாள் செந்தாழை. 


அவளுக்கு ஒன்பதாவது மாதம் ஆகி விட்டிருந்ததால் அவளுக்குச் சிறிது நேரத்திற்கு முன்னர் தான் அவளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு அதைச் சிறப்பிக்கும் வகையில் அவளுக்கு வளையல்களை அணிவித்து விட்டிருந்தார்கள் அனைவரும். 


அதேபோல் அவளது அருகிலேயே ஒரு மனையைப் போட்டு அதில் பூவிழியையும் உட்கார வைத்து அடுத்து அவளுக்கு இந்த இனியத் தருணம் நடக்க என்று வேண்டிக் கொண்டு அவளுக்கும் அதற்கான சடங்குகளைச் செய்து முடித்திருந்தனர் அவளது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அந்த விழாவிற்கு வந்திருந்த அனைத்து உறவினர்களும். 


தன் தங்கையைப் போலவே தனக்குச் செய்திருந்த சடங்குகளைப் பார்த்து மிகவும் மனம் நிறைந்து போய் விட்டிருந்தாள் பூவிழி. 


அதே சமயத்தில் தங்களது மனைவிமார்களுக்கு நிகராக மகிழ்ச்சியில் திளைத்துப் போயிருந்தார்கள் அறிவொளி மற்றும் திருவாதிரன். 


“அவங்க ரெண்டு பேரோட முகங்களும் எவ்வளவு பூரிச்சுப் போய் இருக்குன்னுப் பாரேன்!”என்று தன் தம்பியிடம் புன்னகையுடன் கூறவும், 


அதில் தானும் முகிழ்நகை முகிழ்த்து,”ஆமாம்ண்ணா. அவங்க நம்மளைக் கூடக் கண்டுக்காமல் தங்களைத் தாங்களே ரசிச்சுப் பார்த்துட்டு இருக்காங்க!”என அவனது பேச்சை ஆமோதித்தான். 


“அதே தான்டா! அவங்க நம்மளை இனிமேல் கண்டுக்கிறது சந்தேகம் தான்!”என்று பெருமூச்சுடன் உரைத்தான் அறிவொளி. 


உடனே,”டேய்! நீங்களே உங்கப் பொண்டாட்டிங்களை வச்சக் கண்ணை எடுக்காமல் இப்படி உத்து, உத்துப் பார்த்துக் கண்ணு வச்சிருவீங்கப் போலவே?”என்று அவர்களைக் கடிந்து விட்டு,


“குமாரி! இங்கே வாம்மா”எனத் தன் மனைவியை அருகில் அழைத்தார் நஞ்சுண்டன். 


அவரோ அங்கே விருந்து உண்டு விட்டு விடைபெற்றுக் கொள்ளும் விருந்தாளிகளுக்கு எதிர் அன்பளிப்புகளைக் கொடுத்து வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்த ராஜகுமாரியோ தனது கணவனின் அழைப்பைக் கேட்டதும் அவரிடம் சென்று, 


“என்னங்க?”எனக் கேட்டிருந்தார்.


“இவனுங்களோட காலடி மண்ணை எடுத்து நம்ம மருமகளுங்களுக்குச் சுத்திப் போடும்மா! அவங்க ரெண்டு பேரையும் இவனுங்களே ரொம்பக் கண்ணு வைக்கிறானுங்க!”என்று தன் மகன்களை முறைத்துக் கொண்டே மனைவியிடம் உரைத்தார் நஞ்சுண்டன். 


அதைக் கேட்டதும் மற்ற மூவரின் இதழ்களில் புன்னகை அரும்பியது. 


“சரிங்க! அப்படியே பண்ணிடலாம்”என்று தன் கணவருக்கு வாக்களித்தார் ராஜகுமாரி. 


சிறிது நேரத்திலேயே அந்த வளைகாப்பு விழாவில் பங்கு கொண்டிருந்த அனைத்து உறவினர்கள் மற்றும் ஊரின் பெரியத் தலைக்கட்டுகள் அனைவரும் அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்று விட்ட பின்னர், 


தங்களது மற்றக் குடும்ப உறுப்பினர்களைக் கூடத்திற்கு வரவழைத்து,“அண்ணா! எல்லாம் தயாராக இருக்கா?”எனத் தன் தமையனிடம் சூசகமாக வினவினான் திருவாதிரன். 


“ம்ஹ்ம். தயாராக இருக்குடா!”என்று அவனுக்கு உறுதி அளித்தான் அறிவொளி. 


“அப்போ அதைக் கொண்டு வாங்க”என்று அவனுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைக்க, 


இதை அவதானித்த மற்றவர்கள் அனைவரும் அந்த அண்ணன், தம்பியைக் குழப்பமாகப் பார்த்தார்கள்.


சில நிமிடங்கள் கழிந்ததும் தன் கையில் பெரிய காகிதம் சுற்றப்பட்டு இருந்தப் புகைப்படம் ஒன்றைத் தன் கையில் வைத்துக் கொண்டு வந்திருந்தான் அறிவொளி. 


அதைக் கண்டதுமே,”இது என்னது மாமா?”எனத் தன் கணவனிடம் கேட்டாள் செந்தாழை. 


“இரும்மா. இதை திறந்ததுக்கு அப்பறம் உங்க எல்லாருக்குமே தெரிஞ்சிடும்!”என்றவனோ, 


தனது தம்பியுடன் சேர்ந்து அந்தக் காகிதத்தைப் பிரித்து அதிலிருந்த ஆளுயரப் புகைப்படத்தை அனைவருக்கும் முன்பும் காட்சிப்படுத்தினர் அந்த அண்ணனும், தம்பியும். 


அதிலிருந்த உருவப் படத்தைப் பார்த்ததுமே செந்தாழை மற்றும் பூவிழியின் விழிகளில் கண்ணீர் உடைப்பெடுக்கத் தொடங்கி விட்டிருந்தது. 


உடனே தாங்கள் இருவரும் தங்கள் ஒருவரையொருவர் தோளோடு அணைத்துக் கொண்டு நெகிழ்ந்து போயினர்.


தங்களது மனம் மிகுந்த மகிழ்ச்சியில் நிறைந்து விட்டதால் பேச்சற்றுப் போய் விட்டார்கள் செந்தாழை மற்றும் பூவிழி. 


ஆம்! 


அந்தப் புகைப்படத்தில் இருந்தது அவர்களது அன்னை முத்துமணியின் உருவப்படமே தான்! 


அதே நேரத்தில் அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும்,


“இதை எப்படா ரெண்டு பேரும் தயார் செய்தீங்க?”எனத் தங்களது மகன்களிடம் ஆச்சரியத்துடன் வினவினர் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி. 


“நாங்க இதையெல்லாம் முன்னாடியே யோசிச்சு வச்சிட்டோம்! எங்க ரெண்டுப் பொண்டாட்டிங்க ரெண்டு பேருக்கும், உங்களுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சித் தரலாம்ன்னு நினைச்சுத் தான் இவ்வளவு நாளாக உங்க யார் கிட்டேயும் நாங்க இதைப் பத்தி வாயே திறக்கலை”என்றவர்களோ, 


உணர்வுகளின் பிடியில் ஆனந்தக் கண்ணீர் மல்க நின்றிருந்த தங்களது மனைவிமார்களைப் பார்த்து, 


“என்னப் பிடிச்சிருக்கா?”என்றிருந்தார்கள் அறிவொளி மற்றும் திருவாதிரன்.


உடனே தங்களது தலையை மேலும், கீழுமாக அசைத்து ‘ஆம்’ என்று அவர்களுக்குப் பதிலளித்தனர் செந்தாழை மற்றும் பூவிழி. 


அப்போது யாரும் எதிர்பாராத விதமாக முத்துமணியின் முன்னால் வந்து,”நீங்க உயிரோட இருக்கும் போது நாங்க ரெண்டு பேரும் உங்களை மத்திக்கவே இல்லம சம்பந்திம்மா. ஒருவேளை நாங்க உங்களை ஒழுங்காக நடத்தி இருந்தால் நீங்க இப்போ உயிரோட இருந்து இருப்பீங்க தானே? எங்களோட அந்த மோசமான நடத்தைக்காக எங்களை மன்னிச்சிருங்க சம்பந்திம்மா”என்று தங்களது இருகரங்களைக் கூப்பி முத்துமணியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி. 


அதைக் கண்டு இளையவர்களுக்கு வியப்பும், நிம்மதியும் உண்டானது எனலாம்! 


அதேபோல் தானும் முன் வந்து தனது அன்னையின் உருவப் படத்தைப் பார்த்து,”என்னால் தானே இதெல்லாம் நடந்துச்சு ஆத்தா? நான் உங்ககிட்ட விஷயத்தை முன்னாடியே சொல்லி இருந்தால் உங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது தானே? என்னை மன்னிச்சிருங்க ஆத்தா!”எனத் தானும் அவரிடம் மன்னிப்புக் கோரினாள் செந்தாழை. 


அதில் அனைவருக்கும் கண்ணீர் உருவாகி விடவும், 


அதை துடைத்துக் கொண்டு,”சரி. இப்போ வாங்க. நாம அத்தை கிட்டே ஆசீர்வாதம் வாங்குவோம்”என்று தன் மனைவி, தமையன் மற்றும் அவனது மனைவியிடம் அறிவுறுத்தினான் திருவாதிரன். 


உடனே அவ்விரு ஜோடிகளும் முத்துமணியின் உருவப் படத்திடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளவும், 


அவர்களை ஆசீர்வதித்து இனிமேல் இந்த வீட்டில் என்னை மீறி எந்தக் கெட்டதும் நிகழாது என்று உறுதி அளிப்பதைப் போன்றதொரு புன்னகைத் தோன்றி மறைந்ததைப் போல் அவர்கள் அனைவரும் உணர்ந்தார்கள் எனலாம்! 


இனிமேல் முத்துமணியின் ஆசியுடன் அந்த வீட்டில் நல்லவைகள் மட்டுமே நடக்கட்டும் என்று நாமும் இவர்களை வாழ்த்தி விடைபெறுவோமாக! 


சுபம்


இந்தக் கதைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள் 🖤🙏


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...

நிருதனின் பூவிழியே! - 1

  டிஸ்கிளைமர் : ஆன்ட்டி ஹீரோ கதை “நான் என்ன ஆனாலும் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் செந்தா!”என்று அவளது தலையிலடித்துச் சத்தியம் செய்து கொடுத்திருந்தான் அறிவொளி.  “எனக்கு உங்க மேலே கொள்ளை நம்பிக்கை இருக்குத் தானுங்க! ஆனால் உங்கக் குடும்பத்தை நினைச்சா தான் பயமாக இருக்கு! என்னை அவங்க எப்படி ஏத்துப்பாங்கன்னு நெஞ்செல்லாம் திக்குத் திக்குன்னு அடிச்சுக்குது!”என்று அவனது தோளில் சாய்ந்தவாறே நடுக்கத்துடன் உரைத்தாள் செந்தாழை. “நீ எதுக்கு அதையெல்லாம் நினைச்சுக் கவலைப்பட்ற? அது தான், நான் இருக்கேன்ல? நான் எங்க வீட்டாளுங்க எல்லார் கிட்டேயும் பேசி நம்மக் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறேன் புள்ளை! அதுவரைக்கும் பொறுமையாக இரு!”என்று கூறி அவளைச் சமாதானப்படுத்த முயன்றவனிடம்,  “நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் பொறுமையாக இருப்பேனுங்க! ஆனால் என் வயித்துல வளர்ந்துட்டு இருக்குற நம்மப் புள்ளப் பொறுமையாக இருக்க மாட்டானே!”என்றவளை உச்சபட்ச அதிர்ச்சியுடன் விழிகள் பிதுங்கிப் போய் நோக்கி,  “நீ என்னடி சொல்றவ? நெசந்தானா?”எனக் கேட்டிருந்தான் அறிவொளி.  “ஆமாம் பின்னே! இந்த விஷயத்தில் யாராவது பொய் சொ...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...