அதை இனம் கண்டு கொண்டு அவனைப் பார்த்து விரக்தியாகப் புன்னகைத்து விட்டு,”அவங்களைக் காணலையே?”எனக் கங்காதரனின் பெற்றோரிடம் விசாரித்தாள் பரிபூரணி. “அவ ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்றா. அவளுக்கு அதிகமாக லீவ் கிடைக்காது. அதான், அவளால் இன்னைக்கு வர முடியலை! வாரக் கடைசியில் வருவாள்”என அவளுக்குப் பதிலளித்தார் ருக்மணி. “ஓஹ். சரிங்க மேம்”என்றதுமே, “உங்கப்பாவும் ஏதோவொரு சாஃப்ட்வேர் கம்பெனியில் தான் வேலை செய்றார்ன்னுச் சொன்னியேம்மா. அதோட பேரு என்ன?”என்று பரிபூரணியிடம் கேட்டிருந்தார் சீராளன். உடனே அவருக்குத் தன் தந்தை வேலை பார்க்கும் மென்பொருள் கம்பெனியின் பெயரைச் சொல்லவும், அதைக் கேட்டதும் சொக்கநாதன் மற்றும் சைலபுத்திரி மற்றும் கங்காதரனைப் போலவே சீராளனும், ருக்மணியும் அதிர்ச்சியில் அவளை விழி விரித்துப் பார்த்தார்கள். அதில் தர்ம சங்கடமாகிப் போனது பரிபூரணிக்கு. அதை அவதானித்து விட்டு,”அது அவங்க அப்பா செய்ற வேலை! ஆனால் இவங்க தனக்குன்னு ஒரு அடையாளம் கிடைக்கனும்னு நினைச்சு இந்த வேலையை ஒரு சேவையாகச் செய்யனும்னு விருப்பப்பட்டு நம்ம வீட்டுக்கு வேலைக்கு வ...
Writer