முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே - 10

 


“இப்போ தான் உங்கம்மாவைச் சிதையில் ஏத்திட்டு வந்திருக்கோம்! அதுக்குள்ளே எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாக இரு. ஆறு மாசமாவது ஆகட்டும். அதுக்கப்புறம் இதைப் பத்தி முடிவு எடுப்போம்!”என்று அவளிடம் தீர்க்கமாக உரைத்து விட்டிருக்க, 


ஆனாலும்,”இல்லைங்க ஐயா! அது வரைக்கும் என்னால் இங்கே இருக்க முடியாது! எந்தங்கச்சியை உங்கண்ணனுக்குக் கட்டி வச்சு மருமகளாக ஆக்கிக்கோங்க! என்னை விட்ருங்க! நான் இங்கேயிருந்து போறது தான் சரியானதாக இருக்கும்!”என்று அவனிடம் மறுத்துக் கூறினாள் பூவிழி. 


அவனிடம் நிமிர்வாகப், பயமின்றித் தனது மனதில் இருப்பதை தயங்காமல் சொல்லிக் கொண்டிருந்தவளை வியப்பாகப் பார்த்திருந்தார்கள் மற்ற அனைவரும். 


ஆனால் பூவிழியின் வார்த்தைகளைக் கேட்டுக் கொதிநிலையை அடைந்திருந்தவனோ, 


“அப்படியெல்லாம் நீ நினைச்ச உடனே இங்கிருந்து உன்னை அனுப்ப முடியாது!”என்று அவளிடம் அழுத்தமாக கூறி விட்டிருந்தான் திருவாதிரன். 


அதைக் கேட்டதும் அவளுக்குச் சுயமரியாதை தலை தூக்கி விடவும்,”நீங்கப் பண்றது எதுவுமே நல்லா இல்லை ஐயா! என் தங்கச்சி தான் உங்க வீட்டு வாரிசைச் சுமந்துட்டு இருக்கிறா! அதனால் அவ இங்கே இருக்கிறதில் நியாயம் இருக்கு. நான் எதுக்கு இங்கே மூனாவது மனுஷி மாதிரி இங்கே தங்கிட்டு இருக்கனும்? என்னால் இனிமேல் இங்கே இருக்கவே முடியாது ஐயா! இங்கே இருந்தாலே எங்கம்மாவோட நினைவுகள் எனக்கு வந்துட்டே இருக்கும்! அதனால் தான், சொல்றேனுங்க!”என்றவளை, 


“ப்ச்! எதுக்கு இதையே திரும்பத், திரும்ப சொல்லிட்டே இருக்கிற? உனக்கு வேணும்னா வாய் வலிக்காமல் இருக்கலாம். ஆனால் எனக்கு இதைக் கேட்டுக், கேட்டுக் காதில் இரத்தம் வந்துடும் போல இருக்கு! இந்தப் பல்லவியை முதல்ல நிப்பாட்டு!”என்று அவளிடம் உச்சஸ்தாயியில் கத்தவும், 


அதில் அவளது உடல் பயத்தில் தூக்கி வாரிப் போட்டது! 


அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் தன் கால்களை இரண்டு அடிகள் பின்னோக்கி நகர்த்திக் கொண்டாள் பூவிழி. 


“நான் உங்கிட்ட கொஞ்சம் தனியாகப் பேசனும். வெளியே வா”என்றதுமே அதற்கு அவள் உடனே இசைந்து கொடுக்காமல், தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து நகரவே இல்லை! 


அதில் மேலும் சினம் ஏற்பட,“நீ ஓய்வெடும்மா! நான் உங்க அக்காவைத் தனியாக கூட்டிட்டுப் போய்ப் பேசிட்டு வர்றேன”எனச் செந்தாழையிடம் தெரிவிக்க,


 அவளோ தயக்கத்துடன் தனது தமக்கையைப் பார்த்தாள். 


அதைப் புரிந்து கொண்டு,”கவலைப்படாதேம்மா! நான் உங்கக்கா கிட்டே பேசிட்டு இவளைப் பத்திரமாக இங்கே கொண்டு வந்து விட்டுட்றேன்”என்று அவளுக்கு வாக்களித்து விட்டு, 


“நீ போய் உன் வருங்கால பொண்டாட்டியைக் கூட்டிட்டுப் போய்ச் சாப்பிட வை அண்ணா!”என்று தமையனிடம் கூறவும், 


“சரி திரு. ஆனால் பார்த்து நடந்துக்கோ!”என அவனுக்கு அறிவுறுத்தி விட்டுச் செந்தாழையுடன் அங்கேயிருந்து அகன்றான் அறிவொளி. 


அவனது பேச்சைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றப் பூவிழியின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு அங்கேயிருந்து நகர, 


“ஐயா!! என் கையை விடுங்க! இதை யாராவது பார்த்தால் தப்பாக நினைப்பாக!”என்று அவனிடம் இறைஞ்சினாள் பூவிழி. 


ஆனால் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் தனது பிடியையும் தளர்த்தாமல் அவளைக் கூட்டிக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தான் திருவாதிரன். 


தங்களது இரண்டு மகன்களும் இன்னும் செந்தாழை மற்றும் பூவிழியின் அறையிலிருந்து வராமல் இருப்பதை எண்ணிக் கடுப்பில் இருந்த ராஜகுமாரியும், நஞ்சுண்டனும் முதலில் அங்கு வந்து சேர்ந்திருந்த அறிவொளி மற்றும் செந்தாழையைக் கண்டதும்,


“என்னங்க, இவ மட்டும் தான் வர்றா? இன்னொருத்தியைக் காணோம்! ஒருவேளை சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்கிறாளோ?”என்று கணவரிடம் முணுமுணுத்தார் ராஜகுமாரி. 


“அவ அப்படி இருந்தாலும் உன் சின்ன மயன் அவளை அப்படி இருக்க விட்ற மாட்டான்! அவனையும் ஆளைக் காணோம் பாரு!”என அவரிடம் தெரிவித்தார் நஞ்சுண்டன். 


“ம்ஹ்ம்!”என்றவரோ மூத்த மகன் தன்னை முறைப்பதைக் கண்டதும், 


“செந்தா வந்து உட்கார்ந்து சாப்பிடு”என்று வேண்டா வெறுப்பாக அவளை உணவுண்ண அழைத்தார் ராஜகுமாரி. 


ஆனால் அவளோ தயங்கிக் கொண்டு நிற்கவும், அவளது தோளைப் பற்றி உரிமையாக நாற்காலியில் அமர வைத்து விட்டுத் தானும் அவளுக்கு அருகில் அமர்ந்து கொண்டான் அறிவொளி. 


“நீங்க ரெண்டு பேரும் மட்டும் வந்திருக்கீங்க! திரு எங்கேப்பா? அந்தப் பொண்ணையும் காணலை!”என அவனிடம் இயல்பாக விசாரிப்பதைப் போல் கேட்டார் நஞ்சுண்டன். 


“அவங்க” என்றவன் மேலே தொடர எத்தனிக்கும் போதே, 


“என் கையை விடுங்க ஐயா!”என்றப் பூவிழியின் கதறலும், அவனைத் திருவாதிரன் தரதரவென இழுத்து வருவதைப் பார்த்ததுமே திடுக்கிட்டு எழுந்து கொண்டனர் மற்ற நால்வரும். 


“டேய் திரு! என்னடா பண்ற? அவ கையை விடு முதல்ல!”என்று அவனைக் கடிந்து கொண்டே முன்னேறிச் சென்றார் நஞ்சுண்டன்.


“இப்போ யாரும் என்கிட்டே வரக் கூடாது! இவ கூட நான் போய்ப் பேசிட்டு வந்து உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்றேன்”என்று பொதுவாக உத்தரவிட்டு விட்டுப் பூவிழியை அழைத்துக் கொண்டு மாடிக்கு விரைந்தான் திருவாதிரன். 


“என்னடா நடக்குது இங்கே? இவன் ரொம்பப் பண்றான்! என்னாலே இதுக்கு மேலே இவன் பண்றதை எல்லாம் பார்த்துட்டுச் சும்மா இருக்க முடியாது!”என்றவரிடம்,


“அவன் தான் பேசிட்டு வர்றேன்னுச் சொல்லிட்டுப் போயிருக்கான்ல? அவன் வந்ததும் பேசிக்கலாம்”என்று அவரிடம் அறிவுறுத்திய அறிவொளியோ, 


“நீங்க தானே அவனைத் தலையில் தூக்கி வச்சிட்டு ஆடுனீங்க? இப்போ எங்கிட்ட வந்து அவனைப் பத்திப் புகார் சொன்னால் என்ன அர்த்தம்? அவனை நீங்களே சமாளிச்சுக்கோங்க! இவ இன்னும் சாப்பிடாமல் இருக்கிறா! நான் இவளைக் கவனிக்கனும்!”என்றவனை அதிர்ச்சியில் விழி விரித்துப் பார்த்தார்கள் அவனது பெற்றோர். 


ஆனால் அவனோ, தான் செய்த செயல் தான் தன்னுடைய தம்பியின் இந்த நடவடிக்கைகளுக்கு அடித்தளம் என்பதைச் சாமர்த்தியமாக மறைத்து விட்டு இப்போது முழுப் பழியையும் தனது பெற்றோரின் தலையில் போட்டு விட்டுத் தன்னுடைய கருவைச் சுமக்கும் செந்தாழைக்கு உணவுப் பரிமாறச் சொல்லி அவளை உண்ண வைக்கும் வேலையில் இறங்கி விட்டான். 


அவன் தனக்காகப் பேசியதையும், தன்னை இப்படி கவனித்ததையும் கண்டு உள்ளம் பூரித்துப் போய்த் தனது தமக்கையைப் பற்றிய எண்ணத்தை மறந்து விட்டு உணவைச் சுவைத்து உண்ணத் தொடங்கினாள் செந்தாழை. 


“இவன் இப்படி பேசுறான்னா, இவ என்னத் தன்னோட அக்காவைப் பத்திக் கவலையேபடாமல் சோத்தை முழுங்கிட்டு இருக்கிறா? ஐயோ! என்னால் இதையெல்லாம் கண்ணாரப் பார்க்க முடியலையே!”என்று தன் புலம்பலை ஆரம்பித்து விட்டார் ராஜகுமாரி. 


ஆனால் இப்போது தனது மனைவியைச் சமாதானம் செய்ய முயலாமல்,’தங்களது இளைய மகன் என்னக் காரணத்திற்காகப் பூவிழியைத் தனியாகப் பேச அழைத்துச் சென்றுள்ளான் என்றும், அவளிடம் எதைப் பற்றிப் பேசப் போகிறான் என்றும், அதே சமயம், அவள் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்பதை மட்டும் தான் அவளிடம் அறிவுறுத்துவானா? அல்லது வேறு எந்தக் காரணமும் இருக்குமா?’என்று எண்ணிக் கலக்கம் அடைந்தார் நஞ்சுண்டன். 


இங்கே தன்னை வலுக்கட்டாயமாக மாடிக்கு அழைத்து வந்திருந்த திருவாதிரனை மூக்கு விடைக்க முறைத்துக் கொண்டு இருந்தாள் பூவிழி. 


ஆனால் அவனோ அதை அநாயசமாக ஒதுக்கி விட்டு,”அங்கே கீழே வச்சு ஏதோ சொன்னியே! அதை இப்போ சொல்லு கேட்போம்”என்று அவளிடம் நிதானமாக வினவினான். 


“அதான் ஐயா! நான் இங்கே இருக்க விரும்பலை! அதே மாதிரி எனக்கு இங்கே இருக்கிறதுக்கு எந்த உரிமையும் இல்லை! செந்தாவை மட்டும் இங்கே வச்சிட்டு என்னை அனுப்பிருங்க”என்று தானும் பொறுமையாக அவனிடம் கூறி முடித்தவளைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே,


“இங்கேயிருந்து கிளம்பி எங்கே போகிறதாக உத்தேசம்?”என்றிருந்தான் திருவாதிரன். 


உடனே,”நான் வேற ஏதாவது ஊருக்குப் போய் எனக்குத் தெரிஞ்ச வேலையைப் பார்த்துப் பொழைச்சிக்குவேனுங்க”எனப் பதிலளித்தாள் பூவிழி.


“ஓஹ்! அப்பறம் உன் தங்கச்சியைப் பத்தியோ, அவளோட குழந்தையைப் பத்தியோ உனக்கு எந்தக் கவலையும் இல்லையா? அவளோட பிரசவம் முடிஞ்சுக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சனும்னு எல்லாம் உனக்கு ஆசை இல்லையா?”என்று கேட்கவும், 


அதைக் கேட்டதும் வலி நிறைந்தப் பார்வையுடன் அவனை ஏறிட்டு,”அந்த ஆசை எல்லாமே எனக்கு இருக்குங்க ஐயா! ஆனாலும் என்னால் இங்கே இருக்க முடியாது!”என்றவளிடம்,


“அதை தான் ஏன்னுக் கேட்கிறேன்”எனக் கேட்டுப் பல்லைக் கடித்துக் கொண்டு அவளைப் பார்த்தான் திருவாதிரன். 


அதற்கு அவளோ,”என்னையும், எங்க ஆத்தாவையும் பத்திச் செந்தா நினைச்சுப் பார்த்திருந்தால் எங்க ஆத்தா இறந்து இருக்க மாட்டாக! அதே மாதிரி நாங்க மூனு பேரும் சேர்ந்து இங்கேயிருந்து தப்பிக்கலாம்னுத் தான் பேசுனோம்! ஆனால் அதுக்குச் செந்தா ஒத்துக்கலை! அப்படியே அவளைக் கட்டாயப்படுத்தினால் இதை உங்க கிட்ட சொல்லிடுவேன்னும் மிரட்டினாள்! அவ இவ்வளவு சுயநலமாக யோசிச்சு நடக்கும் போது நான் எதுக்கு இங்கே இருந்து அவளைப் பார்த்துக்கனும்ங்க ஐயா? அவளைப் பார்த்துக்கத் தான் உங்கண்ணன் இருக்காரே? நீங்க எல்லாரும் இருக்கீங்களே? அப்பறம் நான் எதுக்கு இந்த வீட்டுக்குப் பொருந்தாத பொறப்பாக இருக்கனும்? அதனால் தான், நான் இப்படி ஒரு முடிவெடுத்தேனுங்க ஐயா!”என்று அவனிடம் மனம் விட்டு அனைத்தையும் சொல்லி முடித்திருந்தாள் பூவிழி. 


அவளது அந்த உறுதியான பேச்சைக் கேட்டு மெய் சிலிர்த்துப் போய் விட்டான் ஆடவன். 


ஏனெனில் அவள் தனது தங்கையுடன் இருப்பதற்காகவே இங்கு ஒரு வேலைக்காரியாக இருக்கிறேன் என்றோ, அல்லது தனக்கும் இங்கு உரிமை வேண்டும் என்றோ வாதம் செய்யாமல் தனது சுயமரியாதையை மிகவும் மதித்து அதைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் இப்படியானதொரு முடிவை எடுத்து இருப்பவளைக் கண்டு அவனுக்கு வியப்புத் தானே தோன்றும்? 


அதேபோல் இங்கே இருக்கும் வரை இந்தப் பணத்தையும், பகட்டையும் அனுபவித்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே இவளுக்குள் எழவில்லையே! என்பதையும் யோசித்துப் பார்த்து ஆச்சரியம் அடைந்தான் திருவாதிரன். 


அவனது பலத்த யோசனையை அவதானித்து விட்டுத் தன்னுடைய வார்த்தைகள் அவனது மனதை மாற்றி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பூவிழி. 


ஆனால் அவனோ,”நீ சொன்னது எல்லாமே நியாயமான காரணங்கள் தான்! ஆனால் இதில் எங்களோட குடும்பக் கௌரவமும் அடங்கி இருக்கு! அதனால், நான் உன்னை எங்கேயும் அனுப்பப் போவதில்லை! அதுக்குப் பதிலாக வேற ஒரு முடிவு எடுத்து இருக்கேன்! அதுக்கு நீ ஒத்துக்கிட்டுத் தான் ஆகனும்! அதைத் தவிர உனக்கு வேற வழியில்லை!”என்றவனைத் திகிலுடன் நோக்கி, 


“என்னங்க ஐயா இப்படி சொல்றீங்க?”என்று கலங்கிய கண்களுடன் அவனிடம் கேட்டு நின்றவளிடம், 


“இரு! நான் இன்னும் விஷயத்தை முழுசாகச் சொல்லி முடிக்கவே இல்லை!”என்றவனை மேலும் அதிர்ந்து போய் பார்த்தவளோ அவன் அடுத்து என்ன மொழியப் போகிறான் என்பதை எண்ணிய பூவிழியின் இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கி விட்டிருந்தது. 


                      - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...