முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே - 46

 அதே டிஸ்கிளைமர் தான் ஃப்ரண்ட்ஸ் 📌🙏


அதை தனது தந்தைப் பார்க்காமல் மறைத்துக் கொள்ளவும், 


“இனிமேல் இவர் தான் நம்மளோட காட்டோட மேற்பார்வையாளர்”எனத் தன்னுடைய இரண்டு மகன்களிடமும் அறிவித்தார் நஞ்சுண்டன். 


அவர்கள் இருவரும் கூட,“ம்ஹ்ம். நீங்களாவது உங்க வேலையைக் கவனமாகப் பாருங்க”என்று பூதபதிக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்கள். 


”இதுக்கப்புறமாவது இங்கே எல்லாம் நல்லபடியாகத் தான் போயிட்டு இருக்கு”என்றிருந்தான் அறிவொளி.


உடனே,”கவலைப்படாத அண்ணா! இனிமேல் எல்லாமே நல்லபடியாகத் தான் போகும்”என அவனிடம் தீர்க்கமாக மொழிந்தான் திருவாதிரன். 


அதை அன்றிரவே தங்களது வீட்டாரிடம் தெரிவித்து விட்டிருந்தனர் ஆண்கள் மூவரும். 


அதை ஆமோதிக்கும் விதமாக,“அந்த மூனுப் பேரையும் கண்டுபிடிக்கிறது தேவையில்லாத வேலைன்னுத் தோணுது. அதனால் பூதபதியே மேற்பார்வையாளராக இருக்கட்டும்”என்று கூறி விட்டார் ராஜகுமாரி. 


அதேபோல் முருகையன், சடையன் மற்றும் விருமனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய நபர்களில் ஒருவரானப் பூதபதியைக் காட்டின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டதை எண்ணித் தானும் நிம்மதி அடைந்து போனாள் பூவிழி. 


அன்றைய இரவு உணவை உண்டு முடித்தப் பின் தத்தமது அறைக்குள் சென்று அடைந்து கொண்டார்கள் அனைவரும். 


அதேபோல் தங்களது அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றிய மறு நிமிடமே தனது மனைவியின் இதழ்களைத் தன் இதழ்களால் முற்றுகை இட்டு விட்டான் திருவாதிரன். 


அதில் திகைத்துப் போனவளோ, சில கணங்களிலேயே தன்னை நிலைப்படுத்திக் கொண்டுத் தன் கணவனின் இதழ்கள் செய்த மாயத்தில் தன் கண்களை மூடி அவனுக்கு இசைந்து கொடுக்க ஆரம்பித்தாள் பூவிழி. 


அதில் அவள் தனக்கு மேற்கொண்டு முன்னேற அனுமதி அளித்து விட்டதை உணர்ந்து அவளை முத்தமிட்டுக் கொண்டே கட்டிலிற்குக் கூட்டிக் கொண்டு வந்து மனைவியின் இதழ்களை விடுவித்து விட்டு அவளை மெத்தையில் கிடத்த, 


அதில் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கத்தில் தலையைக் குனிந்து கொள்ளவும், 


அதைக் கண்டுப் புன்னகைத்து விட்டு,“ஏய் விழி! உன் விழிப் பார்வையை என்னை நோக்கி வீசுடி!”என்று மனைவியிடம் மோகக் குரலில் வேண்டிக் கேட்டுக் கொண்டான் திருவாதிரன். 


அதைக் கேட்டுத் தனது விலோசனங்களைப் பெரிதாக்கி அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் பூவிழி.


உடனே அவளுக்கு அருகில் சென்று படுத்து விட்டு,”என்னடி?”எனக் கேட்டவனோ, 


மனைவியின் இடையில் தன் கரத்தை வலம் வரச் செய்ய, 


அதில் அவளது உடலெங்கும் புல்லரித்துப் போய் விடவும், 


“ப்ச்! ஏங்க!” என்றவளை, 


“சொல்லுடி! எதுக்கு என்னை இப்படி கண்ணைப் பெருசாக்கிப் பார்த்த?”என்றவனோ, 


அவளது இடையிலிருந்த தன் கரத்தை விலக்கிக் கொண்டு அங்கே தனது முகத்தைப் பதித்தான் திருவாதிரன். 


அதில் மேலும் உணர்வுப் பிடியில் ஆட்கொண்டுப் போய் விட்டிருந்தாள் பூவிழி. 


“நீங்க சும்மா இருந்தால் தான் நான் பதிலைச் சொல்லுவேன்! உங்களுக்கு இதே வேலையாகப் போச்சு!”எனக் கணவனிடம் குறைபட்டுக் கொண்டாலும் கூட அவனது தலைமுடியைக் கோதிக் கொடுக்கவும், 


“சொல்லுடி! ரொம்பத் தான் கிராக்கிப் பண்ணிக்கிற!”என்றவனோ, 


அவளது இடையில் தனது இதழ்களை ஆங்காங்கே அழுத்தமாகப் பதிக்கத் தொடங்கி விட்டான் திருவாதிரன். 


“அதுவா? நீங்க இப்போதெல்லாம் நிறையக் கவிதைகளைச் சொல்றீயயே! அதை நினைச்சு ஆச்சரியமாக இருந்துச்சு! அதனால் தான் உங்களை அப்படி பார்த்தேன். போதுமா?”என அவனிடம் பதிலளித்தாள் பூவிழி. 


அதைக் கேட்டதும் தனது இதழ்களில் முறுவலை வரவழைத்துக் கொண்டு,”ஓஹோ! அது என்னமோ தெரியலைடி! உங்கிட்ட மட்டும் இப்படியெல்லாம் கவிதையாகப் பேசத் தோணுது! ஆனால் இப்போ பேசினது போதும்ன்னு நினைக்கிறேன்”என்றுரைத்து விட்டு, 


தன்னுடைய மனைவியை மொத்தமாக கொள்ளையடிக்க ஆரம்பிக்கும் விதமாக, 


அவளை மெத்தையில் நன்றாகப் படுக்க வைத்து விட்டுத் தானும் அவளின் மேல் படர்ந்து விட்டான் திருவாதிரன். 


அவர்களது ஆடைகள் அறைக்குள் ஒரு மூலையில் இடம் பெயர, அவர்கள் தங்களது இணைகளின் உடல்களின் வளைவு, நெளிவுகளை ஆராய்ச்சி செய்யும் வேலையில் இறங்கினார்கள் அந்தக் காதல் பட்சிகள் இருவரும். 


பூவிழியின் நெற்றியில் துவங்கி அவளது பாதங்கள் வரைக்கும் முத்தத்தில் குளிப்பாட்டினான் அவளது கணவன். 


அவளது கால் விரல்கள் ஒவ்வொன்றையும் முத்தமிட்டுக் கொண்டே அதில் சில கணங்கள் தனது தலையை வைத்துப் படுத்து விட்டுச் சில நிமிடங்கள் கழித்து மெல்ல முன்னேறி மனைவியின் கழுத்து வளைவில் தன்னுடைய முகத்தை மிருதுவாக இடம் பெறச் செய்திருந்தான். 


உடனே கணவனின் நெற்றியில் தனது இதழ்களால் அழுந்த முத்தமிட்டு விட்டு, 


அவனது மீசையுடன் சேர்த்து அவனது இதழ்களைச் சிறைப் பிடித்துக் கொண்டாள் பூவிழி. 


 இதழ்கள் இரண்டும் தங்களது இணைகளின் தேனைப் போட்டிப் போட்டுக் கொண்டு உறிஞ்சி முடித்தவுடன், மனைவியின் தோளில் தனது நாசியை வைத்து உரசினான் திருவாதிரன். 


அவர்கள் இருவருக்கும் இடையிலான தாம்பத்திய உறவையும் தாண்டி அவர்களது காதல் வாழ்விற்கு அர்த்தம் அளிக்கும் விதமாக அவர்களுக்கு ஒரு புதிய உறவு மலர்வதற்கான விதைப் போடப்பட்டு விட்டிருந்தது அந்தக் கூடல்! 


அதற்கடுத்த தினம், தான் காட்டிற்குச் செல்லும் நாள் என்பதால், காலையில் விரைவாக எழுந்து கிளம்பி விட்டிருந்தாள் பூவிழி.


அதேபோல், தாங்கள் இருவரும் கூடத் தயாராகி வந்திருந்தார்கள் திருவாதிரன், அறிவொளி மற்றும் நஞ்சுண்டன். 


“விழி! இன்னைக்குச் சாயந்தரம் நகைக் கடைக் காசியை வரச் சொல்லி விடுவேன். அப்போ நீயும், செந்தாவும் தான், உங்களுக்குப் பிடிச்சத் தாலிச் செயினைத் தேர்ந்தெடுக்கனும். மறந்துடாதே! சரியா?”என்று தன் இளைய மருமகளுக்கு அறிவுறுத்தினார் ராஜகுமாரி. 


அதற்குச்,“சரிங்கத்தை”எனக் கூறி விட்டாள் பூவிழி.


அப்போது,”நீ இன்னைக்கு இங்கே இருந்து உம்பொஞ்சாதியைப் பார்த்துக்கலாம்ல அண்ணே?”என்று தனது தமையனிடம் வினவினான் திருவாதிரன். 


அதில் தானும் சில நிமிடங்கள் யோசித்து விட்டு,”அதுவுஞ் சரி தான்! நான் நாளைக்குக் காட்டுக்கு வர்றேன்”என்று அவனிடமும், தந்தையிடமும் உரைத்தான் அறிவொளி. 


“சரிடா. அப்போ நீயே சாயந்தரம் காசியை வரச் சொல்லி ஆளனுப்பி விட்ரு”என்று அவனிடம் தெரிவித்து விட்டார் நஞ்சுண்டன். 


“நீங்கப் பார்த்துக்கோங்க. நாங்கப் போயிட்டு வர்றோம்”என அறிவொளி, செந்தாழை மற்றும் ராஜகுமாரியிடம் மொழிந்தாள் பூவிழி.


அதற்குப் பிறகு, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஜீப்பில் ஏறித் தங்களது காட்டிற்குப் பயணமானார்கள் அவளும், அவளது கணவன் மற்றும் மாமனார். 


அவர்களது வரவை அறிந்ததும் பூவிழியைத் தான் தேடினர் அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஆம்பல், அஞ்சலை மற்றும் நாகம்மை. 


அவள் தங்களது பார்வைக்குப் பட்டு விட்டதும், 


“அப்பாடா! அவ இன்னைக்கு வந்திருக்காள்டி! அங்கே பாருங்க”என்று தன் கணவன் மற்றும் மாமனாரைப் பின்பற்றித் தங்களது அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டிருந்த பூவிழியைத் தன்னுடைய இரண்டுத் தோழிகளுக்கும் காண்பித்தாள் அஞ்சலை. 


“ஆமாடி! நல்லவேளை இன்னைக்காவது வந்துட்டாளே! அவ அந்த அறையில் இருந்து வெளியே வந்து தன்னோட வேலையைப் பார்க்க ஆரம்பிக்கட்டும். அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு அவகிட்டே போய்ப் பேசுவோம்”என்று தானும் யோசனைக் கூறினாள் நாகம்மை. 


“சரிடி. இப்போ நம்ம வேலையைக் கவனிப்போம்”என்றுரைத்து விட்டாள் ஆம்பல். 


இதே நேரத்தில்,“உனக்கான வேலையை இனிமேல் பூதபதியே கொடுப்பாரு! அவர்கிட்டே போய்க் கேட்டுட்டு வேலையை ஆரம்பி விழி”எனத் தன் மனைவியிடம் அறிவித்தான் திருவாதிரன். 


“சரிங்க”என்றவளோ, 


அந்த அறையை விட்டு வெளியேறிப் பூதபதியைச் சந்தித்து தனக்கான வேலையைக் கேட்டுக் கொண்டு அதைச் செய்யத் தொடங்கி விட்டாள் பூவிழி. 


அதை நோட்டம் விட்டு,”அவ வேலையைச் செய்ய ஆரம்பிச்சுட்டாள்”என்று தன் தோழிகள் இருவரிடமும் தெரிவித்தாள் ஆம்பல். 


“ம்ஹ்ம். இன்னும் ஒரு கால் மணி நேரம் ஆகட்டும்டி!”என்றாள் அஞ்சலை. 


அதை மற்ற இருவரும் ஆமோதித்துக் கொண்டார்கள். 


அப்போது பத்து நிமிடங்கள் கடந்த பின்னர்,”பூதபதியைத் தான் மேற்பார்வையாளராக நியமிச்சு இருக்கோம்ன்னு இங்கே வேலை செய்ற எல்லார் கிட்டேயும் அறிவிச்சிடலாமாப்பா?”என்று தன் தந்தையிடம் கருத்துக் கேட்டான் திருவாதிரன். 


“ஆங்! தாராளமாக அறிவிச்சிடலாம்டா”என்றிருந்தார் நஞ்சுண்டன். 


உடனே,”அப்போ நீங்களே இதை அறிவிச்சிடுங்களேன்”என்று அவரிடம் தெரிவிக்கவும், 


“சரி. வா”என்று அவனை அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறிக் காட்டில் வேலை செய்பவர்களை ஒன்றுக் கூட்டி வைத்துப் பூதபதியை அழைத்து தன் அருகில் நிற்க வைத்துக் கொண்டு, 


“உங்க எல்லாருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லனும்! நாங்க இங்கே வர்றதுக்கு முன்னாடியே உங்களுக்கான வேலைகளைப் பிரிச்சுக் கொடுத்தது இவர் தானே?”என்று அவரைச் சுட்டிக் காட்டி அனைவரிடமும் வினவினார் நஞ்சுண்டன். 


அதற்கு அவர்களும்,”ஆமாங்க ஐயா”எனப் பதிலளிக்கவும்,


“அது தான் விஷயமே! இனிமேல் இவர் தான் இந்தக் காட்டோட மேற்பார்வையாளராக இருப்பார்! வேலையில் உங்களுக்கு எந்தக் குறை இருந்தாலும் அதை இவர்கிட்டே நீங்க தாராளமாக, வெளிப்படையாகச் சொல்லலாம். இதை அறிவிக்கத் தான் உங்க எல்லாரையும் கூப்பிட்டோம். இப்போ போய் உங்க வேலைகளைத் தொடருங்க”என்றுரைத்து அனைவரையும் அனுப்பி வைத்தார் நஞ்சுண்டன். 


“நல்லவேளை பூதபதி அண்ணனை மேற்பார்வை வேலைக்குப் போட்டாவளே! இனிமேல் நமக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது! நம்ம வேலையைச் சுதந்திரமாகப் பார்க்கலாம்”என்ற ஆம்பலிடம், 


“அப்போ பூவைப் பார்த்துப் பேச வேணாமா?”எனக் கேட்டாள் நாகம்மை. 


அதற்கு அவளோ,“அதில் எந்த மாற்றமும் இல்லைடி! கால் மணி நேரத்துக்கு மேலேயே ஆயிடுச்சு! வாங்க போவோம்”என்று பூவிழியிடம் சென்று, 


தங்களுக்கு முருகையன், விருமன் மற்றும் சடையன் கொடுத்த தொல்லைகளை அவளிடம் பட்டியலிட்டு முடித்து விட்டிருந்தார்கள் நாகம்மை, ஆம்பல் மற்றும் அஞ்சலை.


அதைக் கேட்டு முடித்ததும் அடுத்தச் சில நிமிடங்களிலேயே தனது கணவனைத் தனியாக அழைத்து அவனிடம் அந்தப் பெண்கள் மூவரும் தன்னிடம் கூறியதைப் பகிர்ந்து விட்டாள் பூவிழி.


அதில் தனது கண்கள் சிவக்க,”எங்ககிட்ட விஷயத்தைச் சொல்லிட்டீங்க தானே? அந்த மூனு பேரும் எங்க கைக்குக் கிடைக்கட்டும்! அதுக்கப்புறம் அவனுங்களுக்குத் தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்கிறோம்”என்று அந்த மூவரிடமும் வாக்களித்து அனுப்பி வைத்தான் திருவாதிரன். 


“அதுக்கு அவங்க மூனு பேரும் உயிரோட இருக்கனுமேங்க!”எனத் தன் கணவனைத் தீர்க்கமாகப் பார்த்துக் கூறியிருந்தாள் அவனது மனைவி. 


அதில் அவளை அழுத்தமாகப் பார்த்து,“அவங்க மூனு பேரும் இப்போ வரைக்கும் உயிரோடத் தான் இருக்காங்க! ஆனால் இதுக்கப்புறமும் அவனுங்களை உயிரோட விட்ற எண்ணம் எனக்கு இல்லை!”என்றவனைத் திடுக்கிட்டுப் பார்க்க, 


“நான் பொண்ணுங்க கூடப் பொறக்காதவன் தான்! ஆனால் என்னைப் பெத்தது ஒரு பொண்ணு தான்! அதே மாதிரி, இந்த அநியாயத்தைப் பார்த்து எல்லாம் எனக்குக் கோபம், ஆத்திரம், இதுக்குக் காரணமானவங்களுக்குத் தண்டனை கொடுக்கனும்ன்ற வெறி இதெல்லாம் வரலைன்னா நான் ஆம்பளையே இல்லைன்னு அர்த்தம்! அதனால் இவனுங்களை என்னால் கண்டிப்பாகச் சும்மா விட முடியாது விழி!”என்று அவளிடம் உறுதியாக உரைத்து விட்டு அவளை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினான் திருவாதிரன். 


முருகையன், விருமன் மற்றும் சடையனும், தன் மனைவியிடம் வாலாட்டும் போது தான், இத்தனை நாட்களாக அவர்கள் இதை ஒரு வேலையாகவும், பொழுதுபோக்காகவும் வைத்துக் கொண்டுத் தனது தந்தைக் கொடுத்த அதீத சுதந்திரத்தை உபயோகப்படுத்தி இங்கே வேலை செய்யும் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டிருந்து இருக்கிறார்கள் என்பதை எண்ணியவனின் உடல் இறுகிப் போய் விட்டிருந்தது. 


இனிமேல் அந்த மூவரையும் உயிருடன் வைத்திருக்கக் கூடாது என்று முடிவெடுத்து விட்டு, இந்த முறை அவர்களைப் பார்க்கச் செல்வதற்கு முன்பு இந்த விஷயங்கள் அனைத்தையும் தனது தந்தை மற்றும் தமையனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டான் திருவாதிரன். 


                            - தொடரும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...

நிருதனின் பூவிழியே! - 1

  டிஸ்கிளைமர் : ஆன்ட்டி ஹீரோ கதை “நான் என்ன ஆனாலும் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் செந்தா!”என்று அவளது தலையிலடித்துச் சத்தியம் செய்து கொடுத்திருந்தான் அறிவொளி.  “எனக்கு உங்க மேலே கொள்ளை நம்பிக்கை இருக்குத் தானுங்க! ஆனால் உங்கக் குடும்பத்தை நினைச்சா தான் பயமாக இருக்கு! என்னை அவங்க எப்படி ஏத்துப்பாங்கன்னு நெஞ்செல்லாம் திக்குத் திக்குன்னு அடிச்சுக்குது!”என்று அவனது தோளில் சாய்ந்தவாறே நடுக்கத்துடன் உரைத்தாள் செந்தாழை. “நீ எதுக்கு அதையெல்லாம் நினைச்சுக் கவலைப்பட்ற? அது தான், நான் இருக்கேன்ல? நான் எங்க வீட்டாளுங்க எல்லார் கிட்டேயும் பேசி நம்மக் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறேன் புள்ளை! அதுவரைக்கும் பொறுமையாக இரு!”என்று கூறி அவளைச் சமாதானப்படுத்த முயன்றவனிடம்,  “நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் பொறுமையாக இருப்பேனுங்க! ஆனால் என் வயித்துல வளர்ந்துட்டு இருக்குற நம்மப் புள்ளப் பொறுமையாக இருக்க மாட்டானே!”என்றவளை உச்சபட்ச அதிர்ச்சியுடன் விழிகள் பிதுங்கிப் போய் நோக்கி,  “நீ என்னடி சொல்றவ? நெசந்தானா?”எனக் கேட்டிருந்தான் அறிவொளி.  “ஆமாம் பின்னே! இந்த விஷயத்தில் யாராவது பொய் சொ...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...