முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே - 15

 


அவனது அழுத்தமான இதழ் முத்தத்தால் திக்கித் திணறிப் போனாள் பூவிழி. 


அவனிடமிருந்து தனது இதழ்களை மீட்டுக் கொள்வதற்காக அவனது மார்பில் கையை வைத்து தன்னால் முடிந்த அளவிற்குத் தள்ளி விட முயன்றாள். 


ஆனால் அவனது இரும்பைப் போன்ற ஸ்திரமான உடல் வலுவிற்கு முன்னால் அவளது போராட்டம் ஒன்றுமில்லாமல் போயிற்று! 


அவளது இதழை நன்றாக வலிக்கச் செய்து விட்டுத் தான் அவளைத் தன்னிடமிருந்து விடுவித்தான் திருவாதிரன். 


தனது வலித்த இதழை வலது விரலால் நீவி விட்டுக் கொண்டவளுக்குக் கண்கள் கலங்கிப் போய் விட்டிருந்தது! 


“எதுக்கு இப்படி பண்றீங்க? எனக்குத் தான் இந்தக் கல்யாணமே பிடிக்கலைன்னுச் சொன்னேனே? அப்பறமும் எங்கிட்ட இப்படி உரிமை எடுத்துக்கிட்டால் எப்படி?”என்று அவனிடம் ஆற்றாமையுடன் வினா எழுப்பினாள் பூவிழி. 


அதில் அலட்சியமான முக பாவனையை வரவழைத்துக் கொண்டு,”உனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலைன்னுச் சொன்னதால் தான் நான் உங்கிட்டே இருந்து தள்ளி இருக்கனும்னு நினைச்சேன்! ஆனால் உன்னோட வார்த்தைகள் தான் என்னை இப்படி நடந்துக்கத் தூண்டி விட்டுச்சு! அப்படின்னா, என்னோட இந்தச் செயலுக்குக் காரணம் உன்னோட வார்த்தைகள் தான்!”என்று தன்னுடைய செயலுக்கு அவளைக் குற்றம் சாட்டினான் திருவாதிரன். 


அதில் கடுப்படைந்து,”நான் வார்த்தையை விட்டால் நீங்களும் மறு வார்த்தைப் பேசி என் கூட வாய்ச் சண்டைப் போடுங்க! இப்படியெல்லாம் செய்யக் கூடாது!”என்று அவனுக்கு எச்சரிக்கை விடுத்தவளை சுவாரசியமாகப் பார்த்து விட்டு, 


“அப்படியா? ஆனால் நீ பேசுற வார்த்தைகளைப் பொறுத்து தான் நான் உன் கூட வாய்ச் சண்டைப் போட்றதா, இல்லை…”என்றவன் மேலே பேசுவதற்குள்ளாகவே தனது இரண்டு காதுகளையும் கரங்களால் இறுக்கமாக மூடிக் கொண்டாள் பூவிழி. 


அதைக் கண்டு அவனது இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது.


“சரி, சரி. நான் எதுவும் விஷமமாகப் பேச மாட்டேன்! உன் காதிலிருந்து கையை எடு”என்று அவளுக்கு வாக்களித்தான் திருவாதிரன். 


அதைக் கேட்ட பிறகு தான் தனது காதுகளில் இருந்து கரங்களை விலக்கிக் கொண்டவளிடம், 


“ஏன்டி! அங்கே எல்லார் முன்னாடியும் உன்னை நான் எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு அவ்வளவு காரணத்தை அடுக்கிட்டு வந்திருக்கேன்! அப்படி இருந்தும் நீ இப்படி என்னைப் பேசுறன்னா உனக்கு எவ்வளவு தகிரியம் இருக்கோனும்?”என்று அவளை முறைக்க, 


“ப்ச்! அதுக்காக எங்க ஆத்தா செத்து…”என்றவளை இடைமறித்து, 


“உங்க ஆத்தா செத்துக் கொஞ்சம் மாசம் தான் ஆகுது! அதுக்குள்ளே என்னைக் கட்டாயக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க! அதை தானே சொல்லப் போற?”என்று அவளிடம் வினவினான் திருவாதிரன். 


“ஆமாம்!”என்றிருந்தாள் பூவிழி. 


“அந்த நெனப்பு உந்தங்கச்சிக்கு இல்லையே! நல்லா முகத்தில் பூரிப்போடத் தான் எங்கண்ணேங் கையால் கழுத்தில் தாலியை வாங்கிக்கிட்டாங்களே! அதுக்கு என்னச் சொல்ற?”என்று கேட்டு அவளை மடக்க, 


“அவளோட சூழ்நிலையும், என்னோட சூழ்நிலையும் ஒன்னு இல்லங்க!”என்றவளைக் கூர்மையாகப் பார்த்து, 


“அப்படியும் இருக்கலாம்! ஆனால் நீ இவ்வளவு நேரமாக ஒரு விஷயத்தைக் கவனிக்கலை! எப்பவுமே நீ என்னை ஐயான்னுத் தான் கூப்பிட்டுப் பேசுவ! ஆனால் நமக்குக் கல்யாணம் நடந்ததுக்கு அப்பறம் இருந்து நீ என்னை வாங்க, போங்கன்னு மட்டும் தான் பேசுற! அது உனக்கு என் மேல் இருக்கிற உரிமையைக் காட்டுது! அதே உரிமையில் தான், நானும் உனக்கு முத்தம் கொடுத்தேன்!”என்று அவளுக்கு விளக்கம் அளித்தான் திருவாதிரன். 


அதைக் கேட்டு அவளது விழிகள் பெரிதாக விரிந்து அதிர்வை வெளிப்படுத்தி விட்டிருந்தது!


இவன் கூறுவதும் உண்மை தானே? 


தான் இவ்வளவு நேரமாக, இவனை,'ஐயா!'என்றோ, மரியாதை நிமித்தமாக தலையைக் குனிந்து கொண்டோ பேசாமல் இவனுக்கு நேருக்கு, நேராக நின்று வாதம் செய்து கொண்டிருக்கிறோமே என்று திடுக்கிட்டுப் போய்க் கணவனைப் பார்த்தாள் பூவிழி. 


அதையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன். 


ஏனெனில் அவனுக்குத் தனது மனைவியின் இந்த அவதாரம் மிகவும் பிடித்திருந்தது. 


தன்னிடம் எதுவும் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டு, முகத்தைத் திருப்பிக் கொள்ளாமல் இப்படி வாதம் செய்வதை வெகுவாக ரசித்தவனோ, 


“உன்னோட இந்த மாற்றம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!”என்று அவளிடம் ரசனையுடன் மொழிந்தான் திருவாதிரன். 


அதைக் கேட்டு அவளுக்கு இன்னும் திகைப்பாக இருந்தது! 


அதில் அவள் மீது பித்தம் கொண்டு அவளது இதழ்களைத் தன் விரல்களால் வருடியவனோ அவள் எதிர்பாராத விதமாக அதில் மீண்டும் ஒரு இதழ் முத்திரையைப் பதித்து விட்டிருந்தான். 


“ப்ச்! விடுங்க ஐயா!”என அவனை இப்போது மிகவும் பலமாகத் தன்னிடமிருந்து தள்ளி நிறுத்தினாள் பூவிழி. 


“ஏய்! ஐயான்னுக் கூப்பிடாதேடி! எரிச்சல் கெளம்புது!”என்று மனைவியை எச்சரித்தான் திருவாதிரன். 


“நீங்க இப்படி செஞ்சா நான் அப்படித் தான் கூப்பிடுவேனுங்க”எனத் தீர்க்கமாக உரைக்கவும், 


“சரி. நீ உடுப்பை மாத்திட்டுச் சாப்பிடு. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்!”என்று அவளிடம் சொல்லி விட்டுப் போகவும், 


இதே நேரத்தில், தங்களது அறையில் தனக்குக் கால் அழுத்தி விட்டுக் கொண்டிருந்த கணவனைக் கர்வம் பொங்கப் பார்த்தாள் செந்தாழை. 


“ரொம்ப வலிக்குதாம்மா?”எனக் கேட்ட அறிவொளியிடம், 


“ஆமாங்க! உங்கப் புள்ளை வேற வயித்துல உருண்டுக்கிட்டு என்னை ஓய்வு எடுக்கவே விட மாட்டேங்கிறியான்!”என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டுச் சொல்ல, 


“அச்சோ!”என்றவனோ உடனே எழுந்து மனைவியின் வயிற்றில் இருந்த சிசுவிடம், 


“தங்கப் பையா! உங்கம்மைய தொல்லை செய்யாமல் சமர்த்தாக இருங்க! நீங்க வெளியே வந்ததுக்கு அப்பறமாக இந்த வீடு முச்சூடும் ஓடுங்க!”என்று கொஞ்சினான் அறிவொளி. 


உடனே பெருமூச்சு விட்டுக் கொண்டு,”க்கும்! இதெல்லாம் நல்லாத்தேன் இருக்கு! ஆனால் இன்னும் நாம புள்ளையோட வளர்ச்சி எப்படி இருக்குன்னு விசாரிக்கவே இல்லையேங்க? டவுனு ஆஸ்பத்திரிக்குப் போனால் நமக்குப் புள்ளையோட வளர்ச்சியைக் கண்ணிலேயே காட்டுவாகளாமே! அதான் நமக்குக் கல்யாணம் ஆகிடுச்சே! இதுக்கும் மேலேயும் உங்கத் தம்பிக்கிட்டே நம்மச் சொந்த விஷயத்துக்கு எல்லாம் அனுமதி வாங்கோனுமா என்ன?”எனச் சலித்துக் கொள்வதைப் போன்று அவனது மனதில் விஷயத்துடன் சேர்த்து விஷத்தை இறக்கினாள் செந்தாழை. 


அது உடனே வேலை செய்து விட்டதைப் போல்,”ஆமால்ல? இனிமேல் நமக்கு இடையில் யாரும் வர முடியாது! நமக்கு இன்னைக்குத் தானே கல்யாணம் முடிஞ்சிருக்கு? அதனால் ஒரு வாரம் போனதும் டவுனு ஆஸ்பத்திரிக்குப் போய்ப் புள்ளையோட வளர்ச்சியைப் பார்த்துடுவோம்! நீ கவலைப்படாதே செந்தா!”என்று அவளுக்கு வாக்குறுதி அளித்து விடவும், 


அதில் அவனது இதழில் தனது உதட்டை ஒற்றி எடுக்கவும், அதில் கிறங்கிப் போய்,”ராத்திரி நமக்கு முதலிரவாம் செந்தா?”எனக் கூறிக் கண்டித்தான் அறிவொளி. 


அதைக் கேட்டுத் தனது முகம் சிவக்க,”கிண்டல் பண்ணாதீய மாமா!”என்று சினுங்க,


“ஆனால் இன்னைக்கு வேண்டாம் புள்ள! ஆஸ்பத்திரிக்குப் போய் நல்லா இதைப் பத்திக் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டு அதுக்கப்புறமாகப் பார்த்துக்கலாம்!”என்றவனைக் கட்டிக் கொண்டு அவனது கன்னத்தில் முத்தமிடத் தொடங்கி விட்டாள் செந்தாழை. 


இதற்கிடையில் தனது அறையிலிருந்து வெளியேறிக் கீழே வந்த திருவாதிரனைப் பார்த்து, 


“என்னடா அதுக்குள்ளே வெளியே கிளம்பிட்டே? இன்னைக்கு ராத்திரி சடங்குக்கு எல்லா ஏற்பாட்டையும் செய்யலாம் தானே? இதில் உன் பொண்டாட்டிக்கும் சம்மதம் தானே?”என்றிருந்தார் ராஜகுமாரி. 


அதைக் கேட்டதுமே அவரைச் சில நொடிகள் அழுத்தமாகப் ஆராய்ந்து பார்த்து விட்டு,”தாராளமாக செய்யுங்கம்மா! என் பொண்டாட்டி ஏதாவது சொன்னால் அதை நான் பார்த்துக்கிறேன்! அதோட நான் வெளியே போயிட்டுக் கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்துடுவேன்!”என்று அவரிடம் கூறி விட்டுத் தனது ஜீப்பில் ஏறிக் கிளம்பி விட்டிருந்தான். 


“நான் ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன்னு வேண்டாம்னுச் சொல்லிட்டுப் போறானான்னுப் பாருங்க!”என வழக்கம் போல தனது கணவரிடம் முறையிட்டார் ராஜகுமாரி. 


“நீ இவனையே இப்படி சொல்றியே! மூத்தவன் இந்நேரத்துக்கே ஆரம்பிச்சு இருப்பான்! அவனை என்னச் சொல்லித் திட்டப் போற?”என்று சலித்துக் கொண்டார் நஞ்சுண்டன். 


அதைக் கேட்டதுமே,”கருமம்! கருமம்! எந்த நேரத்தில் இவனுங்க ரெண்டு பேரும் எவ்வயித்துல வந்து பொறந்தானுங்களோ தெரியலை!”என்று தலையில் அடித்துக் கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கான சாந்தி முகூர்த்த ஏற்பாடுகளை வீட்டு வேலைக்காரர்களிடம் ஒப்படைத்து விட்டுத் தங்களது அறைக்கு வந்தனர் இருவரும். 


“என்ன தான் உன் திட்டம்மா? எங்கிட்ட சொல்லேன்”என்றக் கணவரிடம்,


“நீங்க ஒரு விஷயத்தைக் கவனிச்சீங்களா? அந்தச் செந்தாழை இருக்காளே? திரு அந்தப் பூவிழியைத் தர, தரன்னு இழுத்துட்டுப் போறப்போ அவ தன்னோட அக்காவைப் பத்திக் கொஞ்சம் கூட யோசிக்காமல் எனக்கென்னன்னுச் சோத்தை முழுங்கிட்டு இருந்தாளே?”என்றிருந்தார் ராஜகுமாரி. 


அதைக் கேட்டதும் தனக்கும் அது ஞாபகம் வந்து விட்டதை அவரிடம் தெரிவிக்கும் வகையில்,”அட ஆமாம்மா! அந்தப் பொண்ணு இப்போதெல்லாம் அதோட அக்காவை மதிக்கிறதே இல்ல! தன்னோட சொகுசைத் தான் பார்க்குது! அப்படின்னா அது நம்ம வீட்டுக்குப் பொருந்திப் போகப் பார்க்குது! அறிவு வேற அவளைக் கையில் வைச்சுத் தாங்குறான்! அதனால் தான் அந்தப் பூவிழி இங்கேயிருந்து போகனும்னு நினைக்கிறாள் போல”என அவரிடம் உரைத்து இருந்தார் நஞ்சுண்டன்.


“அவளை வச்சுத் தான் நாமக் காயை நகத்தனும்! ஏன்னா, நாமளே இதில் நேரடியாக இறங்கினால் சின்னவனுக்கு நம்ம மேலே சந்தேகம் வந்துடும். அவன் ஏற்கனவே நம்மளைத் தான் கண்கொத்திப் பாம்பாக கண்காணிச்சுட்டு இருக்கான்! அதனால் நம்ம மேலே எந்தப் பழியும் வந்துடாமல் அந்தச் செந்தாழையை வச்சுத் தான் நமக்குத் தேவையானதை நடத்திக்கோனும்! அதே மாதிரி அந்தப் பூவிழிக்கு இங்கே இருக்கிறதுக்கு இஷ்டமே இல்லைன்னு எல்லார் முன்னாடியும் தெளிவாகச் சொல்லிட்டாள்! அதுவே நமக்குக் கிடைச்சு இருக்கிறப் பெரியத் துருப்புச்சீட்டு அதை வச்சே அவளுக்கும் திருவுக்கும் இடையில் சண்டையை மூட்டி விடுவோம்! அந்த நேரத்திலேயே அவ மேலே செந்தாழைக்குள்ளே வன்மம் வளர்றதுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செஞ்சிட்டுப் பிரச்சினைன்னு வந்தால் அவளைக் கையைக் காமிச்சிட்டு நாம ஒதுங்கிப்போம்!”என்ற தனது திட்டத்தைக் கணவருக்கு விளக்கி முடிக்கவும், 


அதைக் கேட்டவுடன் தனது மனைவிக்கு இருக்கும் அறிவை எண்ணிப் பெருமிதம் அடைந்து,”இதெல்லாம் எனக்கு ஏன் தோன மாட்டேங்குது குமாரி?”என்று பரிதாபமாக வினவினார் நஞ்சுண்டன். 


“இப்போ தோனலைன்னா என்னங்க? இனிமேல் எங்கிட்ட இருந்து கத்துக்கிடுங்க!”என்றுரைத்து விட்டார் ராஜகுமாரி. 


இரவு ஆனதும் சாந்தி முகூர்த்தத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்திருந்த நேரத்தில் சரியாக வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான் திருவாதிரன். 


- தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...