முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 35

 


மஹதனும், மௌனாவும் தங்களது தேன்நிலவிற்காக ஏற்பாடுகள் செய்ய நினைக்கும் போது, தோழியைச் செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசினாள் அகதா.


"ஹாய் அகி" என்று களிப்புடன் கூறினாள்.


"அம்மா உன் கூடப் பேசனும்னு சொன்னாங்க. இதோ கொடுக்கிறேன்" என்ற தகவலை அவளிடம் தெரிவித்து, அன்னபூரணியிடம் செல்பேசியைத் தந்தாள் அகதா.


"மௌனா‌ செல்லம்! அங்கே உனக்கு எல்லாம் செட் ஆகிடுச்சா?" என்று முதலில் மகளைப் பற்றிய விசாரிப்பை ஆரம்பித்தார் அவளது அன்னை.


"ஆமாம் மா. நான் ஓகேவா இருக்கேன்" என்று அவரிடம் நேர்மறையானப் பதிலைக் கூறினாள் மௌனா.


"சரி ம்மா" என்று திருப்தியுடன் கூறியவர்,


"அப்பறம், நாங்க ஊருக்குக் கிளம்பலாம்னு இருக்கோம் டா" என்று மகளிடம் சொன்னார் அன்னபூரணி.


"ஏன் ம்மா இவ்ளோ சீக்கிரமாகப் கிளம்புறீங்க?" என ஏமாற்றத் தொனியில், தாயிடம் வினவினாள் மௌனா.


"ஆமாம் டா. நீங்க ஹனிமூனுக்குப் போகிறதுக்கு முன்னாடியே, கிளப்பிடலாம்னு தான்" என்றார் அன்னபூரணி.


"ம்ஹ்ம்! நாங்க இன்னைக்குத் தான், ஹனிமூனுக்கானப் பிரிப்பரேஷனை (ஆயத்தங்கள்) ஸ்டார்ட் பண்ணோம்" என்றாள் மகள்.


"நீங்க எப்போ போகப் போறீங்க?" எனக் கேட்டார் அவளது தாய்.


மௌனா,"இரண்டு நாளில் போகனும் மா" என விடையளித்தாள்.


"அப்பா பேசனும்ன்றார் டா" என்று தன் கணவரிடம் செல்பேசியைத் திணித்தார் அன்னபூரணி.


"தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,"ப்பா!"என்று தந்தையை அழைத்தாள்.


"மௌனா ம்மா! எப்படி டா இருக்க?" என்று பாசம் பொழிந்தது அவரது குரலில்.


"நல்லா இருக்கேன் ப்பா. என்றவள்,

"இவ்ளோ சீக்கிரமாக என்னை விட்டுப் பிரிஞ்சு, வேற ஊருக்குப் போகனும்னு உங்க எல்லாருக்கும் ஆசையா அப்பா?" என மனம் தாளாமல் தந்தையிடம் கேட்டு விட்டாள் அவரது மகள்.


"ஐயோ! இல்லைடா ம்மா. நாங்க அங்கே போனதும், உங்களோட ஹனிமூன் ட்ரிப் முடிஞ்சு, வர சொல்லலாம்னு இருக்கோம் டா" என்று அவளுக்குப் புரிய வைத்தார் சிவமணி.


"சரிங்க அப்பா.நீங்க ஊருக்குப் போன, அடுத்த நாள், நாங்களும் கிளம்பப் போறோம்" என்று தந்தையிடம் தெரிவித்தாள் மௌனா.


"முன்னாடியே கிளம்பினால், உங்களை வழியனுப்பி விட்டுட்டுப் போகலாம்னு நினைச்சோம் டா" என்று கூறினார் சிவமணி.


"இருக்கட்டும் ப்பா" என்றவள், அவர்கள் புறப்படும் தேதியைக் கேட்டுக் கொண்டு, அகதாவிடம் பேசினாள்.


"அகி!" என இவளது அழைப்பு, மௌனாவின் தோழிக்கு, கவலையான உணர்வுகளைக் கொடுத்தது.


"மௌனா…" என்று தயங்கிப் பேசினாள் அகதா.


"ம்ம்… நீங்க கிளம்புற டேட் சொன்னாங்க" என இயல்பாகப் பேச முனைந்தாள் மௌனா.


இவ்விடத்தில், இவளது மற்றும் அகதாவின் உரையாடல்கள் சாதாரணமாக இருக்கலாம் தான்! ஆனால், தானே எப்போதாவது பார்த்துச் செல்லும் தன் பெற்றோருடன் வாழ்நாள் முழுவதும் இவள் தங்கப் போகிறாள் என்பதை மௌனாவால் ஏற்றுக் கொள்ள முடியுமா? என்ற எண்ணம் அகதாவிற்குள் எழுந்தது.


மௌனாவின் உள்ளத்திலும், இந்த உணர்வின் மிச்சம் இருந்தது போலும்! அனால் தான், இருவருக்கிடையேயான சம்பாஷணைகள், இப்படி தடுமாற்றம் காண்கிறது.


"ஓஹ்… ஓகே மௌனா. நீ எப்போ இங்கே வர்ற?" என்று அவளைக் கேட்டாள் அகதா.


"அவர்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்" என்று தோழியுடன், சிறு உரையாடலை முடித்துக் கொண்டு அழைப்பை வைத்தாள் மௌனா.


தன் கணவனிடம் வந்தவளோ,"என்னங்க! எங்கப்பா, அம்மாவும், அகியும் ஊருக்குப் போகப் போறாங்களாம்" என்று அவர்கள் புறப்படும் தேதியையும் அவனிடம் கூறினாள் மௌனா.


"சரிம்மா. நீ ஏன் டல் ஆக இருக்கிற?" என்று அவளிடம் கனிவாக வினவினான் மஹதன்.


தன் வீட்டினர் கிளம்புவதை விட, வேறெதுவோ மனைவியை வருத்துகிறது, என்பதை புரிந்து கொண்டு தான் கேட்கிறான் அவளிடம்.


"அவங்க கிளம்புறாங்கள்ல? அதான் ங்க" என்று பதிலளித்தவளை, இழுத்து அணைத்துக் கொண்டவன், "வேறெதுவோ இருக்குடா. அதைச் சொல்லு" என அவளது மனநிலையைப் பற்றிக் கேட்டான் மஹதன்.


"வேறென்ன?" என்று கணவனை நிமிர்ந்து பார்த்தவளை,"நீயே சொல்லிடு ம்மா" என்று அவள் உண்மையை உரைக்க உந்தினான் மௌனாவின் கணவன்.


"அப்பா, அம்மாவும், அகியும் என்னை மறந்துருவாங்களா மஹி?" என்று நிலைகுலைந்து போய் அவனிடம் கேட்டாள் மௌனா.


"ஏன்டா இப்படி யோசிக்கிற?" என்று அவளது நெற்றி முடியை சீராக்கிய படி கேட்டான் மஹதன்.


"இப்போ கூட அவங்க கிட்டப் பேசும் போது, அந்த பாதுகாப்பின்மை ஃபீல் ஆச்சு ங்க!" என்று விழிநீருடன் விவரித்தாள் அவனுடைய மனைவி.


"அத்தையும், மாமாவும் உன்னை மறக்கிறதுக்கு வாய்ப்பே இல்லை. அப்பறம், அகதாவோட வாழ்க்கையில், இரண்டாவது அத்தியாயத்தை, நீ தான் ஆரம்பிச்சுக் கொடுத்து இருக்கிற! அப்போ, அவங்க உன்னை எப்படி மறப்பாங்க? உனக்கு வந்த இந்த இன்செக்யூர் ஃபீல் மாதிரி, அவங்களுக்கு கில்ட்டி ஃபீல் வந்திருக்கும் தானே?" என்று கேட்டான் மஹதன்.


"ஆமாம் ங்க" என உணர்ந்து கூறினாள் மௌனா.


"அப்போ உன்னையும் சமாதானம் செய்து, அவங்களுக்கும் புரிய வைடா" என அவளுக்கு வலியுறுத்தினான்.


"ஷ்யூர்! தாங்க்ஸ் மஹி" என்றாள் கண்கள் மின்ன.


"ஆஹான்!" என்றவன், அவளது இதழைத் தன் வசமாக்கிக் கொண்டான் மஹதன்.

________________________


இங்கோ,'நான் என்ன தான் பண்றது கடவுளே? எனக்குள்ளே உருவாகிற குற்ற உணர்வுக்கு முடிவே கிடையாதா? என்னை எப்போ நிம்மதியாக வாழ விடப் போறீங்க?' என்று மானசீகமாக வேண்டிக் கதறிக் கொண்டு இருந்தாள் அகதா.


அதாவது, முதலில் தீபக் மற்றும் அவனது தாயின் நிலை கண்டு, அது தன்னால் தான் எனக் குற்ற உணர்ச்சியில் இருந்தவள், அதன் பின்னர், தீபக்கின் வார்த்தைகளைக் கேட்டு, மஹதனுடன் தன்னைச் சேர்த்து வைத்துப் பேசியதால், அவனுடைய மரியாதை போய் விட்டது என எண்ணிக் குமைந்தாள், இப்போது, மௌனாவின் பெற்றோரை அவளிடமிருந்து தான், பறித்துக் கொண்டு போவதைப் போல உணர்ந்தவள், அதையும் நினைத்து வருந்தியவள்,"சாரி மௌனா! நான் பேசாமல் ஹாஸ்டலுக்கே போயிட்றேன்" என்று இயலாமையுடன் பேசிக் கொண்டவள், அதை அன்னபூரணி மற்றும் சிவமணியிடமும் உரைத்து, அவர்களது அனுமதியைப் பெறுவதற்காக காத்திருந்தாள் அகதா.


"நீ எப்பவும் ஒரே மனநிலையில் இருக்க மாட்டியா?" என்றார் சிவமணி.


அதில், வெளுத்த முகத்துடன்,"அது வந்தும்மா…" என்று இழுத்தாள் அகதா.


"விடுங்க. அவளும், மௌனாவும் பேசிக்கட்டும்" என்று, மகளுக்குச் செல்பேசியில் அழைத்து விட்டார் அன்னபூரணி.

        

    - தொடரும் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...