அதே சமயம் அன்று மாலையில் தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்து இருந்தார்கள் நஞ்சுண்டன், திருவாதிரன் மற்றும் பூவிழி.
அவர்களை வறவேற்றுக் காப்பி மற்றும் சிற்றுண்டிகளைக் கொடுத்து உபசரித்து விட்டு,
அவர்களின் வரவிற்கு முன்பாகவே நகைக் கடைக் காசியை வரச் சொல்லி அவருக்குத் தகவல் அனுப்பி விட்டிருந்ததால்,
அதை,“இன்னும் கொஞ்ச நேரத்தில் காசி வந்துருவாரு. தாலிச் சங்கிலியைத் தேர்ந்தெடுத்துட்டு மத்த வேலைகளைப் பார்ப்போம்”என்று அனைவருக்கும் தெரிவித்தான் அறிவொளி.
அதற்கு அவர்களும் சம்மதித்து விட்டு அந்தக் காசிக்காக காத்திருந்தனர்.
சிறிது நேரம் கழித்து, நகைக்கடை உரிமையாளரான காசியின் வருகையை வீட்டினரிடம் அறிவித்தார் அந்த வீட்டு வாசலில் இருந்த காவலாளி.
“அவரை உள்ளே வரச் சொல்லுங்க”என்று அவருக்குக் கட்டளையிட்டு அனுப்பி விடவும்,
உடனே அதைச் செயல்படுத்தும் விதமாகச் சில நிமிடங்களில் காசியுடன் உள்ளே வந்தார் அந்தக் காவலாளி.
அவரை அவரது வேலையைப் பார்க்குமாறு கூறி அனுப்பி வைத்து விட்டு,”வாங்க காசி”என அவரை வரவேற்றார் நஞ்சுண்டன்.
உடனே தானும் அனைவரையும் பார்த்துப் புன்னகைத்து விட்டு,”வணக்கமுங்க”என்று பவ்யமாக மொழிந்தார்.
“ம்ஹ்ம். வணக்கம்”என்று தாங்களும் அவரிடம் கூறினர் மற்றக் குடும்ப உறுப்பினர்கள்.
“எப்படி இருக்கீய?”என்று அவரிடம் நலம் விசாரித்தார்கள் நஞ்சுண்டன்.
அவரோ,“நான் நல்லா இருக்கேனுங்க ஐயா! நீங்க எல்லாரும் சௌக்கியமாக இருக்கீயளா?”என்று அனைவரிடமும் பொதுவாக விசாரித்தார்.
“ம்ஹ்ம். நாங்களும் சௌக்கியமாக இருக்கோம். என்னக் குடிக்கிறீய? காப்பியா? டீயா? இல்லை, சூஸூப் போட்டுக் கொண்டாரச் சொல்லவா?”என்று அவரிடம் உபசரிப்பாக வினவினார் ராஜகுமாரி.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாமுங்க ம்மா”என்று மறுப்பலாக கூறினார் காசி.
ஆனாலும்,”என்ன இப்படி சொல்றீய? காப்பிப் போட்டுக் கொண்டாரச் சொல்றேன். நீங்கக் கண்டிப்பாக அதைக் குடிச்சுத் தான் ஆகனும்”என்று அவருக்கு அறிவுறுத்தி தங்கள் வீட்டு வேலையாட்களிடமும் அவருக்குக் காப்பிப் போட்டு எடுத்து வரச் சொல்லி உத்தரவுப் பிறப்பித்து விட்டு,
“உங்க வியாபாரம் எல்லாம் எப்படி போகுது?”என்று அவரிடம் கேட்டான் திருவாதிரன்.
“அதெல்லாம் நல்லா போகுதுங்க ஐயா!”என்றிருந்தார் காசி.
“இவுக ரெண்டு பேரும் தான் எங்க வீட்டு மருமவளுங்க!”என்று செந்தாழை மற்றும் பூவிழியைச் சுட்டிக் காட்டிச் சொன்னார் ராஜகுமாரி.
அதைக் கேட்டதுமே,“வாழ்த்துக்கள்ம்மா”என்று அவர்கள் இருவரிடமும் தெரிவித்தார் காசி.
அதில், உடனே அவரைப் பார்த்துப் புன்னகைத்து,”நன்றிங்க ஐயா”என்று தாங்களும் அவரிடம் கூறினர் அந்தப் பெண்கள் இருவரும்.
அப்போது காசிக்குக் காப்பி எடுத்து வந்து கொடுத்து விட்டுச் சென்றார் வேலையாள் ஒருவர்.
அவர் அதை வாங்கிப் பருகி முடித்து விட்டுத், தான் வந்த வேலையைப் பார்க்கும் விதமாகத் தனது கைப்பையில் மிகுந்தப் பாதுகாப்புடன் வைத்திருந்த தாலிச் சங்கிலிகள் சிலவற்றை எடுத்து மேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்த துணியில் பரப்பி வைத்து விட்டு,
“இதில் இப்போ வந்திருக்கிற எல்லா வகையான தாலிச் சங்கிலிகளின் மாதிரிகளும் இருக்கு! இது எல்லாமே அஞ்சுப் பவுனு தான்! அதனால் உங்களுக்குப் பிடிச்சதை தேர்ந்து எடுத்துக்கோங்கம்மா”என்று செந்தாழை மற்றும் பூவிழியைப் பார்த்துச் சொன்னார் காசி.
அதில்,“சரிங்க”என்றுரைத்து விட்டுத் தங்களுக்கான தாலிச் சங்கிலிகளைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்து விட்டார்கள் அவர்கள் இருவரும்.
“தனியாவாக வந்திருக்கீய காசிண்ணே?”எனக் கேட்டிருந்தான் அறிவொளி.
“அதெப்படி நான் தனியாக வருவேனுங்க ஐயா? அதுவும் இப்படியான விலையுயர்ந்த நகைகளைக் கையில் வச்சிட்டு எங்கேயும் தனிச்சுப் போக, வர முடியுமுங்களா? என் ஆளுங்களை எல்லாம் வீட்டுக்கு வெளியே இருக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன்”என்று அவனுக்குப் பதிலளித்தார் காசி.
“ஓர் அப்போ சரிண்ணே”என்று கூறி விடவும்,
“அடுத்துக் கொஞ்ச மாசத்துல எங்க வீட்டு மூத்த மருமவளுக்கு வளைகாப்பு நடத்தப் போறோம்! அதுக்கும் உங்ககிட்ட தான் நகைகளை வாங்குறதாக இருக்கோம்! அதனால் இந்தச் சங்கிலிகளுக்கான ரசீதைக் கொஞ்சம் பார்த்துப் போட்டுக் கொடுங்க”என்று அவருக்குச் சூசகமாக அறிவுறுத்தினார் ராஜகுமாரி.
“அதை நீங்கச் சொல்லனுமா அம்மா? எல்லாம் நான் பார்த்துக்கிறேன்”எனத் தானும் அவருக்கு உறுதி அளித்தார் காசி.
அதே சமயம் அவர் கொண்டு வந்திருந்த தங்கச் சங்கிலிகளில் தங்களுக்குப் பிடித்தவற்றைத் தேர்ந்தெடுத்து விட்டு அதை தங்களது கணவன்மார்களிடம் காட்டி அவர்களது கருத்துக்களைக் கேட்டிருந்தார்கள் செந்தாழை மற்றும் பூவிழி.
அதில் தாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்து விட்டு,”என்னமோ இதை நாமப் போட்டுக்கிறா மாதிரி நம்மக்கிட்டே கருத்துக் கேட்கிறதைப் பாரேன் அண்ணா”என்று கேலியாகத் தமையனிடம் உரைத்தான் திருவாதிரன்.
“ஏன் போட்டுக்கோங்களேன்! அதில் என்னத் தப்பிருக்கு!”என அவனிடம் வாய்ச்சவடால் பேசினாள் அவனது மனைவி.
அதில் அவளை ஆச்சரியமாகப் பார்த்து விட்டு அடுத்த நிமிடமே பக்கென்று நகைத்து விட்டிருந்தார்கள் அங்கேயிருந்த மற்ற அனைவரும்.
உடனே தனது முகத்தில் படர்ந்த வெட்கத்தை மறைக்கும் விதமாகத் தனது தலையை மறுபுறம் திருப்பிக் கொண்டுச் சிகையைக் கோதுவதைப் போல் பாசாங்கு காட்டிக் கொண்டுத் தன் மனைவியிடம்,”இரு உன்னை ராத்திரிப் பார்த்துக்கிறேன்”என்று முணுமுணுத்தான் திருவாதிரன்.
அதில் அவனைப் பார்த்துக் குறும்பாகப் புன்னகைத்து விட்டு,”பான்த்துக்கோங்களேன்! யாரு வேணாம்னு சொன்னா!”என்றிருந்தாள் பூவிழி.
அதைக் கேட்டு அவளைத் தாபத்துடன் பார்த்து யாரும் அறியாமல் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டுக் கொண்டான் அவளது கணவன்.
சிறிது நேரம் கழித்து தாங்கள் இருவரும் தேர்ந்தெடுத்த இரண்டுச் சங்கிலிகளையும் வீட்டினரிடம் காட்டி,”எங்களுக்கு இந்த ரெண்டையும் பிடிச்சு இருக்கு”எனக் கூறி விட்டிருந்தனர் செந்தாழை மற்றும் பூவிழி.
அவற்றை முதலில் வாங்கிப் பார்த்தது அவர்களது கணவர்மார்கள் தான்!
“இந்த ரெண்டுச் சங்கிலிகளும் பார்க்கிறதுக்கு நல்லா இருக்கே! இது உங்களுக்குப் பொருத்தமாகவும் இருக்கும்”என்றுரைத்து விட்டார்கள் அறிவொளி மற்றும் திருவாதிரன்.
“எங்கே எங்ககிட்டேயும் காட்டுங்க”என்றத் தன் தாயின் வார்த்தைகளுக்கு இணங்கி அவரிடம் அவற்றைக் கொடுத்தார்கள் அவரது மகன்கள் இருவரும்.
அவற்றைத் தாங்களும் வாங்கிப் பார்த்து விட்டு,”நல்லாத் தான் தேர்வு செஞ்சி இருக்கீய! உங்களுக்கு இந்த ரெண்டும் கழுத்துக்குப் பாந்தமாக இருக்கும்!”என்று மருமகள்களைப் பாராட்டினர் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.
“அப்போ சரி. இதையே முடிவு பண்ணிக்கலாம்”என்ற அறிவொளியோ,
“இதுக்கு எவ்வளவு பணம்ன்னுப் பார்த்துச் சொல்லுங்க”என்று காசியிடம் உரைத்தான்.
உடனே அவரும்,“சரிங்க ஐயா”என்று தானும் அந்த இரண்டுச் சங்கிலிகளுக்கானப் பணத்திற்கான ரசீதை சில நிமிடங்களிலேயே தயார் செய்து அவர்களிடம் கொடுத்தார்.
அதை வாங்கிப் பார்த்துக் கவனமாகப் பரிசோதித்து விட்டு,”ம்ஹ்ம். கணக்குச் சரியாகத் தான் இருக்கு”என்ற நஞ்சுண்டனோ,
அதை தனது மனைவி, மகன்கள் மற்றும் மருமகள்களிடம் காட்டி விட்டு,
அவர்களும் அதைப் பார்த்து முடித்து விடவும்,
உடனே,”நீ போய்ப் பணத்தை எடுத்துட்டு வந்து கொடும்மா”என்று மனைவியிடம் தெரிவித்து அனுப்பினார் நஞ்சுண்டன்.
உடனே தானும் எழுந்து சென்று தங்களது அறையில் இருந்த அடுக்குப் பெட்டியில் இடம் பெற்றிருந்தப் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வந்து காசியிடம் கொடுத்தார் ராஜகுமாரி.
அதைப் பெற்றுக் கொண்டுத் தனது கண்களை மூடிக் கடவுளிடம் வேண்டிக் கொண்டுத் தன்னிடமிருந்த தங்கச் சங்கிலிகளைத் தனித்தனிப் பெட்டிகளில் அடைத்து அவற்றை அதற்குரிய நபர்களிடம் ஒப்படைத்து,
“உங்க ரெண்டு பேருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்ம்மா. இதுக்கு அப்பறம் இன்னும் உங்களுக்கு நிறையத் தங்க நகைகள் சேர்ந்து உங்களோட வாழ்வுச் செழிக்கட்டும்”என்று செந்தாழை மற்றும் பூவிழிக்கு மனதார வாழ்த்துக்களைக் கூறினார் காசி.
உடனே தாங்களும்,“நன்றிங்க ஐயா”என்றிருந்தார்கள் இருவரும்.
அதற்குப் பிறகு அந்தக் காசியைப் பத்திரமாக அனுப்பி வைத்து விட்டுக் கூடத்தில் உட்கார்ந்து இருந்த தங்களது குடும்ப உறுப்பினர்களிடம்,
“நாளைக்குச் செந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை இருக்கு”என்றத் தகவலைத் தெரிவித்தான் அறிவொளி.
உடனே,”சரி. போயிட்டு வாங்க. அதுக்கு அடுத்து இரண்டு நாள் கழிச்சு உங்களுக்குத் தாலிப் பிரிச்சுக் கோர்க்கிற சடங்கு இருக்கு! ஞாபகம் வச்சுக்கோங்க”என்று அவர்கள் இருவருக்கும் நினைவுப்படுத்தினார் ராஜகுமாரி.
அதே சமயம்,”ஆனால் நாளைக்கு வெள்ளிக்கிழமை தானே? அப்படின்னா நீ நாளைக்கு வீட்டில் இருக்கனும்ல?”எனத் தன்னுடைய மனைவியிடம் விசாரித்தான் திருவாதிரன்.
அதற்கு,“ஆமாங்க”என்று பதிலளித்தாள் பூவிழி.
“ஆனால் நீ அன்னைக்கு முழுசும் வீட்டில் இருக்காதேம்மா. காலையில் எங்க கூட காட்டுக்கு வா. உனக்கு அங்கே ஒரு முக்கியமான வேலை இருக்கு”என்று அவளிடம் அறிவுறுத்திக் கூறினான் அவளது கணவன்.
“என்னங்க இப்படி சொல்றீங்க? செந்தாழையும், அவ புருஷனும் ஆஸ்பத்திரிக்குப் போனதுக்கு அப்பறம் அத்தை தனியாகத் தானே இருப்பாங்க? அதனால், அன்னைக்கு நான் இங்கே இருந்து அவங்க கூடப் பேசிட்டு இருக்கேனே?”என்று அவனிடம் தன் மாமியாரின் மேலிருந்த அக்கறையில் வினவ,
தனது இளைய மருமகள் தனக்கு ஏற்றுப் பேசுவதை அவதானித்த ராஜகுமாரிக்கு மனம் குளிர்ந்து போயிற்று.
“ஆனால், நீ அங்கே காட்டில் இருக்கிற வேலையையும் பார்க்கனும் தானே?”என அவளிடம் அழுத்திக் கேட்டிருந்தான் திருவாதிரன்.
அதில் அவன் தனக்கு உணர்த்திய மறைமுகப் பொருளைப் புரிந்து கொண்டு,
“ம்ஹ்ம். அதுவும் சரி தானுங்க. இப்போ இதுக்கு என்னத் தீர்வைக் கண்டுபிடிக்கிறது?”என்றிருந்தாள் பூவிழி.
அதில்,”அப்போ ஒன்னுப் பண்ணு. நீ காலையில் இங்கே இருந்து என் கூடப் பேசிட்டு இரு. அதுக்கப்புறமாக மதியச் சாப்பாட்டை முடிச்சிட்டு இவங்க கூடச் சேர்ந்து காட்டுக்குப் போயிட்டு வா”எனத், தானே முன் வந்து அவளுக்கானத் தீர்வைக் கண்டறிந்து சொன்னார் ராஜகுமாரி.
அதைக் கேட்டவுடன் தனது முகம் விகசிக்க,”இது நல்ல யோசனையாக இருக்கே அத்தை! ரொம்ப நன்றி”என்று அவருக்கு மனதார நன்றித் தெரிவித்தாள் அவரது இளைய மருமகள்.
“அப்போ சரி”எனக் கூறி விட்டிருந்தான் திருவாதிரன்.
அப்போது தங்களது மருமகள்களுக்காக வாங்கிய தாலிச் சங்கிலிகளைப் பூஜை அறையில் வைத்து விட்டார் ராஜகுமாரி.
அதற்குப் பிறகுச் சில மணி நேரங்கள் தங்களுக்குள் தாலிப் பிரித்துக் கோர்க்கும் சடங்குகளைப் பற்றிய உரையாடலை மேற்கொண்டு முடித்து விட்டு அன்றிரவு தத்தமது அறைகளுக்குள் நுழைந்து விட்டார்கள் அனைவரும்.
அதே சமயத்தில் தனது தமையனைத் தனியாக அழைத்து,”நாளைக்கு நீங்கப் பரிசோதனையை முடிச்சிட்டு வந்ததுக்கு அப்பறம் நான் உன்னையும், நம்மளோட அப்பாவையும் ஒரு முக்கியமான இடத்துக்குக் கூட்டிட்டுப் போகனும்னு நினைக்கிறேன்! அதே மாதிரி, நாம நம்மப் பொண்டாட்டிகளுக்கு அந்தப் புகைப்படச் சட்டத்தை அண்ணியோட வளைகாப்பு அப்போ கொடுப்போமா?”எனக் கேட்டிருந்தான் திருவாதிரன்.
“சரிடா. நீ எதையும் காரணம் இல்லாமல் சொல்ல மாட்ட - ன்னு எனக்குத் தெரியும்! அதனால் நாங்கப் பரிசோதனையை முடிச்சிட்டு வந்ததுக்கு அப்பறமாக இதை எல்லாத்தையும் பார்த்துக்கலாம்”என்று அவனிடம் தெரிவித்து விட்டுத் தன் அறைக்குச் சென்று விட்டிருந்தான் அறிவொளி.
அதற்குப் பிறகுத் தங்களது அறைக்கு வந்து,”என்னப் பேச்சுப் பேசுற நீ?”எனத் தன் மனைவியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அவளது குறும்புப் பேச்சிற்கான இனிமையான தண்டனைகளை வாரி வழங்கத் தொடங்கி விட்டிருந்தான் திருவாதிரன்.
அதை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டுத், தானும் தன் கணவனுக்கு ஈடு கொடுக்க ஆரம்பித்து விடவும் அன்றைய இரவு அவர்கள் இருவருக்கும் மிகவும் இனிமையானதாக அமைந்தது எனலாம்!
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக