அழைப்பு மணியின் ஒலியில், காஃபிக் கோப்பையை வைத்து விட்டு, சென்று கதவைத் திறந்தாள் மௌனா. வெளியே களைந்து போன முகத்துடன், நலிந்த தோற்றத்துடன் நின்றிருந்தாள் அகதா. சட்டென்று அவளைத் தாவி அணைத்துக் கொண்ட மௌனா, "அகி!! என்ன ஆச்சு? இப்படி உடைஞ்சு போயிருக்க?" என்று விசாரித்தவாறே, உள்ளே அழைத்துச் சென்றாள். ஒரு குவளைத் தண்ணீரைக் குடித்து, ஆசுவாசமான பிறகே, அவளிடம் மேற்கொண்டு விசாரிக்க ஆரம்பித்தாள் மௌனா. அவளே மெதுவாக சொல்லட்டும் என்று தோழியைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவள் எதிர்பார்த்தது போல, "அழுகக் கூடாதுன்னு அடக்கி வச்சிருக்கேன் மௌனா. எனக்கு அழுகுறதும் சலிப்பாகிடுச்சு" என வெறுத்துப் போய்ப் பேசினாள். "ஏன் அகி? அங்கே தீபக் ரொம்ப ஹார்ஸ் ஆக நடந்துக்கிட்டாரா?" என்று வினவினாள் மௌனா. "இல்லை.ஆனால் மனசாட்சியே இல்லாமல் நடந்துக்கிட்டார்" என்று நடந்ததை விவரித்தாள் அகதா. தன் மாமியார் வீட்டிற்குச் சென்றதும், தீபக்கும் , அவனது தாயும் பேசிக் கொள்வதைக் கேட்டாள். "பணம் மட்டும் கொடுத்தால் போதும், அவளை ஊருக்கு அனுப்பி வச்சிடலாம்.அ...
Writer