முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே - 30

 


தனது மனைவியின் எதிர்பாராத இதழ் முத்தத்தில் திக்குமுக்காடிப் போனாலும் பட்டென்று அவளிடமிருந்து தனது உதடுகளைப் பிரித்து எடுத்து விட்டு, 


“நீ ஒன்னும் இதைப் பொண்டாட்டின்றக் கடமைக்காகச் செய்யலையே?”என்று அவளை அழுத்தமாகப் பார்த்துக் கேட்டிருந்தான் திருவாதிரன். 


அதில் குறுஞ்சிரிப்பை உதிர்த்து விட்டு,”ம்ஹூம். இல்லைங்க. நீங்க என் கணவர்ன்ற உரிமையில் தான் நானே முன்னெடுத்து உங்களுக்கு முத்தங் கொடுத்தேன்! அது வேண்டாம்னா போங்க”என்று குறும்பாக கூறி விட்டு நகரப் போனவளைத் தனது கரத்தைக் கொண்டு அவளது இடையை வளைத்துத் தன்னுடன் சேர்த்து இறுக்கிக் கொண்டு, 


“எனக்கு வேண்டாம்னு நான் சொல்லவே இல்லையே! எனக்கு நீ மொத்தமாக வேணும் விழி! ஆனால் இந்த சுகத்தை நான் ஒரேயடியாக அனுபவிக்க விரும்பலை! அதில் நாம கொஞ்சம், கொஞ்சமாக நம்மளோட தாம்பத்தியத்தை ரசிச்சு, அனுபவிச்சு, நாம ஒருத்தர் ஒருத்தரை நல்லா புரிஞ்சுக்கவும் முயற்சி செய்யனும்! அது தான் என்னோட ஆசை!”என அவளது விழிகளைப் பார்த்து உறுதியான குரலில் மொழிந்த கணவனின் மார்பில் சாய்ந்து அதில் தனது முகத்தை அழுத்தமாகப் பதித்துக் கொண்டு, 


“நீங்கப் போய் முதல்ல உங்க உடையை மாத்திட்டு வாங்க”என்றிருந்தாள் பூவிழி. 


அதில் தனது இதழ்க்கடைப் புன்னகையுடன் அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டுத் தன் உடையை மாற்றச் சென்றான் திருவாதிரன். 


உடனே தானும் மெத்தையில் ஆற, அமர உட்கார்ந்து விட்டிருந்தாள் அவனது மனைவி. 


இதே நேரத்தில், தங்களது காட்டில் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தன் மனைவியிடம் பொருமலுடன் பகிர்ந்து கொண்டார் நஞ்சுண்டன். 


அதைக் கேட்டதும் தன் முகத்தைக் கோரமாக வைத்துக் கொண்டு,”இந்த அளவுக்குப் போயாச்சா? அவேன் அனுப்பி விட்டான்னு சாப்பாடு வாங்க வீட்டுக்கு ஆள் வரும் போதே நினைச்சேனுங்க! திரு அவனோட பொண்டாட்டி கிட்டே குப்புற விழுந்துக் கிடக்கிறான்னு! என்னங்க நம்ம ரெண்டு பசங்களும் பொண்டாட்டி தாசனுகளா ஆகிட்டானுங்களே? இதுக்கப்புறம் நம்ம வீட்டுக்கு மருமகளுங்கன்னு வந்திருக்கிற ரெண்டுச் சிறுக்கிகளையும் வெளியே துரத்த முடியாது போலவே!”என்று அவரிடம் குறைபட்டுக் கொண்டார் ராஜகுமாரி. 


“இதையே பேசிட்டு இருந்தால் இனிமேல் வேலைக்கு ஆகாதும்மா! இவனுங்க ரெண்டு பேரும் நம்மளை விட வெவரமா இருக்கானுங்க! அதே மாதிரி அந்தப் பூவிழிக்கு என்னத் தொல்லைக் கொடுத்தாலும் அதை திருவே தகர்த்து எறிஞ்சிட்றான். அதனால் நாம இதை வேற மாதிரி தான் கையாளனும்”என அவருக்குப் புரிய வைக்க, 


“ம்ஹ்ம். என்னத்த சொல்ல! நம்மளோட அதிகாரம் எல்லாம் இனிமேல் இங்கே செல்லுபடியாகாதுங்க! அதே மாதிரி இந்த அக்காவும், தங்கச்சியும் ஒருத்தருக்கு, ஒருத்தர் இந்த வீட்டோட பொறுப்பை யாரு எடுத்துக்கப் போறான்னு அடிச்சிக்கனும்! அதை நான் பார்த்து சந்தோஷப்படனும்! அதுக்காகத் தான் நான் காத்திருக்கேனுங்க!”எனக் கூறி வஞ்சப் புன்னகையை 

சிந்தினார் ராஜகுமாரி. 


“எனக்கு என்னமோ அதுவும் நடக்காதுன்னுத் தோணுதும்மா”என்று நம்பிக்கை இல்லாத குரலில் மொழிந்தார் நஞ்சுண்டன். 


உடனே அவரை முறைத்துப் பார்த்து,”ஏன் இப்படி அச்சாணியமாகவே பேசுறீய?”என்று அவரிடம் ஆதங்கத்துடன் கேட்க, 


“வேற எப்படி பேச? நம்ம மறு வீட்டு விருந்துக்கு முன்னாடியே அந்தப் பூவிழியை வீட்டில் இருந்து வெளியேத்த நினைச்சேன்! அதையும் உன் சின்ன மயன் கெடுத்து விட்டுட்டியான்! நானும் அந்த முருகையன் கூடச் சேர்ந்து இதுக்கு வேற ஏதாவது திட்டம் போடப் பார்க்கிறேன்”என மனைவியிடம் தீர்க்கமாக உரைத்தார் நஞ்சுண்டன். 


அதில்,“சரிங்க”என்றுரைத்து விட்டார் ராஜகுமாரி. 


அதே நேரத்தில் தங்களது அறையில் இருந்த அறிவொளியும், செந்தாழையும் சிறிது நேரத்திற்கு முன்புத் தங்களிடம் திருவாதிரன் பேசிய விஷயத்தையும், விதத்தையும் எண்ணி மிகவும் கடுப்புடன் இருந்தார்கள். 


“என்னமோ நம்மளை மாதிரி இவுக ரெண்டு பேரும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டா மாதிரி தன்னோட பொண்டாட்டிக்காக அப்படி துள்ளிக்கிட்டு வந்தாரு உங்கத் தம்பி! இந்த வீட்டில் இளையவருக்கு மட்டும் தான் மரியாதைன்னா நாம ரெண்டு பேரும் தனிக் குடித்தனம் போயிடலாமுங்க”எனக் கோபத்தில் மூச்சு வாங்கப் பேசிய மனைவியிடம், 


“ஹேய் செந்தா! என்னப் புள்ள நீ பாட்டுக்கு இப்படி பொசுக்குன்னுச் சொல்லிப்புட்ட? அது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அது மட்டுமில்லாமல் தனியாகப் போய் நம்மப் புள்ளைய எப்படி வளர்க்க முடியும்?”என்றிருந்தான் அறிவொளி. 


“அதான் உங்களுக்கும் இந்தச் சொத்தில் பங்கு இருக்குல்ல? அப்பறம் என்னங்க? அதைப் பிரிச்சு எழுதி வாங்கிட்டு வாங்க! நாம அதை வச்சு நம்மப் புள்ளைய வளர்த்துக்கலாம்! அதே மாதிரி நமக்கு ஒத்தாசைக்குன்னு வேலைக்காரங்க கிடைக்காமலா போவாங்க? அதெல்லாம் காசு, பணமிருந்தால் எல்லாம் நம்மக் கையிலேயே வந்து விழுந்துடும்!”என்று அவனிடம் அலட்சியமாக கூறினாள் செந்தாழை. 


அதைக் கேட்டு மிரண்டு போய் விட்டான் அறிவொளி. 


ஏனெனில் தங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது முதல் இப்போது வரையில் தனிக் குடித்தனம் என்ற ஒரு விஷயத்தையே அவன் தன் கனவிலும் யோசித்துப் பார்த்தது கிடையாது!


ஆனால் இவள் என்னவென்றால் இப்படியெல்லாம் பேசுகிறாளே? என்று விழி பிதுங்கிப் போய்ப் பார்க்கவும்,


“என்ன இப்படி பார்க்கிறீய? நான் சொன்னதில் என்னத் தப்புங்க மாமா? நம்மக் காதல், கல்யாணம் இதையெல்லாம் பேசி நம்மளைச் சும்மா, சும்மா உசுப்பேத்தி விட்டுட்டே இருந்தால் எனக்கும மனசுக்குக் கஷ்டமாக இருக்காதா? அப்பறம் எப்படி நான் நம்மக் குழந்தையை ஆரோக்கியமாகப் பெத்து எடுக்க முடியும் சொல்லுங்க?”என அவனிடம் கலங்கிய குரலில் வினவினாள் செந்தாழை. 


அதைக் கேட்டு அவனுமே கொஞ்சம் அவளது புறமிருக்கும் நியாயத்தைப் பற்றி யோசித்தான் அறிவொளி. 


ஆனாலும் அவனுக்குத் தனிக் குடித்தனம் செல்லும் அளவிற்குத் தைரியம் இருக்கவில்லை என்பதே நிதர்சனம்! 


அதனாலேயே மனைவியை என்னச் சொல்லி ஆறுதல்படுத்துவது என்பது புரியவில்லை அறிவொளிக்கு. 


அப்போது அவரவர் அறைக்குச் சிற்றுண்டிகள் மற்றும் காப்பிக் குவளைகளை அனுப்பி வைக்கப்படவும் தங்களது உரையாடலை நிறுத்தி விட்டு அவற்றைக் காலி செய்யும் வேலையில் இறங்கி விட்டனர் அந்தக் கணவனும், மனைவியும். 


அதேபோல் தனது உடையை மாற்றிக் கொண்டு வந்து மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தவனோ, 


அங்கு மேசையில் இருந்த காப்பிக் கோப்பைகள் மற்றும் சிற்றுண்டித் தட்டுக்களைப் பார்த்ததுமே,”நான் வர்ற வரைக்கும் நீ காத்திருக்கனுமா? உன்னோட காபியையும், நொறுக்குத் தீனியையும் சாப்பிட வேண்டியது தானே?”என்று அவளிடம் அக்கறையுடன் கேட்டான் திருவாதிரன். 


“ம்ஹூம். சாப்பிடத் தோனலைங்க”என்றவளோ, 


“நீங்க இன்னும் நான் கேட்டதுக்குப் பதிலே சொல்லலையே!”என அவனிடம் குறைபட்டுக் கொண்டாள் பூவிழி. 


“என்னது?”என்றவனை முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு நோக்கவும், 


அதில் குறுநகையுடன் அவளைப் பார்த்து,”அது உனக்குத் தெரியாமல் இருக்கிறதே நல்லது தான்! ஆனால் இனிமேல் உனக்கு அவங்களால் எந்தப் பிரச்சினையும் வராது!”என்று அவளுக்கு வாக்களித்தான் திருவாதிரன். 


“ப்ச்! சொல்லுங்க!”என்று அவனிடம் சினுங்கினாள் பூவிழி. 


உடனே அவளது இதழில் மென்மையாக முத்தமிட்டு விட்டு,”அது கூடிய சீக்கிரம் உனக்கே தெரிஞ்சிடும்!”என்றவனைப் பெருமூச்சுடன் பார்த்தவளோ, 


அதற்குப் பிறகு அதைப் பற்றி அவனிடம் கேட்கவில்லை.


இரவு உணவு நேரத்தில்,”அடுத்த மூனு நாளில் விருந்து வச்சிடலாமா?”என அனைவரிடமும் கேட்டிருந்தார் ராஜகுமாரி. 


“ம்ஹ்ம். வச்சிடலாம்மா. நான் நாளைக்குச் சமையல் ஆளுங்களை நம்ம வீட்டுக்கு வரச் சொல்றேன். மேற்படி விவரங்களை நீ அவங்க கிட்ட பேசிரு”என அவரிடம் கூறி விட்டு, 


“இதில் உங்க எல்லாருக்கும் சம்மதமா?”என்று மற்றவர்களிடம் வினவினார் நஞ்சுண்டன். 


“சம்மதம்ப்பா”என்று அவரது இரண்டு மகன்களும், 


“எங்களுக்கும் சம்மதம் தான் மாமா”என அவரின் இரு மருமகள்களும் ஒப்புதல் அளித்து விட்டிருந்தார்கள். 


சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் தங்களது இரவு உணவை உண்டு விட்டுத் தத்தமது அறைக்குள் சென்றிருக்க,


“நான் நாளைக்குக் காலையில் கொஞ்சம் தாமதமாகத் தான் நம்மக் காட்டுக்கு வருவேன் விழி. நீயும், அப்பாவும் மட்டும் எப்பவும் போல் போற நேரத்துக்கே கிளம்பிப் போங்க. எனக்காக காத்திருக்காதீங்க!”என்று தன் மார்பில் சாய்ந்து கண் மூடிச் சயனித்து இருந்த மனைவியிடம் தெரிவித்தான் திருவாதிரன். 


அதில் தனது விழிகளைத் திறக்காமலேயே,”ம்ஹூம். சரிங்க”எனத் தன் இதழைச் சுழித்துக் கொண்டாள் பூவிழி. 


“சரி. தூங்கு”என அவளுக்கு அறிவுறுத்தி விட்டுத் தானும் உறக்கத்தை தழுவினான் அவளது கணவன். 


காலையில் எழுந்ததுமே முதல் வேளையாக,”மறு வீட்டு விருந்தும், தாலி பிரிச்சுக் கோர்க்குற சடங்கும் முடிஞ்சதும் நான் உங்ககிட்ட ஒரு விஷயத்தைப் பத்திப் பேசனும்த்தை”என்று தன் அன்னையிடம் தீர்க்கமாக கூறிய மனைவியைத் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தான் அறிவொளி. 


ஆனால் தன்னிடம் திடீரென்று இப்படி வந்து சொன்ன மருமகளிடம்,”எந்த விஷயத்தைப் பத்திப் பேசப் போறன்னு ஏதாவது ஒரு குறிப்பாவது கொடு செந்தா!”என்று கேட்டுப் பார்த்தார் ராஜகுமாரி. 


“இல்லத்தை. நான் உங்ககிட்ட அதைப் பத்திப் பொறுமையாகப் பேசனும்னு நினைக்கிறேன்”என்று அவரிடம் உறுதியாக உரைத்து விடவும், 


அதற்குப் பின் அவளிடம் பேச்சுக் கொடுக்காமல்,“சமையல் ஆட்களை வரச் சொல்லி ஆளனுப்பி ஆச்சாங்க?”எனக் கணவரிடம் விசாரிக்க, 


“அனுப்பி வச்சுட்டேன் குமாரி”என்றவரிடம், 


“நீங்களும், பூவிழியும் மட்டும் கிளம்பிக் காட்டுக்குப் போங்க. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்”என்றுரைத்தான் திருவாதிரன். 


“ஏன்? உனக்கு ஏதாவது வெளி வேலை இருக்கா?”என நஞ்சுண்டனை முந்திக் கொண்டு மகனிடம் கேட்டார் ராஜகுமாரி. 


“ஆமாம்மா. நம்மக் குடவுனைப் பார்த்துட்டு வரலாம்னுப் போறேன்”என்று அவருக்குப் பதிலளிக்க, 


“ஓஹோ! அந்தக் குடவுனை மூடி ரொம்ப மாசமாச்சே? அங்கே நீ என்னப் பண்ணப் போற?”எனக் கேட்டிருந்தார் நஞ்சுண்டன். 


“அங்கே இருக்கிற தேவையில்லாததை எல்லாம் ஒழிச்சுப் போடப் போறேன்ப்பா. அதான்”என்றவனுக்கு, 


“நல்லவேளை நீயாவது அதை ஞாபகம் வச்சு வேலையை ஆரம்பிக்கிறியே! சந்தோஷம்! போயிட்டு வா”என்று அனுமதி அளித்து விட்டார்கள் அவனது பெற்றோர். 


ஆனால் தனது கணவனின் வாய்மொழியைக் கேட்டு அவனை விழிகள் இடுங்கப் பார்த்தாள் பூவிழி. 


அதை உணர்ந்து கொண்டு,”நான் போய் அதை முடிச்சிட்டு வந்துட்றேன்”என்று அவளிடம் அழுத்தமாக கூறி விட்டு, அவளைத் தனது தந்தையுடன் காட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு வேறொரு வண்டியில் ஏறித் தங்களது கிடங்கை நோக்கிப் பயணமானான் திருவாதிரன். 


                         - தொடரும்


இந்தக் கதையின் அடுத்த பதிவு திங்களன்று பதிவிடப்படும் நண்பர்களே 🖤

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...