முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 5

  போர்வையை முகத்திற்கு ஏற்றி, வசதியாகப் படுத்துக் கொண்டாள் முக்தா. தன் தாயகத்தை விட்டு விட்டு, தூர தேசத்திற்கு வந்த போதும், எதையும் மறந்து விடவில்லை அவள். தந்தைக்கு அடிக்கடி செல்பேசியில் அழைத்துப் பேசிக் கொள்வாள் முக்தா. தன்னுடைய நடை , உடை பாவனைகள் எவற்றையும் மாற்றிக் கொள்ளவில்லை, ஆனால், மாற்றப்பட வேண்டியவை எல்லாம் தானாகவே சரியாகி விட்டது அவளிடம். காலை நேரத்து காபியை மட்டும் தனக்காகத் தயாரித்துக் கொண்டிருந்தவளோ, சமையலையும் தானே செய்து கொண்டாள் முக்தா. இந்தியாவில் இருக்கும் போது, எப்போதாவது சமைப்பவள், இங்கோ, தினமும் தன் கை வண்ணத்திலேயே உணவருந்த ஆரம்பித்து இருந்தாள். "ஹலோ ப்பா! குட்மார்னிங்" என்று உற்சாகம் பொங்கப் பேசினாள் மகள். "முகி! வேலையா இருக்கியாடா?" என்று வினவினார் நீலகண்டன். அதிகாலையிலேயே அழைத்து விட்ட தந்தையிடம், உணவு சமைத்தபடியே அளவளாவிக் கொண்டிருந்தவள், "குக்கிங் தான் நடக்குது அப்பா! ஒன்னும் இல்லை நீங்கப் பேசுங்க" என்று காய்களை நறுக்கியவாறு கூறினாள் முக்தா. "என்னம்மா சமைக்கிற?" என்றதும், "ஃப்ரைட் ரைஸ் ப்பா‌. நீங்க சாப்பிட்டீங்களா?...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 4

  விமான நிலையத்திலிருந்து தந்தைக்கு அழைத்து, "அப்பா! நான் ஏர்போர்ட்டுக்கு வந்துட்டேன். என்னைப் பிக்கப் பண்ண வாங்க" என்று அவரை வரச் சொன்னாள் முக்தா. "என்னம்மா முன்னாடியே சொல்லக் கூடாதா?" என்று மகளின் வரவை நினைத்து மகிழ்ந்து கொண்டே, அவளை அழைத்து வருவதற்காக விமான நிலையம் சென்றார் நீலகண்டன். தோழிகளும் உடனிருந்ததால் ,"எங்க அப்பா வர்றார்? உங்களைக் கூப்பிட யார் வர்றாங்க?" என்று அவர்களிடம் கேட்டாள் முக்தா. "நீ தான் எங்களை வீட்டில் கொண்டு போய் விட ஏற்பாடு பண்ணனும்! உங்க அப்பா வர்றாருன்னு நைஸாக நழுவப் பாக்குற!" என்று சீறினர் அவளுடைய சிநேகிதிகள். அவர்களது சுயரூபத்தைப் பார்த்தவளுக்கு மனம் வதங்கிப் போய் விட்டது.  முந்தைய நாட்கள் வரை ஒன்றாக சேர்ந்து, சிரித்துப் பேசி, சுற்றிக் கொண்டு இருந்தவர்கள் இப்போது கறாராகப் பேசுவதைக் கேட்டு, திகைத்து, "இவ்ளோ நாள் என்‌ கூட நல்லா தான பேசினீங்க? இப்போ பேச்சு அப்படியே மாறுது!" என்று எரிச்சல்பட்டாள் முக்தா. "ஆங்! நீ தானே எங்களைக் கூட கூப்பிட்டுப் போன, எங்களைப் பத்திரமாக வீட்டில் விட்றதும் உன் பொறுப்பு தான?"...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 3

  முக்தாவின் வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி அறிந்து கொண்ட கிஷானுக்கு மனம் வலிமையை இழந்தது. அப்போது தான், அவள் மேல், அவன் கொண்ட காதல் தெரிந்தது. "டேய்! மஹத்" என நண்பனை அழைத்தான் கிஷான். "என்னடா?" என்று சாதாரணமாகப் பேசிய மஹதனிடம், கிஷான்,"முக்தா!" என்கவும், "அவளுக்கு என்ன?"  "ஃபாரீனுக்குப் போயிட்டாங்கன்னு உனக்குத் தெரியும் தானடா?" என்று விரக்தியுடன் கேட்டான் தோழன். "தெரியும். அப்பா சொன்னார். நீ ஃபீல் பண்ணுவன்னும் தெரியும்" என்று சேர்த்துச் சொன்னான். "மஹத்" குரலை உயர்த்தவும், "என்னை வேற என்ன சொல்ல சொல்ற கிஷான்?" என்று அவன் கோபத்திற்குக் கண்டனம் தெரிவித்தான். சினம் கொண்டு என்ன சாதிக்க முடியும் என்று அமைதியாகி விட்டான் கிஷான். ஆனால் , இதற்கு மாறாக ,   வெளிநாட்டில் ஆனந்தமாக தோழிகளுடன் சேர்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தாள் முக்தா. அவளுடைய பிரியமான தோழிகள் எல்லாரும், முக்தா அழைத்தும் வர முடியாது என்று சொல்லி விட்டனர். அதனால், தன்னுடன் பயின்ற ஒரு சில கல்லூரிக் கால சிநேகிதிகளுடன் கிளம்பி விட்டாள். செல்லும் இடமெல்லா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 2

  சுற்றியிருந்த மற்றவர்களும் திருமூர்த்தியின் மேலிருந்த விசுவாசத்தில் அவர் கூறியதை நம்பி விட்டனர். அவரும் தன் கம்பெனியில் முக்கியப் பதவிகளில் வகிப்பவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் செயல்படவில்லை. தரம் நன்றாக இருக்கும் பொருளைத் தான், தயாரிக்கும் யோசனையை முன் வைத்திருந்தார் திருமூர்த்தி. அந்த மீட்டிங்கின் முதன்மைப் பேச்சே அதைப் பற்றியது தான்! "எங்களுக்கும் சம்மதம் சார்!" என்று நீலகண்டனைச் சேர்த்து, அங்கிருந்த மற்ற உயர் பணியில் இருப்பவர்களும் ஒப்புக் கொண்டனர். மதிய உணவுக்கான வேளை வந்ததும், சாப்பாடு தன் இருப்பிடத்திற்கு வருவதற்கு முன்னாலேயே, தான் உணவுண்ணப் போவதைக் குறுஞ்செய்தியாக மகளுக்கு அனுப்பி வைத்து விட்டார் நீலகண்டன்.  "மூர்த்தி அங்கிள் கூட தான லன்ச்ன்னு சொன்னாரு" என்றபடி, யோசனையில் இருந்தவளுடைய செல்பேசியில் குறுஞ்செய்தி வந்தது. மதிய உணவை எடுத்துக் கொண்டதாக தந்தை தான், அதை அனுப்பியிருந்தார். அந்த குறுஞ்செய்திக்குப் பதில் அனுப்பியவளுக்கு , வேறு என்னப் பொழுதுபோக்கு இருக்கிறது செய்வதற்கு? உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாள் முக்தா. அதற்குப் பின்னர் தான், வெளி வேலைகள் முடிந்து, வ...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 1

  மாடியில் நின்று கொண்டு, பால்கனி வழியாகப், பகலவனைக் கண்களால் பருகி கண் கொண்டு , காஃபியை வயிற்றுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள் முக்தா. விரைவாகவே துயில் கலைந்து எழுந்து விடுபவள் தான். இரவு உடையை மாற்றும் நினைவு இன்றி , காஃபியின் மணமும், சுவையும் அவளைப் பிடித்து வைத்துக் கொண்டது. "முகி!" என்ற தந்தையின் அழைப்பில், தலையைத் திரும்பினாள் அவர்புறம். "குட்மார்னிங்! இன்னைக்கு சீக்கிரம் போகனும் டா" என்று கனிவுடன் மகளிடம் கூறினார் நீலகண்டன். "ஏன் அப்பா?" என்றாள் அவரது செல்ல மகள். "மூர்த்தி தான் வர சொல்லி இருக்கான். போனா தான் தெரியும். நீ ஃப்ரெஷ் ஆகிடு" என்று கூறினார் தந்தை. "ம்ம்! சரிங்க ப்பா" "மறக்காமல் லன்ச் சாப்பிட்ருங்க! நான் கொடுத்து விட சொல்றேன்" என்கவும், "இல்லைடா. ஹோட்டலில் அரேன்ட்ஜ் செய்து இருக்கிறதா மூர்த்தி சொல்லி இருக்கான். நான் அவன் கூட தான் மதியம் சாப்பிடப் போறேன்" எனக் கூற, "சாப்பிட்டுட்டு மெசேஜ் செய்திடுங்க அப்பா" என்று மட்டும் கூறி தந்தையை வழி அனுப்பினாள் முக்தா. காலியானக் கோப்பையைக் கழுவப் போட்டவள்...