முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 33

 


முக்தாவுடைய வீட்டிலிருந்து சென்றவர்களின் கார் ஒரு ஓரமாக நின்றது.


"மஹி! இனி, ரெண்டு நாளில், கிஷான் அண்ணாவோட வீட்டுக்குப் போகனும்" என்றாள் மௌனா.


அசைவ உணவுகளை உண்டு கொண்டே இருந்ததாலும், வயிறும், மனதும் நிறைந்ததால், களைப்பாய்த் தெரிந்தாள் அவள்.


அவளுக்கும் இணையாக, மஹதனும் அந்த நிலையில் தான் இருக்கிறான்.


"டயர்ட் ஆக இருக்கு ம்மா" என்று வாய் விட்டே கூறி விட்டான் அவளது கணவன்.


"எனக்கும் மஹி" என்று சினுங்கினாள் மௌனா.


"டிரைவரையே காரை ஓட்ட வச்சிருக்கலாமோ?" என்று அவளிடம் கேட்டாலும், தனது களைப்பை ஓரம் தள்ளி விட்டு, சாலை விதிகளைப் பின்பற்றி, மகிழுந்தை இயக்கி, மனைவியுடன் பத்திரமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தான் மஹதன்.


செக்யூரிட்டி காம்பவுண்ட் கேட்டைத் திறந்ததும், காரை அதற்குரிய இடத்தில் நிறுத்தி விட்டு, மனைவியைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு வந்த மகனைப் பார்த்ததும்,


"என்னாச்சு?" என்று மௌனாவைத் தாங்கிக் கொண்டார் கௌசல்யா.


"சாப்பிட்டு, சாப்பிட்டு டயர்ட் ஆகிட்டோம் மா!" என்றான் மஹதன்.


"ஆமாம் அத்தை" என அவரது மருமகளும் கூற,


"வந்து உட்காருங்க" என்று அவர்களை உள்ளே அனுமதித்து, மகன் மற்றும் மருமகளுக்காக, எலுமிச்சைப் பழச்சாற்றைக் கொண்டு வந்து கொடுத்தவர்,


இன்னும் ஒருவருடைய வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதும் அவருக்கு நினைவிருக்க,"இதுக்கப்புறம் ரெஸ்ட் எடுத்துட்டுப், பிரஸ் மீட் - டை முடிச்சுட்டு, ஹனிமூனுக்குப் போயிடுங்க" என அவர்களுக்கு வலியுறுத்தினார் கௌசல்யா.


"ஓகே ம்மா" 


அலுவலகப் பணிகள் யாவும் தனக்காக காத்திருப்பதால்,"நான் போய் வொர்க் பண்றேன் டா. அங்கே எதுவும் கன்ட்ரோலில் இருக்கான்னுப் பார்க்கனும்" என்று மனைவியிடம் கூறினான் மஹதன்.


"அப்போ நானு ங்க?" எனப் பரிதாபமாக வினவினாள் மௌனா.


"பேசாமல் கிஷானோட ஆஃபீஸூக்குப் போய் உன் வொர்க்கைப் பாரு!" 


"அம்மாவும், அத்தையும் என்னைப் பிச்சிடுவாங்க!" 


"என்னையும் தான்! எப்படியாவது கன்வின்ஸ் பண்ணுவோம்" என்றான் மஹதன்.


"ம்மா! ஆஃபீஸூக்கு…" என்றவன் ஆரம்பிக்கும் போதே,


"எங்கேயும் போகக் கூடாது. அவளுக்கும், உனக்கும் ஈக்வல் ரூல் தான். ரெண்டு பேரும் ஓடிருங்க!" என்று அவர்களை அனுப்பி வைத்தார் கௌசல்யா.


இதையே தான், மௌனாவின் தாயான அன்னபூரணியும், மகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.


அந்த உத்தரவை ஏற்றுக் கொண்ட இருவரும். தங்களுடைய அலுவலை வீட்டிற்குள்ளேயே முடித்துக் கொண்டனர்.


கிஷானுடைய வீட்டை அடைந்ததும், காரை நிறுத்தி, இருவரும் இறங்கிச் சென்றனர்.


"வாங்க மாப்பிள்ளை, வாங்க சிஸ்டர்" என்று முகமெல்லாம் புன்னகையுடன் அவர்களை வரவேற்றான் கிஷான்.


"ஹாய்" என்றவாறு மஹதனும், மௌனாவும் இல்லத்தினுள் நுழைந்தனர்.


"டைனிங் டேபிளை செட் பண்ணனும். பாத்திரங்களைத் தயாராக வைங்க" என்று பணியாளர்களுக்கு உத்தரவிட்டுக் கொண்டிருந்தார் சித்ரலேகா.


"டேய்! சத்தியமாக எங்களால் நிறைய சாப்பிட முடியாது. அதுவும் நான்வெஜ் வேற! பாத்து செய்டா" என்று நண்பனிடம் கெஞ்சினான் மஹதன்.


"ஆமாம் ண்ணா. இன்னும் விட்டால், வயிறு வெடிச்சிடும்!" என்று கதறினாள் மௌனா.


"சரி சரி. கதறாதீங்க. வெஜ் தான் சமைச்சிருக்கோம். அதுவும் லைட் ஃபுட்" என்றவன்,


"ம்மா! மஹதனும், மௌனாவும் வந்துட்டாங்க" என்று தன் அன்னையை அழைத்தான் கிஷான்.


பணியாளர்களுக்கான வேலையைக் கொடுத்து விட்டு, இவர்களை வரவேற்க வந்தவர்,


"வாங்க டா ம்மா" என அவ்விருவரையும் அழைத்து, முதலில் உட்கார வைத்தவர்,


"தண்ணீர் குடிங்க. நான்வெஜ் இல்லை. வெஜ் தான் செஞ்சிருக்கேன்" என்று கூறி, மஹதன் மற்றும் மௌனாவின் வயிற்றில் பாலை வார்த்தார் சித்ரலேகா.


"தாங்க்யூ ம்மா" என்று நன்றி கூறியவன், நண்பனை அருகில் அழைத்து,"நான் சொன்ன மெனு தான?" என்று அவனிடம் கேட்டு, உறுதிப்படுத்திக் கொண்டான் மஹதன்.


"அதே தான்டா!" என்ற கிஷான், அவர்களிருவரையும் டைனிங் டேபிளுக்கு அழைத்து வந்தான்.


அவர்களிடம் வாக்களித்தவாறே, மஹதன் சொன்ன சாப்பாடு வகையறாக்களைத் தான் சமைத்து வைத்திருந்தனர்.


அதைப் பார்த்ததும், முகத்தில் அடித்தாற் போல இல்லாமலும், சைவ உணவுகளாக இருக்கவும், திருப்தியானப் பார்வையைப் பரிமாறியவாறு உண்ணத் தொடங்கினர் மௌனாவும், மஹதனும்.


"உங்கப்பா எங்கேடா?" 


"அவர் ஆஃப்ஸூக்குப் போயாச்சு" என்றான் கிஷான்.


"அவரும், எங்கப்பாவும் கூட வேலையைப் பார்க்கப் போய்ட்டாங்க! நான் மட்டும் தான் இன்னும் கம்பெனி பக்கமே போகாமல் இருக்கேன்!" என்று முணுமுணுத்தவாறு சாப்பிட்டான் மஹதன். 


"வீட்டிலேயும் கேட்டுப் பார்த்தார். அத்தை இவரை வெளியே போகவே விடலை ண்ணா!" என்று கூறிச் சிரித்தாள் மௌனா.


அதைக் கேட்டதும் சித்ரலேகாவிற்கும் சிரிப்பு பொங்கி வந்து விட்டது.


"ஹாஹா! நானும் நம்ம ஹோட்டலுக்குப் போயிட்டு இருக்கேனே! நீங்க வந்தீங்கன்னு தான், இன்னைக்கு லீவ்" என்று ஒழுங்கு காட்டி அவனுக்கு வெறி ஏற்றினான் கிஷான்.


மௌனாவின் முகம் கூம்பி போய் விட்டது அவன் சொன்னதைக் கேட்டு.


ஏனெனில், அந்த விடுதியில் தானே, அவள் வேலை செய்கிறாள்.


அதைப் புரிந்து கொண்ட கிஷான்,"நீ கவலைப்படாதே ம்மா. உன் வேலை அங்கேயே தான் இருக்கு. ஹனிமூன் முடிச்சுட்டு வந்து ரீ - ஜாயின் செய்துக்கோ!" என்று அவளுக்கு உறுதி அளித்தான்.


"தாங்க்யூ ண்ணா" என்று நிம்மதியாக கணவனுடன் உணவுண்டு முடித்தாள் மௌனா.


"நானும் அங்கே பார்ட்னர் தான்! அப்பப்போ வருவேன்!" என்று விஷமத்துடன் கூறினான் மஹதன்.


அப்போதும், இப்போதும், எப்போதும் இந்த வாக்கியத்தை மட்டும் மறக்காமல் கூறி விடுவான் அவன்.


அப்படிச் சொல்ல மட்டும் செய்யாது, தனது மனம் கவர்ந்த மங்கையைப் பார்க்க வந்து விடுவான் அவர்களது தங்கும் விடுதிக்கு.


அவர்களுக்கு ஜீரணமாக ஏதுவான பானம் ஒன்றையும் வழங்கினர் சித்ரலேகாவும், கிஷானும்.


இப்படியாக, புகுந்த வீடு மற்றும் சொந்தங்கள் மட்டும் அல்லாமல், தங்களது நண்பர்கள் வீட்டினர் வழங்கிய, மறு வீட்டு விருந்தில் கலந்து கொண்டு, அதை வெற்றிகரமாக முடித்தனர் மஹதன் மற்றும் மௌனா.


"எங்கே ஹனிமூனுக்குப் போகலாம்னு டிஸைட் செய்திருக்கீங்க?" என்று வினவினார் கௌசல்யா.


தாங்கள் யோசித்து வைத்திருந்த நாட்டின் பெயரைச் சொல்லவும்,"நானே டிக்கெட் புக் செய்துடறேன். நீங்க பிரஸ் மீட்டுக்கு ரெடியாகுங்க" என்று கூறி, அதைச் செயல்படுத்தினார் திருமூர்த்தி.


இதைக் கிஷானிடம் சொன்ன மஹதன்,"நீயும், முகியும் கூட வந்துருங்க டா!" என்று அவனிடம் கூறினான்.


"டேய்! நாங்க உங்களை ஃபாலோவ் பண்ண மாட்டோம். டிஃப்ரன்ட் ஆக யோசிப்போம்" என்றான் கிஷான்.


"ஓஹோ! அப்போ இதுவரைக்கும் அப்படித் தான், வித்தியாசமாக யோசிச்சீங்களா பார்ட்னர்?" என்று நண்பனைக் கிண்டலடித்தான் மஹதன்.


"யெஸ்" என்று பதிலளித்தான் கிஷான்.


மஹதன் மற்றும் மௌனாவின் திருமணத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் உலகிற்குச் சொல்ல வேண்டிய நாளும் வந்தது.


ஏற்கனவே, நேரலையில் பார்த்திருந்ததால், அதிலிருந்தும் சில கேள்விகளைக் கேட்டனர் பத்திரிக்கை நிருபர்கள்.


அவற்றிற்கு எல்லாம், மிகவும் பொறுமையாகப் பதில் கூறினர் மஹதனும், மௌனாவும்.


"இவங்க உங்க ஃப்ரண்ட் கிஷானோட ஹோட்டலில் ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் ஆக வேலைப் பார்த்தவங்க தான?" என்று ஒருவர் கேட்கவும்,


"ஆமாம்" என்றான்.


மௌனாவைக் கேள்வி கேட்டால் மட்டும் பேச வேண்டும் எனக் கூறி இருந்தான் மஹதன்.


"அதுக்கு முன்னாடி, உங்க ஹோட்டலில் தான் வேலைப் பார்த்தாங்க. முதல் நாளிலேயே ஏதோ பிரச்சனை ஆகி, அங்கிருந்து ரிலீவ் ஆகிட்டாங்க. கரெக்ட் ஆ?" என்றார் மற்றொருவர்.


"கரெக்ட் தான்" என்று அவருக்குப் பதில் கூறி, மனைவியைப் பார்த்தான்.


அவளுக்கோ, இதில் முக்தாவின் பெயர் வந்து விட்டால், அவளைச் சமாதானம் செய்வது கடினம் என்பது தான் மனதினுள் நெருடிக் கொண்டிருந்தது.


"நீலகண்டன் சாரோட டாட்டர், முக்தா கூட தான பிராப்ளம் ஆச்சு?" என்று மௌனாவைக் கண்டு, அக்கேள்வியை உதிர்த்தான் அந்நிருபன்.


அவள் நினைத்தபடியே, முக்தாவின் பெயர் அடிபட்டு விட்டது. இப்போது என்னப் பதில் சொன்னால், அவளுக்கும் இழுக்கு வராமல் இருக்குமென யோசித்துப் பேச வந்தாள் மௌனா.


ஆனால், அதற்குள், "குறுக்கிடறதுக்கு மன்னிக்கவும். இது எங்களோட கல்யாணத்துக்கான அஃபிஷியல் அனவுன்ஸ்மென்ட்டுக்கானப் பிரஸ் மீட். இதில், மத்தவங்களை இன்வால்வ் பண்ண விரும்பலை. முக்தாவைப் பத்தின ஒரு அப்டேட் வரும். அதில் அவங்ககிட்டயே கேளுங்களேன்! என் வொய்ஃப்பை விட்டுடுங்க" என்று அழுத்தமாக உரைத்தான் மஹதன்.


"ஓகே சார். உங்களோட ஸ்டேட்டஸூக்குக் குறைவாக இருக்கிற பொண்ணைக் கல்யாணம் செய்துக்கக் காரணமென்ன?"


"இந்த ஸ்டேட்டஸ், பணத்தையெல்லாம் தாண்டி தான் நாங்க லவ் பண்ணிக் கல்யாணம் செய்ததால், இந்தக் கொஸ்டீன்ஸ் அநாவசியமானதுன்னு நினைக்கிறேன். சோ, எந்தப் பதிலும் எங்கிட்ட இல்லை" என்று தீர்க்கமாக கூறினான்.


"உங்க வொய்ஃப் கிட்டக் கேள்வி கேட்கலாமா?"


"யெஸ்.‌.. ஷ்யூர்" என்றான் மஹதன்.


"ஹலோ மேம்! காங்கிராட்ஸ்! உங்களோட கல்யாணம் நடந்து முடியிறதுக்குள்ளே என்னென்னப் பிரச்சனைகள் நடந்துச்சு? அதை எப்படி சால்வ் பண்ணீங்க?" என்ற கேள்வியை முன் வைத்தார் ஒரு நிருபர்.


"என்னது? நீங்களே எல்லாத்தையும் முடிவு செய்துப்பீங்களா?" என்றவள்,


கணவனின் புறம் திரும்பி,"ஏங்க அவர் சொன்னதைக் கேட்டீங்களா?" என்று சிரித்தாள் மௌனா.


"ஹாஹா! நீயே அதுக்குத் தெளிவானப் பதிலைச் சொல்லிடு ம்மா" என்று மனைவியைப் பேச விட்டு, அமைதியாகி விட்டான் மஹதன்.


"எங்க கல்யாணப் பேச்சு எடுத்ததில் இருந்து, இப்போ வரை, எந்த சண்டையும் வரவே இல்லை சார். என்னோட அப்பா, அம்மா அப்பறம் இவரோட பேரன்ட்ஸ், மட்டும் இல்லாமல், ஃப்ரண்ட்ஸ் கிட்ட இருந்து கூட, எந்த வித எதிர்ப்போ, சங்கடமோ வரலை. நாங்க எல்லாரும் என்ஜாய் பண்ணோம்" என்று மலர்ந்து விகசித்த வதனத்துடன் விவரித்தாள்.


அதிலேயே அவள் மற்றவரது உந்துதல் இன்றி, சுயமாகப் பேசுகிறாள் என்பதை உணர்ந்து கொண்ட நிருபர்கள் அடுத்தப் பேச்சை எடுத்தனர்.


"அந்தப் பிராப்ளத்தைப் பத்தி தான் பேசக் கூடாது. ஆனால், நீங்களும், முக்தாவும் ஃப்ரண்ட்ஸ் ஆக இருக்கீங்களா? ஏன்னா, அவங்க மேரேஜ் செய்துக்கப் போற கிஷான், உங்க ஹஸ்பண்டோட ஃப்ரண்ட்! அதான் கேட்டேன் மேம்!" 


"நாங்க இப்போ பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் ஆக இருக்கோம் சார். இனி, எப்பவும் அப்படியே தான் இருப்போம்!" என்று திட்டவட்டமாக கூறினாள் மௌனா‌.


இவர்களுடைய பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும், ஜோடிகளின் பதில்களைக் கேட்டு, மனம் குளிர்ந்து போயினர்.


அதுவும் முக்தாவிற்கு, மஹதன் மற்றும் மௌனாவின் விடைகள் புன்னகையைத் தருவித்தது.


இவர்களுக்கு அடுத்தபடியாகப் பேட்டிக் கொடுக்கத் தாயாராக இருந்தனர் கிஷானும், முக்தாவும்.


"வேற ஏதாவது கேள்விகள் இருக்கா?" என்று வாய் திறந்தான் மஹதன்.


அவர்களது நெற்றியடி பதில்களை எதிர் கொண்டதால்,"இல்லை சார். உங்களோட பேட்டி முடிஞ்சது" என இருவரையும் அனுப்பி விட்டனர்.


                        - தொடரும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...