முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருதனின் பூவிழியே - 27

 


உடனே அவரிடம் பூவிழி மயக்கம் போட்டு விழுந்ததும் அவளைத் தாங்கிப் பிடித்த திருவாதிரனிடம், தான் பேசிய வார்த்தைகளைச் சொல்லி விட்டு அதற்கு அவன் கோபப்பட்டு அவனது மனைவியிடம் மன்னிப்புக் கேட்குமாறு தன்னிடம் கட்டளையிட்டு மன்னிப்பும் கேட்க வைத்து விட்டதை விவரித்து முடித்திருந்தார் முருகையன். 


அதைக் கேட்டுக் கொதித்து எழுந்து,”ஒஹ்! இந்தளவுக்குப் போயிட்டானா? அந்தப் பூவிழியை இந்த ஊரில் இருந்து வெளியேத்த என்ன வேணும்னாலும் செய்ன்னு நான் தான் உங்கிட்ட முன்னாடியே சொன்னேனே! உனக்குத் தான் கூறு பத்தலை! இல்லைன்னா தான் நீ எப்பவோ இந்த வேலையை முடிச்சு இருந்து இருப்பியே!”என்று அவரைக் கேலி செய்து பேசினார் நஞ்சுண்டன். 


அதில் முருகையனின் கோபம் முழுவதுமாகப் பூவிழியின் மீது திரும்பியது. 


அன்று மாலையே அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்று தனது வன்மத்தை அவளிடம் முழுமையாக கக்கி விடுவதற்கான நேரத்திற்காக காத்திருந்தார். 


அதேபோல் தனது விசுவாசிகளை அழைத்து அவர்களிடம் அந்தப் பூவிழியைத் தங்களது முதலாளிக் குடும்பம் அவர்களில் ஒருத்தியாக இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை உரைத்து விட்டு அவளை எப்படியாவது இந்த ஊரிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினார் முருகையன். 


“ஐயா! என்ன தான் நம்ம முதலாளி நமக்கு இப்படி ஒரு அதிகாரம் கொடுத்தாலும் கூடப் பூவிழி நம்மத் திரு ஐயாவோட பொண்டாட்டி! அதனால் கொஞ்சம் யோசிச்சு இதைப் பொறுமையாகச் செய்யலாமுங்க ஐயா”என்று பவ்யமாக கூறினான் அந்த விசுவாசிகளில் ஒருவன். 


அதில் உடனே அவனது சட்டையைப் பற்றிக் கொண்டு,”ஏலேய்! அப்படி எல்லாம் என்னால் பொறுமையாக இருக்க முடியாது! கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி அவ குடும்பத்தோட எங்கிட்ட வந்து பயந்து, பணிஞ்சுக் கூலிக்காக நின்னுட்டு இருந்தவ இப்போ என்னடான்னா பெரிய வீட்டோட மருமகளாக ஆனதுக்கு அப்பறம் அவங்களை வச்சே என்னை எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தி இருக்கிறாள்! நம்மப் பெரிய ஐயாவோட பையனாக இருக்கிறதால் அந்தப் பொடிப் பையனை என்னால் ஒன்னும் பண்ண முடியாது! ஆனால் அந்தச் சிறுக்கி மவள ஏதாவது செய்யனும்னு எனக்குத் துறுதுறுன்னு இருக்கு! உங்களால் முடியும்னா சொல்லுங்க! இல்லைன்னா நான் வேற யாரையாவது வச்சு இதைச் செஞ்சிக்கிறேன்”என்று அவர்களது தன்மானத்தை தூண்டி விட்டார் முருகையன். 


அதைக் கேட்டுத் தாங்களும் தங்களது தன்மானம் அடி வாங்கியதை உணர்ந்து விடவும்,


“அதெல்லாம் வேண்டாமுங்க ஐயா! நாங்க யோசிச்சு செய்யலாம்னுத் தான் சொன்னோம். அதுக்காக இதைச் செய்ய மாட்டோம்னு சொல்லவே இல்லை! அதனால் இன்னைக்கே இதைச் செஞ்சி முடிச்சு உங்க மனசைக் குளிர வைக்கிறோம்!”என்று அவரிடம் உறுதி அளித்து விட்டு அங்கேயிருந்து சென்றார்கள் அந்த இருவரும். 


அதைக் கேட்டு வன்மத்துடன் சிரித்துக் கொண்டார் நஞ்சுண்டன். 


இதே சமயம் உணவை உண்டு முடித்து விட்டுத் தனது கைகளையும், உணவுப் பாத்திரத்தையும் கழுவி வைத்து விட்டுக் கணவனிடம் வந்தாள் பூவிழி. 


“சாப்பிடாமல் இருந்தால் எல்லா சத்தும் போய் நீ ரொம்ப சோர்ந்து போயிருவ! அதுக்கப்புறம் நீ இவ்வளவு நாளாகச் சேர்த்தா வச்சிருந்த உன் உடம்போட வலிமைத் தான் உன்னை விட்டுக் கொஞ்சம், கொஞ்சமாகப் போயிடும்! அதைக் கவனத்தில் வச்சுக்கிட்டு இனிமேல் இப்படி நடந்துக்காமல் இரு!”என்று அவளுக்கு அறிவுரை வழங்கினான் திருவாதிரன். 


கணவனின் வார்த்தைகள் தன்னைச் சுட்டாலும் கூட அவன் கூறியதும் சரியே என்றப் புரிதலில் அதை ஆமோதிக்கும் விதமாக,”ம்ஹ்ம்”என்றிருந்தாள் பூவிழி. 


“இப்போ போய் வேலையைப் பாரு. மதியச் சாப்பாட்டையும் நம்ம மூனு பேருக்கும் இங்கேயே வரவழைச்சிட்றேன்”எனக் கூறி அவளை அனுப்பி வைத்து விட்டுத் தன் அலுவலக வேலையில் இறங்கினான். 


உடனே தானும் தனது வயிற்றுக்கு உணவு ஈய்யப்பட்டதால் முன்பை விட இப்போது கொஞ்சம் உடலில் பலம் சேர்ந்திருக்கச் சுறுசுறுப்பாகத் தன்னுடைய வேலையைப் பார்க்கலானாள் அவனது மனைவி. 


மதியச் சாப்பாட்டை இங்கேயே வரவழைத்து விடுவதாகத் தன் தந்தையிடமும் அறிவுறுத்தி விட்டிருந்தான் திருவாதிரன். 


“சரி”என அவனிடம் மொழிந்தார் நஞ்சுண்டன். 


அதேபோல் அன்று மதிய உணவை வீட்டிலிருந்து வரவழைத்து அலுவலக அறையிலேயே உட்கார்ந்து உண்டு முடித்திருந்தார்கள் மூவரும். 


தங்களது வீட்டில் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து தங்களுக்கு இணையாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் செந்தாழை மற்றும் பூவிழியின் மீது ஏற்கனவே வன்மத்தில் இருந்த நஞ்சுண்டனுக்கு இப்பொழுது தங்களது அலுவலக அறையிலும் தங்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டப் பூவிழியைக் கண்டு நஞ்சுண்டனின் விழிகள் குரோத்துடன் நோக்கியது. 


அன்றைய மாலை நேரத்தில் நஞ்சுண்டனிடம் தனது திட்டத்தைக் கூறி அவரது இளைய மகனை அவர்களது மற்றொரு நிலத்திற்குக் கூட்டிச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளவும், உடனே அவரும் அதை அப்படியே செய்து விட்டார். 


அதே சமயம், தன் விசுவாசிகளிடம் தன் மனைவியைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்தி விட்டுத் தான் தன் தந்தையுடன் சென்றிருந்தான் திருவாதிரன். 


அதே சமயத்தில் பூவிழியை ஆட்கள் அதிகம் இல்லாத பகுதிக்கு அனுப்பி அங்கேயிருக்கும் மரங்களில் இருந்து பட்டைகளை அரிவாள் கொண்டு வெட்டிச் சிறு துண்டுகளாகப் போட்டு வைக்குமாறு வேலையைக் கொடுத்து அனுப்பி வைத்து விட்டு அதை தனது இரண்டு ஆட்களிடமும் தெரிவித்து அவர்களை அவளிடம் சென்று அவளை ஏதாவது செய்து பயமுறுத்துமாறு வலியுறுத்தி அனுப்பி விட்டு அவர்களிடம் இருந்து தனக்குச் சாதகமான செய்தி வரும் வரையிலும் காத்திருக்கலானார் முருகையன். 


அதே சமயம் அவரின் கட்டளைக்கு இணங்கிப் பூவிழியிடம் சென்று,”என்னம்மா பூவு! வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு? எல்லாம் சௌகரியமாக இருக்கா?”என்று கேட்டான் இருவரில் ஒருவன். 


அதில் அவளுக்கு ஏதோ தவறாக உள்ளது என்று உள்ளுணர்வு உரைத்தாலும் கையிலிருந்த அரிவாளை இறுகப் பிடித்துக் கொண்டு அவர்களை நோக்கி, 


“ரொம்ப சௌகரியமாக இருக்கு! நீங்க ஏன் அண்ணாத்தை திடீர்னு எங்கிட்ட இதையெல்லாம் விசாரிச்சிட்டு இருக்கீய?”என அழுத்தமான குரலில் அவர்களிடத்தில் வினவினாள் பூவிழி.


“அதுவா? உனக்கு இந்த வேலைத் தோதாக இல்லைன்னா வேற ஏதாவது நல்ல தோதான வேலையைக் கொடுக்கலாம்னுத் தான் கேட்க வந்திருக்கோம்”என்றான் மற்றொருவன்.


“எனக்கு இதுவே போதும்ங்க அண்ணாத்தைங்களா! நீங்க என்னப் பண்றீங்க, என் வேலையைத் தொந்தரவு பண்ணாமல் இங்கேயிருந்து கிளம்புங்க”என அவர்களுக்கு அறிவுறுத்த, 


“அப்படியா? ஆனால் நாங்க உன்னோட வேலை எப்படி இருக்குன்னுப் மேற்பார்வைப் பார்க்க வந்திருக்கோம்! நீ என்னடான்னா எங்களையே கேள்விக் கேட்கிற? நீ இங்கே வேலை தானே செய்ற? நீ என்னமோ இதோட முதலாளி மாதிரி தெனாவெட்டாகப் பேசிட்டு இருக்கிற!”என்று அவளிடம் எகத்தாளமாக கூறியவனிடம், 


“சடையன் அண்ணே! நானும் உங்களுக்கு முதலாளியம்மா தான்! அதனால் அதுக்கான மரியாதையையும் நீங்க ரெண்டு பேரும் எனக்குக் கொடுத்து தான் ஆகனும்!”என்றாள் உறுதியாக. 


அதில் அந்தச் சடையன் என்பவனுக்கும், அவனது தோழனான விருமன் என்பவனுக்கும் கோபம் தலைக்கேறி விட்டிருந்தது.


“ஏய்! நீ என்னமோ முறை வாசல் அந்த வீட்டுக்குள்ளே போய் திரு ஐயாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரில்ல ரொம்பச் சலம்பிக்கிட்டு இருக்கிற! நீயும், உந்தங்கச்சியும் அந்த வீட்டுக்கு மருமகளாக ஆகிறதுக்கு என்னென கைங்கர்யம் பண்ணீங்கன்னு எங்களுக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? இன்னும் கொஞ்சம் மாசத்துலயே திரு ஐயாவுக்கும், அறிவு ஐயாவுக்கும் நீங்க ரெண்டு பேரும் கசந்துப் போயிடுவீங்க! அதுக்கப்புறம் உங்களுக்கு ஏதாவது வேலை வேணும்னா அக்காவும், தங்கச்சியும் எங்ககிட்ட வாங்க. நாங்க உங்களுக்கு நல்ல வேலையாகப் போட்டுத் தர்றோம்!”எனத் தன் வாயைக் கோணலாக வளைத்து அவளிடம் தகாத வார்த்தைகளை உதிர்த்தான் விருமன். 


உடனே அதில் தனது தன்மானமும், சுயமரியாதையும் வெகுவாக சீண்டப்பட்டு விடவும், தனது கையில் பிடித்திருந்த அரிவாளை அவர்களின் முன்பாக நீட்டி,”இங்கே பாருங்க அண்ணாத்தைங்களா! ஒழுங்கு மரியாதையாக இங்கேயிருந்து போயிருங்க! இல்லைன்னா, இதாலே உங்க கழுத்துல ஒரு கோடு இழுத்தேன்னு வச்சுக்கோங்களேன்! அப்பறம் உங்களோட இரத்தம் இந்த மண்ணுத் தரையில் வீணாகப் போயிடும்”என அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தாள் பூவிழி. 


“ஐயோ! எங்களுக்கு ரொம்பப் பயமாக இருக்கும்மா! நீ பாட்டுக்கு அந்த அரிவாளை வச்சு எங்களை ஏதாவது செஞ்சிடப் போற!”என்று போலியான பயத்தை வெளிப்படுத்தி அவளைக் கேலி செய்தான் சடையன். 


“ஆமாடே! நாம ரெண்டு பேர் இருந்தாலும் கூட இவ ஒத்தை ஆளாக இப்படி திமிராகப் பேசிட்டு இருக்கிறாள் பாரேன்! அதைப் பார்த்து எனக்கும் பயத்துல கால் உதறுது!”என்று அவருடன் சேர்ந்து தானும் அவளைக் கிண்டலடித்தான் விருமன். 


“ப்ச்! எனக்கு இப்படி சும்மா நின்னுட்டுக் கதைப் பேசுவது பிடிக்கவே பிடிக்காதுங்க அண்ணே! அதனால் நீங்க கொஞ்சம் அங்கிட்டுப் போங்களேன்”எனச் சலிப்புடன் அவர்களுக்கு வலியுறுத்தினாள் பூவிழி. 


அதைக் கேட்டதும்,”நாங்க அங்கிட்டுப் போக வரலை. உன் கிட்டக்கத் தான் வரப் போறோம்!”என்று தாங்கள் இருவரும் அவளை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்து வந்தார்கள். 


அப்போது தனது பிடியில் இருந்த அரிவாளை அவர்களை நோக்கி நீட்டிக் கொண்டே அவர்களை எதிர்க்கத் தயாராக இருந்தவளை இகழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டே அவளுக்கும், தங்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் கொஞ்சம், கொஞ்சமாக குறைத்துக் கொண்டிருந்தனர் சடையன் மற்றும் விருமன். 


அப்போது,”இங்கே என்ன நடக்குது?”என அவர்கள் பின்னாலிருந்து குரல் கேட்டது.


அதில் சட்டென்று அந்தக் குரல் வந்த திசையைப் பார்த்தார்கள் இருவரும். 


அங்கு ஆஜானுபாகுவாக ஐந்து ஆண்கள் நின்றிருந்தனர். 


அவர்களைக் கண்டுத் திடுக்கிட்டுப் போய் விட்டார்கள் சடையன் மற்றும் விருமன். 


அதேபோல், தானும் இந்த ஐந்து பேரின் திடீர் வருகையைக் கண்டுக் குழம்பிப் போனாள் பூவிழி. 


அந்த ஐவரையும் பார்த்து பூவிழியிடம் அடாவடி செய்து கொண்டிருந்த இருவரும் வியர்த்து வழிந்தார்கள். 


“என்னக் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை!”என வினவினான் அவர்களில் ஒருவன். 


“அது வேலை சரியாக நடக்குதான்னு மேற்பார்வைச் செய்ய வந்தோம்! நீங்க என்ன விஷயமாக இந்தப் பக்கமாக வந்திருக்கீங்க?”என்று பம்மிய குரலில் கேட்டான் சடையன்.


“நாங்களும் நீ சொன்னக் காரணத்துக்காகத் தான் இங்கே வந்திருக்கோம்!”என்றிருந்தான் அந்த ஐவரில் ஒருவனான சீலன் என்பவன்.  


“அப்படியா? எங்களுக்கு இந்த விஷயம் தெரியாதே?”என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனிடம் வினவினான் விருமன். 


“உங்க ரெண்டு பேரையும் மேற்பார்வை வேலைக்கு நியமிச்சு இருக்கேன்னு முருகையன் அண்ணனும் எங்ககிட்ட சொல்லலையே!”என்று கடுமையான குரலில் கேட்டிருந்தான் மற்றொருவனான பூதபதி.


ஆனால் இவர்கள் ஐவரும் தங்களது காட்டில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாகத் தெரிந்திருந்தாலும் கூட, இவர்கள் எப்படி இங்கே சரியான நேரத்திற்கு வந்துள்ளார்கள் என்றக் கேள்வியைத் தன் முகத்தில் தாங்கிக் கொண்டு தன் முன்னால் நடந்து கொண்டிருக்கும் உரையாடலைக் கூர்மையான விழிகளுடன் ஏறிட்டுக் கொண்டு இருந்தாள் பூவிழி. 


                                   - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...