வேலையாளின் உச்சபட்ச அலறல் சப்தத்தைக் கேட்டவுடனேயே கூடத்திற்கு வந்திருந்த திருவாதிரனோ அங்குக் கண்ட காட்சியில் உறைந்து போய் நின்று விட்டிருந்தான்.
ஏனெனில் அங்கே நடுக் கூடத்தில் முத்துமணியின் உடல் கிடத்தப்பட்டு இருந்தது.
அதன் இருபுறமும் அவரது இரண்டு மகள்களும் உட்கார்ந்து தங்களது தாயின் உடலைக் கட்டிக் கொண்டு அழுது புலம்பி அரற்றிக் கொண்டு இருந்தார்கள்.
“ஆத்தா! நீங்க இப்படி எங்களை விட்டுப் போவீங்கன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலைம்மா! இனிமேல் நாங்க என்னம்மா பண்ணப் போறோம்? எழுந்திருங்கம்மா!”என்று தன் அன்னையின் கையைப் பிடித்துக் கொண்டுக் கதறினாள் பூவிழி.
ஆனால், முத்துமணியின் மற்றைய புறத்தில் அவளுக்குத் தன்னால் தான் தன்னுடைய தாய்க்கு இந்த நிலை உருவாகி விட்டிருந்தது என்றக் குற்ற உணர்வாலேயே எதுவும் பேசாமல் தாயின் உடலையே பித்துப் பிடித்தவளைப் போல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் செந்தாழை.
அவர்களுக்குச் சற்றுத் தள்ளி நின்று கொண்டுத் தாங்களும் கவலை படிந்த முகத்துடன் காணப்பட்டனர் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.
இந்த எதிர்பாராத நிகழ்வைக் கண்டதும் என்னச் செய்வதென்று தெரியவில்லை திருவாதிரனுக்கு!
ஆனாலும் விஷயத்தை முழுமையாக அறிந்து கொள்ள நினைத்து,”எப்படி நடந்துச்சு?”எனப் பொதுவாக வினவவும்,
அதற்கு,”அத்தை தான் எப்பவும் காலையில் சீக்கிரமாக எழுந்துடுவாராம்! ஆனால் இன்னைக்குக் காலையில் இவங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரமாக எழுப்பிப் பார்த்துருக்காக! ஆனால் எழுந்திரிக்கவே இல்லை! உடனே பதறிப் போய் அவரோட மூச்சைச் சோதிச்சுப் பார்த்துருக்காக! அது எப்பவோ அடங்கிப் போயிருந்து இருக்கு! அதே மாதிரி இதயமும் துடிப்பை நிறுத்தி இருந்துச்சு! உடம்பு ரொம்ப குளிர்ந்து போயிருந்துச்சாம்! அதுக்கு அப்பறம் எங்க கிட்ட விஷயத்தைச் சொன்னாக. நான் தான் இங்கே தூக்கிட்டு வந்து கிடத்தச் சொன்னேன்!”என்று தானே முன் வந்து தம்பிக்கு விளக்கம் கொடுத்தான் அறிவொளி.
அதைக் கேட்டு,”அதுக்காக இப்படியே வச்சு இருப்பீங்களா? மருத்துவச்சியை வர வைச்சு நாடி பிடிச்சுப் பார்க்கச் சொல்லுங்க! அவுகப் பரிசோதிச்சுப் பார்க்கட்டும்! நாமளே எல்லாத்தையும் முடிவு செஞ்சிடக் கூடாது!”என்றதுமே,
அங்கேயிருந்த வேலையாட்கள் நேரடியாகப் போய் அந்த ஊரின் கை தேர்ந்த மருத்துவச்சியை அழைத்து வந்து விடவும்,
அவரும் முத்துமணியின் உடலைப் பரிசோதித்துப் பார்க்கத் தொடங்கினார்.
அவரது வாயிலிருந்து வெளியே வரப் போகும் வார்த்தைக்காகத் தங்களது கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டுக் காத்திருந்தார்கள் பூவிழி மற்றும் செந்தாழை.
அதே சமயம் முத்துமணியைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு,”எப்பவோ உசுருப் போயிருச்சுங்கய்யா”என்று வருத்தத்துடன் மொழிந்து விட்டுத் தனக்கான கூலியை வாங்கிக் கொண்டுச் சென்று விட்டார் அந்த மருத்துவச்சி.
அதைக் கேட்டதும் பூவிழியும், செந்தாழையும் அழுகையில் வெடித்து விட்டனர்.
முத்துமணியின் இறப்பு ராஜகுமாரி மற்றும் நஞ்சுண்டனையும் கூட அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.
திருவாதிரன்,”இவங்களோட இறுதிச் சடங்குக்கான வேலையைப் பாருங்க!”என்றுரைத்து விடவும்,
அதற்கான வேலைகளில் இறங்கி விட்டார்கள் அந்த வீட்டின் வேலையாட்கள்.
அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு முத்துமணியின் உடலைக் கவனமாக கையாண்டு அனைவரும் வந்து பார்த்துச் செல்லும் வகையில் அவரது உடலைத் தயார் செய்து விட்டிருந்தனர்.
உடனே செந்தாழைக்கு அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு அவளது கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டான் அறிவொளி.
ஆனால் தாயின் உடலில் இருந்து தனது பார்வையை அகற்றாமல் அவருக்கு அருகிலேயே அமர்ந்து விட்டிருந்தாள் பூவிழி.
அதேபோல் அவரது இறப்புச் செய்தியை ஊரில் உள்ள அனைவருக்கும் தாக்கல் சொல்லப்பட்டு விடவும், அதற்குப் பிறகு ஒவ்வொருவராகத் துக்கம் விசாரிக்க வரத் தொடங்கினார்கள்.
ஆனால் வந்தவர்கள் சும்மா இருக்காமல் அறிவொளியும், செந்தாழையும் நெருக்கமாக அமர்ந்திருப்பதைக் கண்டுத் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்ட பின்னர் தான் முத்துமணியின் இறப்பைப் பற்றியே விசாரித்து விட்டுச் சென்றார்கள்.
அதில் கடுப்படைந்து போன ராஜகுமாரியோ,”இவ்வளவு பெரிய மனுஷியோட இறந்து போன உடம்பு நடுக் கூடத்தில் இருக்கு! இதைப் பத்திப் பேசாமல் இதுங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்குதுங்கன்னுப் பேசிட்டுப் போறாளுகப் பாருங்க! வெளங்காதவளுக!”என்று தன் கணவரிடம் குறைபட்டுக் கொண்டார்.
“உஷ்! அவங்க என்னத்தையோ பேசிட்டுப் போறாங்க! நீ இப்போதைக்கு எதுவும் பேசாமல் அமைதியாக இரும்மா! அப்பறம் நம்மளைத் தான் சின்னவன் திட்டுவான்!”என்று மனைவியை அடக்கி வைத்தார் நஞ்சுண்டன்.
“ஏன்த்தா உங்களுக்கு இவ்வளவு அவசரம்? எங்க ரெண்டு பேரையும் இப்படி நட்டாத்துல விட்டுட்டுப் போய்ச் சேர்ந்துட்டீயளே! நீங்க இல்லாமல் எங்களுக்கு நாதி ஏது?”என்று கண்ணீர் வடித்தப் பூவிழியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தனது இதயத்தை வாளால் அறுப்பதைப் போன்றதொரு வலியைக் கொடுத்ததை உணர்ந்தான் திருவாதிரன்.
“ஆமாம்த்தா! இனிமேல் எங்களுக்கு யாரு இருக்கா?”என்று தானும் தன் பங்கிற்கு அடங்காத அழுகையுடன் புலம்பினாள் செந்தாழை.
“ஏன்ம்மா இப்படி சொல்றீங்க? இனிமேல் நாங்க எல்லாரும் உங்க கூட இருப்போம்!”என்று அவளது கரத்தை ஆதூரமாகப் பிடித்துக் கொண்டு அவளுக்குத் தைரியம் அளிக்க முயன்றான் அறிவொளி.
“இவன் ஒருத்தன்!”என்று அவனை எரித்து விடும் பார்வைப் பார்த்து விட்டு,
“இந்த முத்துமணியோட இறுதிச் சடங்கு முடிஞ்சதுமே செந்தாழையை மட்டும் நம்ம வீட்டில் இருக்க வச்சிட்டு அந்தப் பூவிழியை வீட்டிலிருந்து தொரத்தி விட்ரலாம்ங்க! அவளையும் வச்சிக் காப்பாத்தனும்னு நமக்கு என்னத் தலையெழுத்தா? இல்லைன்னா, நம்ம வேலைக்காரங்க யாருக்காவது கட்டிக் கொடுத்து வீட்டை விட்டு வெளியேத்தி விட்ருவோம்!”என்று யோசனை கூற,
“அதுவும் சரி தான். இதை இப்படியே ஞாபகத்தில் வச்சுரு. கூட்டம் எல்லாம் போய் இறந்த உடலைச் சிதையில் ஏத்திட்டு வந்ததுக்கு அப்பறம் இந்தப் பேச்சை மெதுவாகச் சின்னவங் காதுல போட்டு விடுவோம்!”என்று தானும் அதற்கு ஒப்புக் கொண்டார் நஞ்சுண்டன்.
ஆனால் தன் கண்ணுக்கு முன்னால் நடப்பதை எல்லாம் கனவாக எண்ணிக் கொண்டு எப்போது இந்தக் கனவில் இருந்து விழித்து எழுவோம் என்பதைப் போலான நிலையில் இருந்தப் பூவிழிக்கோ அன்று காலையில் நடந்தவை அனைத்தும் இன்னும் நினைவில் இருந்தது.
அதிகாலையிலேயே கண் விழித்து விட்டவளோ, முதல் வேலையாகத் தனது அன்னையின் அருகில் சென்று அவரை உசுப்பினாள்.
அவரோ அதில் எழுந்து கொள்ளாமல் இருக்க, அவரது குளிர்ந்த உடல் அவளைப் பயத்திற்கு உள்ளாக்கியது.
தனது தலையைத் திருப்பித் தங்கையைப் பார்த்தாள் பூவிழி.
அவளோ தன்னை மறந்து உறக்கத்தில் ஆழந்து இருந்தாள்.
அதனால் அவளை எழுப்பி விஷயத்தை உரைத்து அவளையும் பயமுறுத்த மனமில்லாமல் தன்னால் முடிந்த அளவு அன்னையின் உறக்கத்தைக் கலைக்க முயற்சித்தாள் பூவிழி.
ஆனால் அவளது முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை.
எனவே முத்துமணியின் இதயத் துடிப்பை ஆராய்ந்தாள். அதுவும் அவளை ஏமாற்றமடையச் செய்து விடவும், உடனே தங்கையை எழுப்பி விஷயத்தைக் கூறி விட்டாள்.
அதைக் கேட்டதும்,”என்னக்கா சொல்ற?”என்று அவளும் பதறிப் போய்த் தாயை எழுப்பும் முயற்சியில் இறங்க, அதுவும் கைக் கொடுக்கவில்லை.
உடனே வீடே அதிரும் வகையில் கத்தி அழுகத் தொடங்கினார்கள் பூவிழியும், செந்தாழையும்.
அதில், வேலையாட்கள் அனைவரும் திடுக்கிட்டு அவர்களது அறைக்குச் சென்று விஷயத்தை அறிந்து கொண்டு அவரது உடலைத் தூக்கிக் கொண்டு வந்து கூடத்தில் கிடத்தி விட்டு,”ஐயா!”என்று சத்தமிட்டனர்.
அதில் தங்களது உறக்கம் கலைந்து முதலில் அங்கே வந்து சேர்ந்து விட்டிருந்தார்கள் ராஜகுமாரி, நஞ்சுண்டன் மற்றும் அறிவொளி.
அதற்குப் பிறகு தான் அந்தக் குரலைக் கேட்டு வேகமாக எழுந்து கூடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான் திருவாதிரன்.
அங்கே தங்களது தாயின் உடலைப் பார்த்து அழுகையில் கரைந்து கொண்டிருந்த பூவிழி மற்றும் செந்தாழையிடம்,“என்ன நடந்துச்சு?”என விவரத்தைக் கேட்கவும்,
அதற்கு,”ஆத்தா தான் எப்பவும் காலையில் எங்களுக்கு முன்னாடியே எழுந்துக்குவாங்க! ஆனால் இன்னைக்கு நான் எழுந்து இவங்களை உசுப்பிப் பார்த்தேன். எழும்பவே இல்லை! அப்பறம் இதயத் துடிப்பைச் சோதிச்சுப் பார்த்தேன்! அது துடிக்கலை! ரொம்ப பதட்டமாகி செந்தாவை எழுப்பி விஷயத்தைச் சொன்னேன்! அவளும் சோதிச்சுப் பார்த்துட்டு அதையே தான் சொன்னா! அதுக்கப்புறம் தான் ஆத்தா எங்களை ஒரேயடியாக விட்டுட்டுப் போயிட்டாங்கன்னுப் புரிஞ்சது!”என அவனிடம் அழுகையுடன் விஷயத்தைச் சொல்லி முடித்தாள் பூவிழி.
அதைக் கேட்டு முடித்ததும்,”அதுக்காக நீங்களே எல்லாத்தையும் முடிவு செஞ்சிக்குவீங்களா? எதுக்கும் மருத்துவச்சியை வரவழைச்சு நாடி பிடிச்சுப் பார்ப்போம்”என்று தாமதிக்காமல் மருத்துவச்சியை ஆளனுப்பி வரவழைத்து முத்துமணியைப் பரிசோதிக்கச் செய்தான் திருவாதிரன்.
சிறிது நேரத்திலேயே அங்கு வந்து முத்துமணியின் உடலைப் பரிசோதித்து விட்டு,”எப்பவோ உசுருப் போயிடுச்சுங்க ஐயா!”என்று வருத்தமாக மொழிந்து விட்டுச் சென்றார் மருத்துவச்சி.
அதைக் கேட்டதும் பூவிழியும், செந்தாழையும் அழுகையில் வெடிக்கத் தொடங்கி விட்டனர்.
முத்துமணியின் இறப்பு ராஜகுமாரி மற்றும் நஞ்சுண்டனையும் கூட அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.
திருவாதிரன்,”இவங்களோட இறுதிச் சடங்குக்கான வேலையைப் பாருங்க!”என்றுரைத்து விடவும்,
அதற்கான வேலைகளில் இறங்கி விட்டார்கள் அந்த வீட்டின் வேலையாட்கள்.
அவர்கள் துரிதமாகச் செயல்பட்டு முத்துமணியின் உடலைக் கவனமாக கையாண்டு அனைவரும் வந்து பார்த்துச் செல்லும் வகையில் அவரது உடலைத் தயார் செய்து விட்டிருந்தனர்.
செந்தாழைக்கு ஆதரவாக அவளது அருகில் உட்கார்ந்து கொண்டான் அறிவொளி.
“ஏன்த்தா உங்களுக்கு இவ்வளவு அவசரம்? எங்க ரெண்டு பேரையும் இப்படி நட்டாத்துல விட்டுட்டுப் போய்ச் சேர்ந்துட்டீயளே! நீங்க இல்லாமல் எங்களுக்கு நாதி ஏது?”என்று அழுகையில் வெடித்தப் பூவிழியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தனது இதயத்தை வாளால் அறுப்பதைப் போன்றதொரு வலியைக் கொடுத்ததை உணர்ந்தான் திருவாதிரன்.
“ஆமாம்த்தா! இனிமேல் எங்களுக்கு யாரு இருக்கா?”என்று தானும் தன் பங்கிற்கு அடங்காத அழுகையுடன் புலம்பினாள் செந்தாழை.
“ஏன்ம்மா இப்படி சொல்றீங்க? இனிமேல் நாங்க எல்லாரும் உங்க கூட இருப்போம்!”என்று அவளது கரத்தை ஆதூரமாகப் பிடித்துக் கொண்டு அவளுக்குத் தைரியம் அளிக்க முயன்றான் அறிவொளி.
அதேபோல் முத்துமணியின் இறப்புச் செய்தியை ஊரில் உள்ள அனைவருக்கும் தாக்கல் சொல்லப்பட்டு விடவும், அதற்குப் பிறகு ஒவ்வொருவராகத் துக்கம் விசாரிக்க வரத் தொடங்கினார்கள்.
ஆனால் வந்தவர்கள் வாயை வைத்துக் கொண்டுச் சும்மா இருக்காமல் அறிவொளியும், செந்தாழையும் நெருக்கமாக அமர்ந்திருப்பதைக் கண்டுத் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்ட பின்னர் தான் முத்துமணியின் இறப்பைப் பற்றியே விசாரித்து விட்டுச் சென்றார்கள்.
அதில் கடுப்படைந்து போன ராஜகுமாரியோ,”இவ்வளவு பெரிய மனுஷியோட இறந்து போன உடம்பு நடுக் கூடத்தில் இருக்கு! இதைப் பத்திப் பேசாமல் இதுங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்குதுங்கன்னுப் பேசிட்டுப் போறாளுகப் பாருங்க! வெளங்காதவளுக!”என்று தன் கணவரிடம் குறைபட்டுக் கொண்டார்.
“உஷ்! அவங்க என்னத்தையோ பேசிட்டுப் போறாங்க! நீ இப்போதைக்கு எதுவும் பேசாமல் அமைதியாக இரும்மா! அப்பறம் நம்மளைத் தான் சின்னவன் திட்டுவான்!”என்று மனைவியை அடக்கி வைத்தார் நஞ்சுண்டன்.
ஆனால் தன் கண்ணுக்கு முன்னால் நடப்பதை எல்லாம் கனவாக எண்ணிக் கொண்டு எப்போது இந்தக் கனவில் இருந்து விழித்து எழுவோம் என்பதைப் போலான நிலையில் இருந்தப் பூவிழிக்கோ அன்று காலையில் நடந்தவை அனைத்தும் இன்னும் நினைவில் இருந்தது.
அதிகாலையிலேயே கண் விழித்து விட்டவளோ, முதல் வேலையாகத் தனது அன்னையின் அருகில் சென்று அவரை உசுப்பினாள்.
அவரோ அதில் எழுந்து கொள்ளாமல் இருக்க, அவரது குளிர்ந்த உடல் அவளைப் பயத்திற்கு உள்ளாக்கியது.
தனது தலையைத் திருப்பித் தங்கையைப் பார்த்தாள் பூவிழி.
அவளோ தன்னை மறந்து உறக்கத்தில் ஆழந்து இருந்தாள்.
அதனால் அவளை எழுப்பி விஷயத்தை உரைத்து அவளையும் பயமுறுத்த மனமில்லாமல் தன்னால் முடிந்த அளவு அன்னையின் உறக்கத்தைக் கலைக்க முயற்சித்தாள் பூவிழி.
ஆனால் அவளது முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை.
எனவே முத்துமணியின் இதயத் துடிப்பை ஆராய்ந்தாள். அதுவும் அவளை ஏமாற்றமடையச் செய்து விடவும், உடனே தங்கையை எழுப்பி விஷயத்தைக் கூறி விட்டாள்.
அதைக் கேட்டதும்,”என்னக்கா சொல்ற?”என்று அவளும் பதறிப் போய்த் தாயை எழுப்பும் முயற்சியில் இறங்க, அதுவும் கைக் கொடுக்கவில்லை.
உடனே வீடே அதிரும் வகையில் கத்தி அழுகத் தொடங்கினார்கள் பூவிழியும், செந்தாழையும்.
அதில், வேலையாட்கள் அனைவரும் திடுக்கிட்டு அவர்களது அறைக்குச் சென்று விஷயத்தை அறிந்து கொண்டு அவரது உடலைத் தூக்கிக் கொண்டு வந்து கூடத்தில் கிடத்தி விட்டு,”ஐயா!”என்று சத்தமிட்டனர்.
அதில் தங்களது உறக்கம் கலைந்து முதலில் அங்கே வந்து சேர்ந்து விட்டிருந்தார்கள் ராஜகுமாரி, நஞ்சுண்டன் மற்றும் அறிவொளி.
அதற்குப் பிறகு தான் அந்தக் குரலைக் கேட்டு வேகமாக எழுந்து கூடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான் திருவாதிரன்.
அதற்கடுத்து நடந்தவைகள் தான் மேற்சொன்னவை அனைத்துமே!
அவனுக்குத் தன்னுடைய அன்னையின் கன்னத்தையும், கை, கால்களையும் உலுக்கி எடுத்துக் கொண்டே கதறிக் கொண்டிருந்த பூவிழியின் அழுகை மிகவும் வேதனையைக் கொடுத்தது.
செந்தாழைக்குக் கூட அவளுக்குப் பக்கபலமாக அறிவொளி அமர்ந்திருக்க, பூவிழி மட்டுமே தன்னந்தனியாக தவித்துக் கொண்டிருப்பதையும், தன் மகள்கள் இருவரையும் இப்படி பாதியிலேயே கைவிட்டு விட்டுப் போயிருந்த முத்துமணியை எண்ணி ஆற்றாமை உருவானது திருவாதிரனுக்கு!
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக