முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே - 49 (Pre Final)

 


தங்களது குடும்பத்தினருக்குப் பிடித்தமானப் பொருட்களைக் கடைகளில் தேடி வாங்கிக் கொண்டுக் காரில் ஏறி உட்கார்ந்து தங்களது வீட்டை நோக்கிப் பயணம் செய்தார்கள் அறிவொளி மற்றும் செந்தாழை. 


அவர்கள் இருவரும் சரியாக மதிய நேரத்தில் தங்களது வீட்டை அடைந்து இருந்தனர் எனலாம்! 


உடனே அவர்களை வரவேற்றுக் குடிக்கப் பழச்சாற்றைக் கொடுத்து ஆசுவாசப்படுத்தி விட்டு,”ஆஸ்பத்திரியில் என்னச் சொன்னாவ?”என்று இருவரிடமும் விசாரித்தார்கள் ராஜகுமாரி மற்றும் பூவிழி. 


உடனே,”அங்கே டாக்டரு எங்களோட குழந்தையோட அசைவுகளைக் காட்டினாங்க! குழந்தை ரொம்ப ஆரோக்கியமாக இருக்குதாம்! எப்பவும் போல் சொல்ல வேண்டிய முக்கியமான அறிவுரைகளைச் சொல்லி, மாத்திரை, மருந்துகளை எழுதிக் கொடுத்து இருக்காங்க!”என்று தன் முகம் விகசிக்க அவர்களிடம் விவரித்து முடித்திருந்தான் அறிவொளி. 


“அப்படியா? ரொம்ப சந்தோஷம்!”என்றவர்களிடம், 


“ம்ஹ்ம். நீங்க உங்களுக்கு எதுவும் வாங்கிட்டு வர வேண்டாம்னுச் சொல்லி விட்டாலும் நாங்க அதையெல்லாம் கேப்போமா என்ன? அதனால் நம்மக் குடும்பத்து ஆளுங்களுக்குப் பிடிச்சதுன்னு எங்களுக்குத் தெரிஞ்ச சில பொருட்களை வாங்கியாந்து இருக்கோம்!”என்று தன்னுடைய தமக்கை மற்றும் மாமியாரிடம் உற்சாகமாக அறிவித்தாள் செந்தாழை. 


“ஹேய்! எதுக்கு இதெல்லாம்? நீங்களே பாவம் அவ்வளவு தூரம் பயணம் செஞ்சிப் போயிட்டு வர்றீய? அப்படி இருக்கும் போது இதையெல்லாம் எங்களுக்குத் தேடிப் பிடிச்சு வாங்கியாரனும்னு என்ன அவசியமா?”எனத் தங்கையிடம் கண்டிப்புடன் வினவினாள் பூவிழி. 


“ஆமாம் அவசியந்தேன்க்கா! உங்க எல்லாருக்காகவும் நாங்க எதுவுமே வாங்கித் தந்தது இல்லையே? அதான்! இதையெல்லாம் நீங்க எல்லாரும் வாங்கித் தான் ஆகனும்!”என்று அவர்கள் இருவருக்கும் அறிவுறுத்த, 


“சரிம்மா. நீ இந்த வீட்டோட மூத்த மருமகள்! அதனால் நீ சொன்னால் கேட்டுத் தானே ஆகனும்?”என்று போலிப் பவ்யத்துடன் அவளிடம் கூறிச் சிரித்தார் ராஜகுமாரி. 


அதைக் கேட்டதுமே மற்ற மூவரும் வெடித்து நகைத்து விடவும், 


அதில் வெட்கம் மேலிட,”என்னைச் சும்மா கேலிப் பண்ணாதீங்கத்தை!”என்று தன் மாமியாரிடம் சினுங்கினாள் செந்தாழை.


உடனே மற்ற மூவரும் அவளைச் சமாதானப்படுத்தி விட்டனர்.


அதற்குப் பிறகு நஞ்சுண்டன், ராஜகுமாரி, திருவாதிரன் மற்றும் பூவிழிக்காக வாங்கி வந்திருந்த பொருட்களை எல்லாம் அவர்கள் முன்பு அறிவொளியும், செந்தாழையும் காட்சிப்படுத்தினார்கள். 


அதில் மூன்று ஆண்களுக்கும் கையில் அணிந்து கொள்ளும் காப்புக்களையும், அவர்களுக்கு ஒரே வேலைப்பாடுகள் கொண்ட வெவ்வேறு நிறத்தில் மூன்று சட்டைகளையும் வாங்கி இருந்தவர்கள், ராஜகுமாரிக்கும், பூவிழிக்கும் கூட இரண்டு அழகான ஒரே வேலைப்பாடுகளைக் கொண்டிருந்த, வெவ்வேறு நிறங்கள் கொண்ட சேலைகளை வாங்கி வந்திருந்தனர். 


“ரெண்டுச் சீலைகளுமே நல்லா இருக்கே! உனக்கும் இதே மாதிரியே ஒன்னு வாங்கி இருக்கலாம்ல?”எனத் தனது மூத்த மருமகளிடம் வாஞ்சையாக கேட்டிருந்தார் அவளது மாமியார். 


“எனக்கும் இதே மாதிரியான ஒரு சீலையை வாங்கி இருக்கேனுங்கத்தை!”என்று அவரிடம் சொன்னவளோ, 


தனக்காக வாங்கியிருந்த சேலையையும் அவரிடமும், பூவிழியிடமும் எடுத்துக் காட்டினாள் செந்தாழை. 


“இதுவும் நல்லா இருக்கேடி!”எனச் சொல்லி அவளைப் பாராட்டினாள் பூவிழி. 


அதற்கு,“ம்ஹ்ம். நன்றிக்கா!”என்றுரைத்து விட்டாள் அவளது தங்கை. 


இங்கே தங்களது காட்டில் இருக்கும் அலுவலக அறையில்,”சாப்பிட வீட்டுக்குப் போயிட்டு வரலாமாப்பா?”என்று தன்னுடைய தந்தையிடம் கேட்டிருந்தான் திருவாதிரன். 


“சரிடா. உங்க அண்ணாவும், அண்ணியும் இந்நேரம் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்து இருப்பாங்க. வா, போகலாம்”என்று மகனிடம் கூறி விடவும், 


உடனே அங்கேயிருந்து கிளம்பித் தங்களது வீட்டை நோக்கிப் பயணமானார்கள் அந்த தந்தையும், இளைய மகனும். 


சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகுத் தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்து விடவும்,


அவர்கள் இருவரையும் வரவேற்றுக் குடிக்கத் தண்ணீரைக் கொடுத்து உபசரித்தாள் பூவிழி. 


அதை வாங்கித் தங்களது தாகத்தை தீர்த்துக் கொண்டு,”என்னப் பரிசோதனை எல்லாம் நல்லபடியாக முடிஞ்சிதா?”என்று தன் மூத்த மகன் மற்றும் மருமகளிடம் வினவினார் நஞ்சுண்டன். 


“ம்ஹ்ம். நல்லபடியாக முடிஞ்சிதுப்பா”என்றவனோ தனது அன்னை மற்றும் பூவிழியிடம் கூறியத் தகவல்களைத் தனது தந்தை மற்றும் தம்பியிடம் விரிவாகச் சொல்லி முடித்து விட்டிருந்தான் அறிவொளி. 


அதே சமயத்தில்,”அது மட்டுமில்லாமல் உங்க மயனும், மருமவளும் நம்ம எல்லாருக்காகவும் பரிசுப் பொருட்களை வாங்கிட்டு வந்திருக்காவ”என அவரிடமும், திருவாதிரனிடமும் தன் முகத்தில் பெருமைப் பொங்கத் தெரிவித்தார் ராஜகுமாரி. 


அதைக் கேட்டதும்,“அப்படியா? எங்கே காட்டுங்க”என்றிருந்தார் நஞ்சுண்டன். 


உடனே தங்களது முகங்களில் சந்தோஷக் களைத் தாண்டவம் ஆட, அவரிடமும், திருவாதிரனிடமும் தாங்கள் வாங்கி வந்தப் பொருட்களை எல்லாம் எடுத்துக் காண்பித்தாள் செந்தாழை. 


“இவ தான் உங்களுக்காக இதையெல்லாம் பார்த்துப், பார்த்து வாங்கினாள்!”என்று மனைவியைப் பார்த்துப் பெருமிதத்துடன் மொழிந்தான் அறிவொளி. 


உடனே அவற்றையெல்லாம் பார்வையிட்டு விட்டு,”உண்மையிலேயே இதெல்லாம் ரொம்பவே நல்லா இருக்கு! ரொம்ப நன்றி!”எனத் தன்னுடைய தமையன் மற்றும் அவனது மனைவியிடமும் மனதார நன்றிக் கூறினான் திருவாதிரன். 


“ம்ஹ்ம். பரவாயில்லை இருக்கட்டும் சின்னவரே”என்று அவனிடம் கூறி விட்டாள் செந்தாழை. 


“உங்கத் தாலிப் பிரிச்சிக் கோர்க்கிற சடங்கு அன்னைக்கு நாம எல்லாரும் இந்தத் துணிகளைத் தான் போடனும். சரியா?”எனத் தனது மற்றக் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார் ராஜகுமாரி. 


“கண்டிப்பாக”என்றார்கள் அனைவரும். 


அதற்குப் பிறகுத் தங்களுக்கான மதிய உணவுகளை வேலையாட்களிடம் பரிமாறச் சொல்லி உண்டு முடித்து விட்டு, 


“விழி! நீ பொறுமையாக கிளம்பி வா”என்று தன் மனைவிக்கு அறிவுறுத்தி இருந்தான் திருவாதிரன். 


“நான் காலையிலேயே கிளம்பி உட்கார்ந்துட்டேன்ங்க. முகத்தை மட்டும் கழுவினால் போதும். பத்து நிமிஷத்தில் வந்துட்றேன்”என அவனிடம் தெரிவித்து விட்டுக் கொல்லைப்புறத்திற்குச் சென்று விட்டாள் பூவிழி. 


“என்ன மாமியாரும், சின்ன மருவளும் நல்லா பேசிச், சிரிச்சிட்டு இருந்தீய போலவே?”எனத் தன்னுடைய அன்னையிடம் குறும்புடன் கேட்டிருந்தான் அறிவொளி.


அதில் மற்றவர்களின் இதழ்களிலும் புன்னகை மிளிர்ந்தது.


“இவனுக்கு என்னைக் கிண்டல் செய்றதே வேலையாகப் போச்சு”எனச் சலித்துக் கொண்டாலும் கூட, 


“ஆமாடா! நாங்க ரெண்டு பேரும் நல்லாவே கலகலன்னுப் பேசிச், சிரிச்சிக்கிட்டோம்! இனிமேல் எங்களுக்குள்ளே எந்தச் சண்டைச், சச்சரவும் வராது!”என்று உறுதியாகப் பதிலளித்தார் ராஜகுமாரி. 


அதைக் கேட்டதும் அவரின் மற்றக் குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் அகமும், முகமும் மகிழ்ந்து போயினர் எனலாம்! 


“அப்போ நாங்க எங்க பேருக்கு இடையிலும் எந்தச் சண்டைச், சச்சரவும் வராது! நாங்களும் தனிக் கட்சி ஆகிட்டோம்!”என்று தன் இரண்டு மகன்களைப் பார்த்துக் கூறி விட்டு மனைவியை நோக்கிப் புன்னகை வீசினார் நஞ்சுண்டன். 


“ஓஹோ! எங்களுக்குப் போட்டியாக நீங்களும் ராசியாகிட்டீகளாக்கும்? சரி தான்”என்றுரைத்து விட்டார் ராஜகுமாரி. 


அதில் அனைவரும் தங்களது இதழ்களைப் பிரித்துச் சிரித்துக் கொண்ட சமயத்தில் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு அங்கே வந்து சேர்ந்திருந்த பூவிழியிடம் அவள் இல்லாத நேரத்தில் தாங்கள் பேசியவற்றை எனலாம் ஒன்று விடாமல் ஒப்புவித்து விட்டிருந்தாள் செந்தாழை. 


அதைக் கேட்டு முடித்து விட்டு,”ஓஹோ! அப்படியா விஷயம்? அவங்களுக்கு நம்மளைப் பார்த்துப் பொறாமை! அதான், மூனு பேரும் இப்படி பேசுறாவ!”என்று ஆண்கள் மூவரையும் கிண்டலடித்தாள் பூவிழி. 


“ஆஹான்!”என அவளிடம் கூறிக் கண்ணடித்து விட்டு, 


“இப்படியே பேசிட்டு இருக்க வேண்டியது தான்! வாங்க போகலாம்”என்று தன் தந்தை மற்றும் மனைவிக்கு அறிவுறுத்தினான் திருவாதிரன். 


“சரி. நாங்க கிளம்புறோம்”என்று கூறி விட்டார் நஞ்சுண்டன். 


உடனே அவர்கள் மூவரும் தங்களது மற்றக் குடும்ப உறுப்பினர்களிடம் விடைபெற்றுக் கொண்டுத் தங்கள் காட்டிற்குச் சென்று விடவும், 


“உங்க ரெண்டுப் பேருக்கும் களைப்பாக இருக்கும்! நீங்க ரூமுக்குப் போய் ஒய்வெடுங்க. நான் இதையெல்லாம் எடுத்துட்டுப் போய் அடுக்குப் பெட்டிக்குள்ளே வைக்கிறேன்”என்று தன் மூத்த மகன் மற்றும் அவனது மனைவியிடம் வலியுறுத்தி அவர்களை அறைக்கு அனுப்பி வைத்தார் ராஜகுமாரி. 


உடனே தங்களது அறைக்குள் வந்து கட்டிலில் அமர்ந்து கொள்ளவும், 


தன் மனைவியின் காலைப் பதமாகப் பிடித்து விட ஆரம்பித்து விட்டான் அறிவொளி. 


அதில் அவனைக் கண்களில் காதலைத் தேக்கி வைத்துப் பார்க்கலானாள் செந்தாழை. 


அதில் தானும் அவளது விழிகளை நேசத்துடன் ஏறிட்டு,


“நான் இன்னைக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கேன்ம்மா? ஏன்னுத் தெரியுமா?”எனக் கேட்டிருந்தான் அவளது கணவன். 


“ம்ஹ்ம். அதுக்கான காரணம் எனக்கு நல்லாவே தெரியும்! ஆனாலும் நீங்களே உங்களோட வாயால் அதைச் சொல்லுங்க!”என்று அவனிடம் ஆதூரமாக மொழிந்தாள் செந்தாழை. 


“இன்னைக்கு நம்மக் குழந்தையோட அசைவுகளைக் கண்ணாரப் பார்த்துட்டு வந்தோம்! அதே மாதிரி, நம்மளோட வீட்டு ஆளுங்களுக்குத் தேவையானப் பொருட்களை எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்தோம்! அது மட்டுமில்லாமல் எங்கம்மாவும், அப்பாவும் உங்கிட்டேயும், உன்னோட அக்கா கிட்டேயும் நல்லபடியாகப் பேச, நடந்துக்க ஆரம்பிச்சிட்டாங்க! நானும் என்னோட பொறுப்புகளை எல்லாம் உணர்ந்து நம்மளோட நிலபுலன்களை மேற்பார்வையிட ஆரம்பிச்சிட்டேன்! இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தால் கனவு மாதிரி இருக்கு! ஆனால் நல்லா இருக்கு! இதுக்கப்புறமும் நம்ம வீடும், நம்ம வீட்டு ஆளுங்களும் இப்படியே இருக்கனும்னு வேண்டிக்கிறேன்!”என்று அவளிடம் நெகிழ்ச்சியுடன் கூறி முடித்திருந்தான் அறிவொளி. 


அதை தானும் ஆமோதிக்கும் விதமாக,”ஆமாங்க. நானும் அதையே தான் நினைச்சு சந்தோஷப்பட்டுட்டு இருக்கேன்! அதே மாதிரி நம்மளோட குடும்ப ஒற்றுமையைப் பார்த்து யாரும் கண்ணு வச்சிடக் கூடாதுன்னும் தோணுது!”என்றிருந்தாள் அவனது மனைவி. 


“ம்ஹ்ம். நம்மக் குடும்பத்துக்கே சுத்திப் போட்றலாம்! கவலையை விடும்மா”என்று அவளிடம் கூறிச் சமாதானம் செய்து விட்ட பின்னர், 


அவர்கள் இருவரும் தங்களது குழந்தையைப் பற்றிய உரையாடலில் மூழ்கிப் போய் விட்டிருந்தார்கள். 


அதே சமயத்தில் தங்களது காட்டில் எப்பொழுதும் போல் தன்னுடைய வேலையைச் செய்து கொண்டிருந்த பூவிழியைச் சந்தித்து, தங்களிடமும் அந்த முருகையன், சடையன் மற்றும் விருமனும் பாலியல் ரீதியாகச் சீண்டலை மேற்கொண்டதைப் பற்றி விவரித்துக் கூறினர் அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் மற்றச் சில பெண்கள். 


அதைக் கேட்டதுமே,”ச்சீ! கேடுகெட்டவனுங்க!”என்று காரி உமிழ்ந்து விட்டு, 


அந்த மூன்று கேவலமான ஆண்களின் மீது கடுங்கோபம் கொண்டாள் பூவிழிக்கு! 


உடனே அவர்கள் கூறிய விஷயத்தை தனது கணவனிடம் தெரிவித்து விடவும்,


அதைக் கேட்டவுடன் அவளைப் போலவே தனது கண்கள் சிவப்பேற அவர்கள் மூவரையும் கொன்று போடும் அளவிற்கு அவர்கள் மீது கோபம் கொண்டான் திருவாதிரன். 


                              - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...

நிருதனின் பூவிழியே! - 1

  டிஸ்கிளைமர் : ஆன்ட்டி ஹீரோ கதை “நான் என்ன ஆனாலும் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் செந்தா!”என்று அவளது தலையிலடித்துச் சத்தியம் செய்து கொடுத்திருந்தான் அறிவொளி.  “எனக்கு உங்க மேலே கொள்ளை நம்பிக்கை இருக்குத் தானுங்க! ஆனால் உங்கக் குடும்பத்தை நினைச்சா தான் பயமாக இருக்கு! என்னை அவங்க எப்படி ஏத்துப்பாங்கன்னு நெஞ்செல்லாம் திக்குத் திக்குன்னு அடிச்சுக்குது!”என்று அவனது தோளில் சாய்ந்தவாறே நடுக்கத்துடன் உரைத்தாள் செந்தாழை. “நீ எதுக்கு அதையெல்லாம் நினைச்சுக் கவலைப்பட்ற? அது தான், நான் இருக்கேன்ல? நான் எங்க வீட்டாளுங்க எல்லார் கிட்டேயும் பேசி நம்மக் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறேன் புள்ளை! அதுவரைக்கும் பொறுமையாக இரு!”என்று கூறி அவளைச் சமாதானப்படுத்த முயன்றவனிடம்,  “நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் பொறுமையாக இருப்பேனுங்க! ஆனால் என் வயித்துல வளர்ந்துட்டு இருக்குற நம்மப் புள்ளப் பொறுமையாக இருக்க மாட்டானே!”என்றவளை உச்சபட்ச அதிர்ச்சியுடன் விழிகள் பிதுங்கிப் போய் நோக்கி,  “நீ என்னடி சொல்றவ? நெசந்தானா?”எனக் கேட்டிருந்தான் அறிவொளி.  “ஆமாம் பின்னே! இந்த விஷயத்தில் யாராவது பொய் சொ...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...