ஆடைகளைத் துறந்து, தங்கள் இணையின் ஆளுமைக்கு உட்பட்டுத் தங்களது காதலை ஒருவருக்கு, ஒருவர் போட்டிப் போட்டு வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் அந்தக் கணவனும், மனைவியும்.
“விழி!”என்றவனின் மோகக் குரலில் தானும் உடல் சிலிர்க்க,
“ம்ஹ்ம். என்னங்க?”என்றிருந்தாள் அவனது மனைவி.
“நாமளும் குழந்தைப் பெத்துக்கலாமா? எனக்கு ரொம்பவே ஆசையாக இருக்கு! உனக்கு என்னத் தோணுது? உனக்கு இதில் விருப்பமா? இல்லைன்னா, கொஞ்ச நாளைக்குத் தள்ளிப் போடலாம்னு விருப்பப்பட்றியா?”என்று அவளது ஆடையில்லா முதுகில் தனது விரல்களை வைத்துக் கோலம் போட்டுக் கொண்டே கேட்டிருந்தான் திருவாதிரன்.
அதில் தனக்குள் இருந்த மோக உணர்வுகள் மொத்தமும் வெளிப்பட கணவனிடம் இன்னும் நெருக்கமாகச் சென்று அவனைக் கட்டிக் கொண்டாள் பூவிழி.
உடனே அவளது முகத்தை நிமிர்த்தி,”பதில் சொல்லுடி”என்று சினுங்கவும்,
“எனக்கும் குழந்தைப் பெத்துக்கனும்னு ஆசை இருக்குத் தானுங்க! ஆனால் இப்போ தானே செந்தாவுக்குக் குழந்தைப் பிறக்கப் போகுது? அதனால் அவளுக்குப் பிரசவம் முடிஞ்சதுக்கு அப்பறமாக நாமப் பெத்துக்கலாமா?”எனக் கேட்க,
“ஹேய்! அவங்களுக்குக் குழந்தைப் பிறக்கிறதுக்கும், நம்மளோட குழந்தைப் பெத்துக்கிறதுக்கும் என்னடி சம்பந்தம்?”என்று அவளது கன்னத்தை மெலிதாக கடித்தான் திருவாதிரன்.
“இரண்டு பேரும் ஒரே சமயத்தில் குழந்தைப் பெத்துக்கிட்டால் எங்களைப் பார்த்துக்கிறதுக்குக் கஷ்டமாக இருக்கும்ல? அதான் சொல்றேனுங்க”என்றிருந்தாள் பூவிழி.
“ஓஹோ! நாம என்னமோ உடனே குழந்தைப் பெத்துக்கப் போற மாதிரியும், அதில் உன்னையும், செந்தாழையையும் கவனிக்கக் கஷ்டமாக இருக்கும்னு வேற கவலைப்பட்றீங்களாக்கும்? யாருடி நீ? உன்னால் இப்படியெல்லாம் எப்படி யோசிக்க முடியுது?”என்று சலித்துக் கொள்ளவும்,
“ஏங்க”எனக் கணவனிடம் கோபித்துக் கொண்டு திருவாதிரன் விலகிச் செல்லப் பார்க்க,
அதைப் புரிந்து கொண்டு உடனே அவளை உடும்புப் பிடியாகப் பிடித்து வைத்துக் கொண்டு,
“என்னடி பேச்சுப் பேச்சாக இருக்கும் போது இப்படி விலகிப் போற?”என்று கேட்டு விட்டு அவளது உதடுகளில் தனது இதழ்களை அழுத்தமாகப் பதித்தான் திருவாதிரன்.
“ம்க்கும்! போங்க! நீங்க என்னைக் கிண்டல் செய்றீய!”என்று அவனைக் குற்றம் சாட்டினாள் பூவிழி.
“அதுக்குத் தள்ளிப் போற வேலையெல்லாம் வச்சுக்காதே”என்று அவளுக்கு எச்சரிக்கை விடுக்க,
“ஹாங்! அப்பறம்? நான் இப்படித் தான் இருக்கனும்னு நீங்க என்னை அடக்குறீயளோ?”என்று அவனிடம் எகத்தாளமாக வினவவும்,
“நானா டி உன்னை அடக்குறேன்? நீ தான் டி என்னை அடக்கி ஆண்டுக்கிட்டு இருக்கிற!”என்றுரைத்து விட்டு,
அவளது இடையில் அழுத்தமாக கிள்ளி விட்டிருந்தான் திருவாதிரன்.
அதில்,”ப்ச்! என்னங்க!”என்று அவனிடம் சினுங்கினாள் பூவிழி.
“என்னடி?”என்றவனின் கரங்களும், இதழ்களும் அவளது உடலில் பாரபட்சம் இன்றிப் பயணிக்கத் தொடங்கி விட்டிருந்தது.
அதில் தானும் பேச வந்த விஷயத்தை மறந்து போய்க் கணவனின் உடலைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அதில் தனது இதழ்களை அழுத்தமாகப் பதிக்கத் துவங்கி, அவனிடமிருந்து கற்றுக் கொண்டிருந்த கலவிப் பாடத்தை அவனிடமே பரிசோதனை செய்ய ஆரம்பித்தாள்.
மனைவியிடம் தனது உடலை மொத்தமாகச் சமர்ப்பித்து விட்டு அவளது தோள்களில் தனது வன் இதழ்களைப் பதித்துக் கொண்டே அவளது பெயரை இடைவிடாமல் உச்சரித்தான் திருவாதிரன்.
அதில் புன்சிரிப்பை உதிர்த்து விட்டு,”என்னங்க எம்பேரை இப்படி இடைவெளியே விடாமல் சொல்லிட்டு இருக்கீங்க? இந்தப் பேரு உங்களுக்கு அவ்வளவு பிடிச்சிருக்கா?”என்று அவனிடம் கிண்டலாக கேட்டாள் பூவிழி.
“ஆமாம்! அதுக்கு முன்னாடி எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு”என்றவனைப் பெருமிதத்துடன் பார்த்து விட்டு,
அவனது மார்பில் முத்த அச்சாரங்களைப் பதித்தவளோ, இப்போது அவனைக் கலவியின் உச்சத்தைத் தொட வைத்து விட்டிருந்தாள் மனைவி.
அதற்குப் பிறகுத் தங்களது ஊடல் முடிவிற்கு வந்ததும் தங்களைப் போர்வையால் சுற்றிக் கொண்டு விட்டு,
“நீங்க இப்போ வரைக்கும் நான் கேட்டதுக்குப் பதில் சொல்லவே இல்லீங்க”என்று அவனிடம் குறைபட்டுக் கொண்டாள் பூவிழி.
“சரி. இப்போ சொல்றேன்”என்றவனோ,
அவளது செவிகளைத் தனது அதரங்களால் எச்சில் செய்து விட்டு,
“நாமக் குழந்தைப் பெத்துக்கனும்னு யோசிச்சிட்டாலே குழந்தை வந்துடப் போவதில்லை தானே? எல்லாமே கொஞ்சம், கொஞ்சமாகப் பொறுமையாகத் தானே நடக்கும்? அதனால் உந்தங்கச்சிக்கு இன்னும் கொஞ்ச மாசத்துல குழந்தை பிறந்துரும். ஆனால் நீ இன்னும் மாசமாக கூட ஆகலை! அதே மாதிரி, நமக்குக் குழந்தைப் பிறந்தால் மத்தவங்களோட உதவியை எதிர்பார்க்காமல் அதை நாமளே பார்த்துக்கலாம்! புரியுதா?”என அவளுக்குச் சொல்லிப் புரிய வைத்தான் திருவாதிரன்.
“ம்ஹ்ம். அதுவுஞ் சரி தானுங்க! நாம யாரோட உதவியையும் எதிர்பார்க்கக் கூடாது”என்று தானும் அவனிடம் தீர்க்கமாக கூறியிருந்தாள் அவனது மனைவி.
“ம்ஹ்ம். இப்போ இன்னொரு தடவை அதுக்கு உண்டான ஏற்பாட்டை ஆரம்பிப்போமா?”என்றவனிடம்,
வெட்கப் புன்னகையை உதிர்த்துச் சம்மதம் தெரிவிக்க,
அதில் உடனே தாமதிக்காமல் அவளை ஆட்கொள்ளத் தொடங்கினான் திருவாதிரன்.
மறுநாள் காலையில் வெகு விரைவாகவே எழுந்து வரவேற்பறைக்கு வந்திருந்தனர் இருவரும்.
அப்போது அனைவருக்கும் காப்பி விநியோகம் செய்யப்பட்டது.
அதைப் பருகிக் கொண்டே,”உங்க ரெண்டு ஜோடிகளுக்கும் தாலி பிரிச்சிக் கோர்க்கிற சடங்கையும் நடத்தி முடிச்சிடலாம்னு நாங்க முடிவு செஞ்சி இருக்கோம்”என்று கூறித் தன் கணவனையும் உரையாடலுக்குள் இழுத்துக் கொண்டார் ராஜகுமாரி.
உடனே அதைப் புரிந்து கொண்டு,”ஆமாம். அதையும் முடிச்சிட்டால் உங்களோட கல்யாணத்தில் மிச்சம் இருக்கிற சடங்கையும் முடிச்ச நிம்மதி எங்களுக்கு வந்துரும்ல? அடுத்து உங்க ரெண்டு பேரோட குழந்தைகளையும் பார்த்துக்கிறது தானே எங்களோட பொறுப்பாக இருக்கும்? அதனால் தான் சொல்றோம்”என்றிருந்தார் நஞ்சுண்டன்.
அதைக் கேட்டதும் தங்களை ஒருவரையொருவர் தர்ம சங்கடத்துடன் ஏறிட்டுப் பார்த்துக் கொண்டார்கள் அறிவொளி மற்றும் செந்தாழை.
அதில் அவர்களை முறைத்துப் பார்த்து,”இங்கே பாருங்க! இப்படியே சங்கடப்பட்டுக்கிட்டே இருந்தால் நம்மளோட வேலைகளையும், சடங்கு, சம்பிரதாயங்களையும் செய்யவே முடியாது! அதனால் ஊரு ஆயிரம் பேசட்டும்! நாம நம்ம வேலைகளைப் பார்த்து தான் ஆகனும்! சொல்றதுப் புரியுதா?”என அவ்விருவருக்கும் அறிவுறுத்திக் கேட்டார் ராஜகுமாரி.
அவரது அந்தப் பேச்சைக் கேட்டு அங்கே இருந்த அனைவருமே அவரை வியப்பாக நோக்கினர்!
அதை அவதானித்து விட்டு,”என்ன என்னை என்னமோ வித்தியாசமாகப் பார்க்குறீய எல்லாரும்?”எனத் தன்னுடைய மற்றக் குடும்ப உறுப்பினர்களிடம் வினவ,
“அப்படியெல்லாம் எதுவும் இல்லம்மா”என அவருக்குப் பதிலளித்தான் அறிவொளி.
ஆனால் அவருக்கு அவர்களது பார்வையின் அர்த்தம் புரிந்து விட்டதால்,
“ஓஹோ! இவங்க என்னடா திடீர்னு இப்படியெல்லாம் நல்லவிதமாகப் பேசுறாகளேன்னு ஆச்சரியப்பட்டுப் பார்த்தீகளாக்கும்?”என்று சரியாக கணித்துக் கேட்டிருந்தார் ராஜகுமாரி.
அதில் தாங்கள் ஒருவரையொருவர் சங்கடமாகப் பார்த்துக் கொள்ளவும் அதிலேயே, தான் அவர்களிடம் கேட்டக் கேள்விக்கானப் பதில் கிடைத்து விட்டதால்,
“என்னை என்னச் செய்யச் சொல்றீய? நம்மக் குடும்பத்துக்குள்ளே எந்தப் பிரச்சினையோ, சண்டையோ நடந்துக்கிட்டுப் போகுது! ஆனால் நம்மளைப் பத்தி வெளி ஆளுங்க ஒரு வார்த்தை தப்பாகப் பேசிடக் கூடாது! அது தான் எனக்கு முக்கியம்! அதனால் தான் இதையெல்லாம் செய்றேன்”என அவர்களுக்கு விளக்கம் அளிக்கவும்,
அதில் மற்றவர்களும் தங்களது சந்தேகத்திற்கானப் பதில் கிடைத்து விடவும்,
“சரி. உங்க இஷ்டம்! நாங்க இதுக்குச் சம்மதிக்கிறோம்”என்று தனது ஒப்புதலைச் சொல்லி இருந்தனர் அறிவொளி மற்றும் செந்தாழை.
“உங்களுக்கு ஏதாவது மாற்றுக் கருத்து இருக்குதா?”என்று திருவாதிரன் மற்றும் பூவிழியிடம் வினவினார் நஞ்சுண்டன்.
உடனே அவர்கள் இருவரும்,“இல்லை”என்றார்கள் கோரஸாக.
உடனே ராஜகுமாரியும்,“அப்போ சரி. அதுக்கான நாளைக் குறிச்சிட்டு, ஏற்பாடுகளையும் செய்றோம்! நீங்க எப்பவும் போல உங்க வேலைகளைப் பாருங்க”என்றுரைத்து விடவும்,
அதற்குப் பிறகு அனைவரும் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, உணவையும் உண்டு முடித்து விட்டு,
“நாங்கப் போயிட்டு வர்றோம்”என்று ராஜகுமாரி, செந்தாழை, பூவிழி மற்றும் அறிவொளியிடம் விடைபெற்றுக் கொண்டுத் தங்களது காட்டிற்குப் பயணமானார்கள் திருவாதிரனும், நஞ்சுண்டனும்.
அன்று புதன்கிழமை ஆதலால், அது தனது தங்கையுடன் செலவழிக்கும் நாளாக இருந்ததாலேயே தனது கணவனைக் காட்டிற்கு அனுப்பி வைத்து விட்டுத் தங்கையுடன் நேரத்தைச் செலவிடத் தொடங்கி விட்டிருந்தாள் பூவிழி.
இங்கே தங்களது காட்டிற்கு வந்து சேர்ந்திருந்து அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டனர் திருவாதிரன் மற்றும் நஞ்சுண்டன்.
அப்போது,”இனிமேல் அந்த முருகையன், சடையன் அப்பறம் விருமனைப் பத்திக் கவலைப்படாதீங்கப்பா! ஏன்னா, நீங்க எவ்வளவு முயற்சி செஞ்சாலும் அவங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியாது!”என்று தன்னிடம் அழுத்தமாக உரைத்த மகனைத் திகிலுடன் பார்த்து,
“நீ சொன்னால் சரி தான் திரு! ஆனால் அவங்க எங்கே இருக்காங்கன்னு உனக்குத் தெரியுமா?”என அவனிடம் கேட்டிருந்தார்.
“ம்ஹூம்! அவங்க மூனு பேரும் எங்கே இருக்காங்கன்னு எனக்கும் தெரியாதுப்பா! என்னாலேயும் அவங்களைக் கண்டுபிடிக்கவே முடியலை!”என்று சலிப்புடன் அவருக்குப் பதிலளித்தான் திருவாதிரன்.
அதில் மேலும் அதிர்வு அடைந்து போய் மகனைப் பார்த்துப் பயத்தில் எச்சில் விழுங்கி விட்டு,”சரிப்பா”எனக் கூறி அந்தப் பேச்சை அப்படியே முடித்துக் கொண்டார் நஞ்சுண்டன்.
இங்கே வீட்டிலோ சாப்பாட்டு மேல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டுத் தனது தங்கையிடம்,”உனக்கு அடுத்து எப்போ மருத்துவப் பரிசோதனை இருக்குச் செந்தா?”என்றிருந்தாள் பூவிழி.
“வர்ற வெள்ளிக்கிழமை இருக்குக்கா”என்று அவளிடம் உரைத்தாள் செந்தாழை.
“ஓஹ் சரி. அப்போ நான் வீட்டில் இருக்கிற வேலையைப் பார்க்கிறேன். நீ பரிசோதனையை முடிச்சிட்டு வந்ததும் உன் கூட உட்கார்ந்து பேசுறேன். சரியா?”என்றத் தமக்கையிடம்,
அதற்குத் தானும்,“சரிக்கா”என்று கூறி விடவும்,
இதைக் கவனித்துக் கொண்டிருந்த இவர்களது மாமியாரான ராஜகுமாரியோ,’என்ன இவளுக ரெண்டு பேரும் இவ்வளவு சீக்கிரத்திலேயே ராசியாகிட்டாளுக? என்ன தான் இவளுகளுக்கு இடையிலே சண்டையை மூட்டி விட்டாலும் ஒரே ரத்தம்ன்றதால் ஒன்னாகிட்டாளுக போலவே!’எனப் பொருமலுடன் எண்ணி விட்டு அவர்களை ஆதங்கத்துடன் பார்த்தார்.
அதே சமயம், தனது ஜீப்பில் முருகையன், சடையன் மற்றும் விருமனை அடைத்து வைத்திருந்த கிடங்கிற்குச் சென்றான் திருவாதிரன்.
அங்கே அவர்களோ பார்க்கவே பரிதாபமாக இருந்து கொண்டு அவனிடம் தங்களது வலுவிழந்த கரங்களைக் குவித்து தங்களை விட்டு விடுமாறு கெஞ்சத் தொடங்கி விட்டார்கள்.
“மூச்! வாயை மூடுங்க! பொம்பளைங்க கிட்டே திமிராக வாலாட்டும் போது இந்தப் பயம் எல்லாம் எங்கே போச்சு? நீங்கப் பண்ணதை எல்லாம் கேட்டுட்டுத் தான் வந்திருக்கேன்! எவ்வளவு ஆட்டம் ஆடி இருக்கீங்க நீங்க மூனு பேரும்! அதையெல்லாம் கேட்டப்போ உங்களைக் கண்டந்துண்டமாக வெட்டிப் போடனும் போல் இருந்துச்சு எனக்கு!”என்று அவர்களிடம் கர்ஜித்தான் திருவாதிரன்.
அதில் அவனை உயிர்ப் பயத்துடன் நோக்கினர் அந்த மூவரும்.
- தொடரும்
இந்தக் கதை விரைவில் முடியப் போகிறது ஃப்ரண்ட்ஸ்! அடுத்து ரீரன் கதைப் பதிவிட்றேன். அதுக்கப்புறம் புதுக் கதையோட கொஞ்சம் யூடீஸ் எழுதிட்டுத் திங்கள் முதல் வெள்ளி வரை எப்பவும் போலப் போஸ்ட் பண்றேன்! நன்றி 🖤🙏

கருத்துகள்
கருத்துரையிடுக